என் மலர்
நீங்கள் தேடியது "man arrested"
- கதவை திறக்க நேரம் ஆனதால் ஆத்திரம் அடைந்தார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள செங்கப்ப வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (வயது 58). விக்ரமன் தினசரி மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்க மாக பூட்டி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு பின்னர் சுசிலா கதவை திறந்தார்.
நீண்ட நேரத்துக்கு பின்னர் கதவை திறந்ததால் ஆத்திரம் அடைந்த விக்ரமன் தனது மனைவியை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினார்.
பின்னர் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுசிலாவின் வலது கையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்கு விக்ரமன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சுசிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய விக்ரமனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- விஜய் இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிராக பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் நடத்தி வருகிறார்.
- குனியமுத்தூர் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை அடுத்த பி. கே. புதூர் அம்மன் காலணியை சேர்ந்தவர் விஜய் (24). இவர் இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிராக பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொழில் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று அப்பகுதியில் இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சுகுணாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், நந்தகுமார் ஆகிய 2 பேர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக உரசும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில், ராஜேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய் மீது கிழித்தார். சம்பவம் அறிந்த குனியமுத்தூர் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர்களை குறி வைத்து கள்ளச்சாராயம் விற்கும் கும்பல் உலவி வருகிறது.
- சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டா ட்டத்தை யொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரத்ெதாடங்கி உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர்களை குறி வைத்து கள்ளச்சாராயம் விற்கும் கும்பல் உலவி வருகிறது.
அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கலால்துறை துணை ஆணையர் அபுஆபிரகாம் மாவட்டத்தில் சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் வண்டிப்பெ ரியாறு கலால்துறை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
குமுளி அருகே அமராவதி பகுதியில் அச்சன்குஞ்சு (வயது 48) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற வாலிபர் பணம் பறிக்க முயன்றுள்ளார்.
- விடுதியில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு வாலிபரை பிடித்து தரமணி போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை:
சென்னை தரமணியை அடுத்த திருவேங்கடம் நகரில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து, அங்கு தங்கி இருப்பது போல நடித்து அனைவரிடமும் நன்றாக பேசியுள்ளார். முதல் தளத்தல் தங்கி இருப்பவர்களிடம் சென்று பேச்சு கொடுத்து அவர் தான் விடுதியில் புதிதாக சேர்ந்துள்ளேன். எனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூ. 5 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும். எனது "கூகுள் பே" செயல்படவில்லை. நீங்கள் "கூகுள் பே"யில் பணம் அனுப்பினால் நான் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து தருகிறேன் என்று பேசியுள்ளார்.
இதனை நம்பிய விடுதியின் முதல் தளத்தில் தங்கி இருந்தவர்கள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 5 ஆயிரம் அனுப்பி உள்ளனர்.
இதனை தொடர்ந்து கீழ் தளத்தில் தங்கி இருந்தவர்களிடமும் புதிதாக வந்துள்ளேன். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்' என நைசாக பேசி அவர்களிடமும் ரூ.5 ஆயிரம் "கூகுள் பே" மூலம் பறித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தங்கும் விடுதியில் வசிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமாம். நான் ஏ.டி.எம். வாசலில் நிற்கிறேன். முன்னதாக அனுப்பிய அதே "கூகுள் பே"விற்கு ரூபாய் 40,000 அனுப்பி விடுங்கள். பணத்தை உடனே எடுத்து வருகிறேன் என கூறி உள்ளார். அதையும் நம்பிய விடுதியில் தங்கி இருந்த 4 பேர் ரூபாய் 40,000 அனுப்பி உள்ளனர்.
நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர் வராததால் சந்தேகமடைந்த அவர்கள் விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த அந்த மோசடி நபரின் புகைப்படத்தை மற்ற விடுதிகளில் தங்கி உள்ள நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கையாக இருக்க கூறினர். இந்த மோசடி சம்பவம் குறித்து தரமணி போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த வாலிபர் அதேபோல் பேசி மோசடி வலைவிரித்து பணம் பறிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அவரை பிடித்து தரமணி போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார் (22) என்பதும் அவருடைய கூகுள் பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது இதேபோன்று பலரிடம் பொய்யாக பேசி மோசடி செய்து பலரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. பின்னர் சச்சின்குமார் மீது வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே பலியானார்.
- கரூரில் பதுங்கி இருந்த சந்தோசை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை குனியமுத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 29). பெயிண்டர்.
