என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mahatma Gandhi"
- வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது.
- ஆஸ்திரேலியாவில் மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாடுகள் பயணத்தின் அங்கமாக முதலில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது என்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் ரோமா சாலை பார்க்லேண்ட்ஸில் உள்ள மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் மதநல்லிணக்க செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
EAM Dr S Jaishankar tweets, "Offered my tribute this morning to Mahatma Gandhi at Roma Street Parklands in Brisbane. His message of peace and harmony resonate through the world."(Pic: EAM/X) pic.twitter.com/Ebz8cyWIsw
— ANI (@ANI) November 4, 2024
- சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி.
- ராகுல் காந்தி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் பேசி வருகிறார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர்[Sirmaur] மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய நட்டா, சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி. எனவே சுதந்திரம் கிடைத்த பின்னர் இனியும் அதற்கான தேவை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றே காந்தி விரும்பினார்.
ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையினால் கட்சியை இடது பக்கத்தில் இருன்டயது வலது பக்கமாகவும், வலம் இருந்து இடமாகவும் அவர்கள் நகர்த்திக்கொண்டுள்ளனர்.
இப்போதெல்லாம் ராகுல் காந்தி நகர்ப்புற [urban] நக்சல் மொழியிலிருந்து முன்னேறி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது
- தேசத்திற்கு தந்தைகள் கிடையாது, மகன்கள் உள்ளனர்.
- பாரத அன்னையின் இந்த மகன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அக்டோபர் 2-ந்தேதியான நேற்று காந்தி பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
லால் பகதூர் சாஸ்திரியின் 120-வது பிறந்தநாளையொட்டி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரானாவத் மரியாதை செலுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "தேசத்திற்கு தந்தைகள் கிடையாது, மகன்கள் உள்ளனர். பாரத அன்னையின் இந்த மகன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
நேற்று மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கங்கனா ரனாவத் இவ்வாறு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தி நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதை மனதில் வைத்துதான் கங்கனா ரனாவத் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது.
ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்தில் இருந்து விலகி நிற்பதாக பா.ஜ.க. தெிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
- ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் காலை முதலே நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#WATCH | Delhi: PM Narendra Modi pays tributes to Mahatma Gandhi on the occasion of his birth anniversary, at Rajghat. pic.twitter.com/fKz6Pg3smt
— ANI (@ANI) October 2, 2024
முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#WATCH | Delhi: Congress leader and Lok Sabha LoP Rahul Gandhi pays tribute to former PM Lal Bahadur Shastri at Vijay Ghat on his birth anniversary pic.twitter.com/IBRHBy20ub
— ANI (@ANI) October 2, 2024
டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
- மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- கேரள கவர்னரின் துண்டில் பட்டு எரிந்த தீயை அருகிலிருந்தவர் உடனடியாக அணைத்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார்.
ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புகைப்படத்திற்கு அருகில் இருந்த விளக்கில் இருந்து கவர்னரின் துண்டில் தீப்பிடித்தது. இதை உடனடியாக கவனித்த அதிகாரிகள் தீயை அணைத்தனர்.
பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கவர்னரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இச்சம்பத்தால் கவர்னருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் நிகழ்வின் நிறைவு விழாவை அவர் தொடங்கி வைத்தார்.
#arifmohammadkhan #keralagovernor கழுத்தில் கிடந்த துண்டால் கதிகலங்கிய ஆளுநர்.. அதிர்ஷ்டவசமாக தப்பினார் pic.twitter.com/Wu1JCOcp7t
— Thanthi TV (@ThanthiTV) October 1, 2024
- மோடியுடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர்.
- காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர். கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.
இது மோடியின் உலகத் தலைவர் பிம்பத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்று முன் தினம் நடந்த என்.டி.ஏ கூட்டத்திலும் மோடி இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று [ஜூன் 9] இரவு 7.15 மணி அளவில் மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தற்போது டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் நினைவிடமாக சதைவ் அடலுக்கு சென்று அதன்பின்னர் தேசிய போர் நினைவுச்சின்னம் அமைத்துள்ள இடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
- 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை
- உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்.
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"மிஸ்டர் மோடிஜி நீங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் எங்கள் மகாத்மாவை யாரென்று அறிந்திருப்பீர்கள். தயவு செய்து உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை.
- புகழ்பெற்ற ஏராளமானவர்கள் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டவர்கள்.
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே 1909 ஆண்டு - ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய், 1920 ஆண்டு - வியட்நாம் புரட்சியாளர் ஹோசிமின், 1931 ஆண்டு - அறிவியல் உலகின் அணையா விளக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1931 ஆண்டு - ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர் சார்லி சாப்ளின், 1940 ஆண்டு - நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவரும், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவருமான நெல்சன் மண்டேலா, 1940 ஆண்டு - ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் விடிவெள்ளியாக, நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தவர் மார்ட்டின் லூதர் கிங்,1950 ஆண்டு - தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி வரலாற்று படைப்பை பதிந்த அமெரிக்க பத்திரிகையாளர் லூயிஸ் பிஷ்ஷர் மற்றும் இவர்களை போன்ற புகழ்பெற்ற ஏராளமானவர்கள் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டவர்கள். அவரை பின்பற்றியவர்கள். போற்றியவர்கள்.
மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவரை குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தந்தையின் மாண்பை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய மோடி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா?
- மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி படத்தை (1982) எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை" என்ற பிரதமரின் கருத்து எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு (இறப்பு 1955) 'காந்தி' படம் வெளிவந்த பிறகுதான் (1982) மகாத்மா காந்தியைப் பற்றி தெரியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.
- ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை
- தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது.
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மகாத்மா காந்தியைப் பற்றி அறிய 'முழு அரசியல் அறிவியல்' படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றி மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
- நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆன்மா. கடந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது நமது பொறுப்பு அல்லவா?
தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நிகரானவர் மகாத்மா காந்தி.
காந்தி மூலமாக இந்தியா கவனம் பெற்று இருக்க வேண்டும். காந்தியின் தத்துவம் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"1982 க்கு முன் மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லும் பதவி விலகும் பிரதமர் எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை.
மகாத்மாவின் பாரம்பரியத்தை யாராவது அழித்திருந்தால், அது பதவி விலகும் பிரதமரே. வாரணாசி, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய நிறுவனங்களை அவரது சொந்த அரசாங்கம் அழித்துவிட்டது.
மகாத்மா காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான். நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.
2024 தேர்தல் மகாத்மா காந்தி பக்தருக்கும் கோட்சே பக்தருக்கும் இடையே நடைபெற உள்ளது. பதவி விலகும் பிரதமர் மற்றும் அவரது கோட்சே பக்தர் கூட்டாளிகளின் தோல்வி உறுதியாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது.
- இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர்.
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆன்மா. கடந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது நமது பொறுப்பு அல்லவா?
தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நிகரானவர் மகாத்மா காந்தி.
காந்தி மூலமாக இந்தியா கவனம் பெற்று இருக்க வேண்டும். காந்தியின் தத்துவம் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2, அன்று குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த காந்தி, இந்தியாவின் "தேச தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக திகழ்ந்தவர். மகாத்மா காந்தி 1937 மற்றும் 1948 க்கு இடைப்பட்ட காலத்தில் நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
2007 ஆம் ஆண்டில், ஐநா சபை காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை 'சர்வதேச அகிம்சை தினமாக' அறிவித்தது. காந்தி 1969 முதல் இந்திய நாணயத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்.
மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோர் தங்களது போராட்டத்திற்கு காந்தியின் வரலாறு உத்வேகம் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.