என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahadeepam"

    • கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் உள்ள 40 அடி உயர பீடத்தில் எண்ணெய் கொப்பரையில் 50 கிலோ நெய் மற்றும் திரி வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    பாலமுருகன் 3 முறை கோவிலின் வெளிப்பி ரகார வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான இந்து நாடார் உறவின் முறை, இந்து நாடார் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.
    • நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    திருச்ச

    கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக ஏற்கனவே தீபத்திரியை தயாரிக்கும் பணிகளில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 மீட்டர் நீளமுள்ள திரிகள் தயாரிக்கப்பட்டன. துணி நூல்கள் வைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதனை உருண்டையாக வடிவமைத்து அதனை கட்டி ஒவ்வொன்றாக அடுக்கி பெரிய துணிகள் வைத்து அதைக் கட்டினர்.

    பின்னர் உச்சி பிள்ளையார் கோவிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள தீபம் ஏற்றும் இடத்தில் அதை வைத்தனர். தீபம் ஏற்றுவதற்கான கொப்பறையில் சுமார் 700 லிட்டர் இலுப்ப எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய்கள் ஊற்றப்பட்டன. சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த எண்ணெயில் அந்த திரிகளை ஊற வைக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் இங்கு தீபம் ஏற்றப்படும். இதற்கான பணிகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    • அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
    • ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.

    ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.

    அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.

    இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.

    • தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    • 74 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டது
    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மாலையில் கோவில் முன்பு 64அடி உயர சிவலிங்கம் மீது அர்ததநாரீஸ்வரர் முன்னிலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 74 அடி உயர தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக காலையில் பரணிதீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்கள் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்

    ஊட்டி, 

    ஊட்டி எல்கில் பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு உலக புகழ் பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, 40 அடி உயரத்தில் முருகப்பெருமான் வெளிப்புறத்தில் கம்பீரமாக வேலூன்றி காட்சி அளிக்கிறார்.

    மேலும் இந்த கோவிலில் முருகப்பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் வகையில் 108 படிகள் ஆகியவை உள்ளன.

    கார்த்திகேயன் பிறந்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.

    அதன்படி இந்த திருத்தலம் கார்த்திகை தீபத்திருநாளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற தலம் ஆகும்.

    ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை நேரத்தில் திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளை நடத்தினர்.

    • அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷம் முழுங்க மகாதீபம் ஏற்றப்பட்டது.

    முன்னதாக, கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

    • மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறை அருள்பாளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.
    • கோயில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாளித்தார்.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் மலையுச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அருணாச்சலேஸ்வரர் கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் நெய்யுடன் 300 மீட்டர் துணியாலான திரி கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

    2668 அடி உயரம் கொண்ட கோவில் மலை மீது மகா தீபத்தில் ஜோதி வடிவிலான அண்ணாமலையாரை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதற்கிடையே, திருவண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டதால் கோயில் வளாகத்தில் அர்த்தனாரீஸ்வரர் ஒரு நிமிடம் பொதுமாடத்தை சுற்றி வந்தார்.

    மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறை அருள்பாளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மற்ற மலைக் கோவில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.

    கோயில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாளித்தார்.

    மலையுச்சியில் மகாதீபம் ஏற்றும்போது கோயில் வளாகத்தில் கொடி மரத்திற்கு முன் பெரிய அகல் விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது.

    அதன்படி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் 40 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அறுபடை வீடுகளில் முதன்மையானதான திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநாயகர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிகர நிகழ்ச்சியாக மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதுபோன்று, திருத்தணியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    ×