இவரது மனைவி தஸ்லிமா. இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
ரகுமத்துல்லா மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று இரவு ரகுமத்துல்லா செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு தனது நண்பர் மணிகண்டன்(23) என்பவருடன் சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களது அருகே செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷின் நண்பர் ஒருவரது செல்போன் காணாமல் போனது. இந்த செல்போனை ரகுமத்துல்லா எடுத்திருக்கலாம் என்று சந்தோஷ் அவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த ரகுமத்துல்லாவை ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார். தடுக்க முயன்ற மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பின்னர் அங்கிருந்து சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்தோசை தேடி வந்தனர். கரூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
- நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
ஆரணி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் கடன் வாங்கி, வார தவணையில் செலுத்தி வரும் காஞ்சிபுரம் உப்பேரிகுளத்தை சேர்ந்த அபிபுல்லா என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது அபிபுல்லா தான் செலுத்தவேண்டிய ரூ.1,340-க்கு பதிலாக ரூ.600 மட்டும் கொடுத்தார்.
இதற்கு கணேசன் முழு பணமும் கொடுத்தால்தான் செல்வேன். இல்லையென்றால் நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அபிபுல்லா வீட்டுக்குள் சென்று தனது மகன் இலியாஸிடம் தெரிவித்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த இலியாஸ், நிதி நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார் இலியாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
- குட்கா விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.
ஆவடி ஆணையர் சங்கர் உத்தரவின் படி இணை ஆணையர் விஜயகுமார் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் குமரேசன் தலைமையில் மீஞ்சூர் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் மீஞ்சூர் பகுதியில் தீவிர சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்த போது சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த தவ்லத் கான் மீஞ்சூர் குடோனில் பதுக்கி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
பின்னர், குடோனில் பதுக்கி இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா, புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் வாலிபரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர்.
கூடலூர்:
மூணாறு அருகே உள்ள ராஜா காடு பழைய விடுதி காலனியைச் சேர்ந்தவர் ஜோய் மகன் சனீஸ் (வயது 27). இவரது வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடி ப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அதிடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் தோட்டத்தில் 246 ெ ச.மீ நீீளமுள்ள ஒரு கஞ்சாசெடியும், 66 செ.மீ நீளமுள்ள மற்றொரு கஞ்சா செடியையும் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குடும்ப தகராறில் கணவன் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றார்.
- புகாரின்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் ஓடைத்தெரு வை சேர்ந்தவர் உதய குமார்(31). இவரது மனைவி ராஜலட்சுமி(28). உதய குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் அவரது சகோதரிகளை தரக்குறை வான வார்த்தை களால் திட்டி வந்துள்ளார்.
இதனை ராஜலட்சுமி கண்டிக்கவே அவர்களு க்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி உதயகுமார் கொலை செய்ய முயன்றார். ராஜலட்சுமி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.
இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.
- அப்துல்ரகுமான் பைசாபாத் அருகே உள்ள மில்கிபூரில் வசிப்பவர் என்று தெரியவந்தது.
- மத்திய புலனாய்வு அமைப்புகள் ரகுமானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன
பரிதாபாத்:
டெல்லியை ஒட்டி அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் பரிதாபாத் நகரில் 19 வயது வாலிபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அப்துல்ரகுமான் என்றும், பைசாபாத் அருகே உள்ள மில்கிபூரில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது.
ரகுமானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளுடன் ரகசியமாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் சம்பவத்தன்று பைசாபாத்தில் இருந்து பரிதாபாத்திற்கு ரெயிலில் வந்தார். அவரிடம் ஒரு நபர், 2 கையெறி குண்டுகளை வழங்கி உள்ளார்.
'ரகுமான், அந்த குண்டுகளை, தான் வசித்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மறைத்து வைத்து இருப்பதாகவும், அந்த குண்டுகளுடன் நேற்று ரெயிலில் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும்' விசாரணையில் கூறி உள்ளார்.
இதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்புகள் ரகுமானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. சதித்திட்டத்துடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி உள்ளனர்.
- இடத்தை காலி செய்ய மறுத்தவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் நில அபகரிப்பு புகாரில் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காந்திநகர் வினோபா நகரை சேர்ந்தவர் முருகன்(55). இவர் வீட்டின் அருகே சுப்பிரமணி என்பவரது காலிஇடம் உள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளாக தனது வாகனங்களை நிறுத்தி வந்தார். தற்போது அந்த இடத்தை காலி செய்து தருமாறு முருகனிடம் சுப்பிரமணி கேட்டுள்ளார்.
ஆனால் அவர் இடத்தை காலி செய்ய மறுத்து கால தாமதம் செய்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் முருகன் சுப்பிரமணியின் இடத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
- தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கிய 138 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனியில் உள்ள வீட்டில் தமிழக அரசின் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.இதில் அந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கிய 138 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக மகாலட்சுமி நகரை சேர்ந்த கண்ணன் (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.