search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon"

    • உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் கலந்துகொண்டனர்
    • பயிற்சி எதுவும் இன்றி அப்துல்லா ஓடத் தொடங்கினார்

    ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்த மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்றுள்ளார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி  சாதனை படைத்தார்.

    அப்துல்லா ஓடும்போது அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர். இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடியதில்லை என்று தெரிவித்த அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    • மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.
    • மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் தொடங்கியது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தாம்பரம்- வேளச்சேரி சாலையில் முடிவுற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
    • பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார்

    உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.

     

     

    கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    • பெண்கள் உற்சாகமாக ஓடினார்கள்.
    • பெண்கள் பலர் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடினர்.

    சென்னை:

    மாரத்தான் ஓட்டம் என்றாலே பேன்ட்-டிசர்ட் அணிந்து வியர்க்க விறு விறுக்க ஓடுவார்கள். ஆனால் இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் முற்றி லும் மாறுபட்ட முறையில் பெண்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடந்தது.

    500-க்கும் மேற்பட்ட பெண்கள்... அதில் ஒருவர் கூட மேற்கத்திய உடைகள் அணிந்திருக்கவில்லை. அத்தனை பேரும் சேலை கட்டியே வந்திருந்தார்கள்.

    இல்லத்தரசிகள், பணி புரியும் பெண்கள் என கலந்து கொண்ட அனைவருமே விழாக்களில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டதுபோல் வண்ண வண்ண புடவை கட்டியிருந்தார்கள்.

    மடிசார், கண்டாங்கி, படுகர் என தங்கள் கலாச்சசாரப்படி அணிந்து இருந்தார்கள். 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் உற்சாகமாக ஓடினார்கள்.

    ஓட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்கே பெண்கள் பலர் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடியும் அசத்தினார்கள்.

    இந்த மாரத்தான் போட்டிக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரேவதி, தியா மகேந்திரன், பானுரேகா ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவர்கள் கூறும் போது, `பாரம்பரிய உடையில் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் மாரத்தான் போட்டிகள் நடத்தும் நிலையில் நாமும் நடத்தினால் என்ன என்ற எண்ணத்தில்தான் ஏற்பாடு செய்தோம்.

    இதில் கிடைக்கும் நிதி மலைவாழ் இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை பேண சானிட்டரி நாப்கின் வாங்கி கொடுக்கவும், அவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செலவிடப்பட உள்ளது' என்றார்.

    நிகழ்ச்சியில் நீதிபதி விமலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். ராதிகாபரத் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
    • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

    முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

    4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    • கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணி புதுவை கடற்கரை சாலையில் நடந்தது.

    காந்தி சிலை அருகே பேரணியை செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

    நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளையும் கையில் ஏந்திய படி சென்றனர். புதுவை அரசு மற்றும் தன்னார்வலர் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டி நகரம் முழுவதும் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

    மாரத்தான் கடற்கரை சாலை, பட்டேல் சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலையை அடைந்தது.

    போட்டியில் முதலிடம் பெற்ற 5 பேருக்கு பரிசு, கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம்
    • முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அசோக்குமார் சின்னசாமி துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பாக 4 பேர்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பராமரிப்புக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    மேலும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெ க்டர் வழங்கினார். மேலும் திருநங்கை களுக்கான பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

    இதே போல் தமிழ் வளர்ச்சி த்துறையின் சார்பில் ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    • தேனியில் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    • ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்ம னைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கொடுவிலா ர்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி லிருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
    • நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது.

    நாமக்கல்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது. இப்போட்டியினை நாமக்கல் ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்- பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொண்டி செட்டி பட்டி வழியாக அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது.

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கத்தொகை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×