என் மலர்
நீங்கள் தேடியது "Marathon Competition"
- சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
செந்துறை:
நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்துகொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்குத்தந்தை இன்னாசிமுத்து, பள்ளிதாளாளர் பிரிட்டோ, பள்ளி முதல்வர் மரிய பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் இயக்கக் கூடாது, சாலை விதிகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மராத்தான் போட்டி நடந்தது.
- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி மராத்தான் நடந்தது. வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கலாநிதி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர்.
- உலக இருதய தினத்தை முன்னிட்டு மணப்பாறையில் நடந்த மாரத்தான் போட்டியில் மழலையர் முதல் முதியோர்கள் வரை கலந்து கொண்டனர்
- 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்
திருச்சி:
இயங்க மறுக்கம் இதயத்திற்கு உற்சாகம் தருவதே ஓட்டமும், நடைபயிற்சியும் தான். மனித உடலை சீராக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நல்துணையாக இருக்கும் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டு ஓடி அசத்திய மராத்தான் போட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சிந்துஜா மருத்துவ மனை மற்றும் தியாகேசர் ஆலை முன்னாள் மாணவர்கள் சார்பில் "மணவை மராத்தான்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருளரசன், செயலாளர் அசோக்குமார், ஆலை பொது மேலாளர் சதீஸ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டரும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5, 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது. டாக்டர் கலையரசன் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் போட்டியை தொடங்கி வைத்தனர்.
21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்.
5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த கனிராஜா என்பவரும், பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த கனிஷா என்பவரும், 3 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியை சேர்ந்த ராம்பிரதி,
பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த சாதனா பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பிரிவாக நடைபெற்ற போட்டியில் மழலைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஓடியது அனைவரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்தது.
இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தங்கள் குழுவினருடன் 21 கிலோமீட்டர் முழுமையாக ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தார். தொழிலதிபர் காந்திராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மராத்தான் போட்டியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடிய போது வழிநொடுகிளும் கிராம மக்கள் சாலை ஓரங்களில் நின்று அனைவரையும் கைத்தட்டி உற்சாகமூட்டினார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆணழகன்கள் மேடையில் அனைவகுத்து நின்று தங்களின் கட்டலகை காண்பித்தனர். மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மராத்தான் போட்டி மக்களின் கவனங்களை வெகுவாக இருப்பதுடன் பாராட்டையும் பெற்றது.
- 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.
- போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வள்ளுவன் மராத்தான் போட்டி வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை உணவு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம் மற்றும் சுகன் சுதா மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்ட பந்தயம் இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாரத்தான் ஓட்டமானது புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி சென்னை சித்தூர் செல்லும் நெடுஞ்சாலை வழியாக சிப்காட், புளியந்தாங்கல் சென்று பெல் பகுதியில் முடிவடைந்தது.
இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாரத்தான் ஓட்ட பந்தயம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர்.அமர்குஷ்வாஹா. கொடியசைத்து தொடங்கி வைத்தார், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி.அ.நல்லதம்பி எம் எல் ஏ, முன்னிலை வகித்தார். மினி மாரத்தான் போட்டியில் கலெக்டர், எம்எல்ஏ, டாக்டர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் 350, பேர் கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நிதி திரட்ட வருகிற 8-ந்தேதி திருப்பூரில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அதிகாலை 5:30 மணிக்கு வாக்கத்தான் மற்றும் 6 மணிக்கு மாரத்தான் ஆகியன நடைபெறுகிறது.
திருப்பூர்:
கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புற்று நோய் சிகிச்சைக்கான அதி நவீன மையம் அமைக்கப்படவுள்ளது. இது 60 கோடி ரூபாய் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக நிதி திரட்ட வருகிற 8-ந்தேதி திருப்பூரில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.வருகிற 3-ந் தேதி வரை ஆன்லைன் வாயிலாகவும், கியூஆர் கோடு மூலமாக, புக் மைஷோ செயலியிலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கத்தான் - மாரத்தான் நடைபெறும் 8ந் தேதி சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் புற்று நோய் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு வாக்கத்தான் மற்றும் 6 மணிக்கு மாரத்தான் ஆகியன நடைபெறுகிறது.
- ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
- ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.
- பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
- 5 கி.மீ. வரை நடந்தது
நெமிலி:
நெமிலியில் உள்ள நேரு யுகேந்திரா சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டிநடைபெற்றது.
இதில் நெமிலி ஒன்றிய தலைவர் பெ.வடிவேலு, அரக்கோணம் போலீஸ் துணைசூப்பிரண்டு கிரிஷ் யாதவ் அசோக்ஆகியோர் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து மினி மாரத்தான் போட்டியிலும் கலந்து கொண்டனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க மாவட்ட பிரதிநிதி, காட்டுப்பாக்கம். தணிகைவேல் பரிசை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்த லைவர் ச.தீனதயாளன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர், பவானி வடிவேலு, அசநெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்சேகர், ஒன்றிய குழு உறுப்பினர்சங்கீதா கதிரவன், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர்ரேணுகாதேவி சரவணன், நெமிலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஆசிரியர்.வேதையா, கவுன்சிலர்.சேகர், எம்.பி.பாபு, அப்துல் நசீர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
மதுரை:
மதுரையில் 'சுற்றுச் சூழலை பாதுகாப்போம். பொது போக்குவரத்தை பலப்படுத்துவோம்' என்பதை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
திருநகரில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு இருந்து பொது பிரிவினருக்கான மாரத்தான் போட்டி தொடங்கியது. இந்த போட்டியை மதுரை எம்.பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி, பசுமலை மன்னர் கல்லூரி முன்பு தொடங்கியது. மதுரையில் நடந்த இந்த 2மாரத்தான் போட்டிகளிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை பைபாஸ் ரோடு தமிழக அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் பொது பிரிவினருக்கான மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
இதே போல பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.4ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் அழகர்சாமி, ராஜேந்திரன், கனகசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாரத்தான் ஓட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் காயத்ரி பரிசுகளை வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மகாராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் இயக்குனர் ஜெயேந்திரன் மணி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட உடற்கல்வி அலுவலர் கிருஷ்ண சக்ரவர்த்தி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்பு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
500- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம் ஜெயேந்திரா பள்ளியில் தொடங்கி அன்புநகர், பெருமாள்புரம் கார்த்திக் நர்சிங் ஹோம் வழியாக சென்று,பெருமாள்புரம் தபால்நிலையம், பெருமாள்புரம் ரெயில்வே பீடர் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்த டைந்தது.
சிறப்பு விருந்தினராக சுதர்சன் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் காயத்ரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- செங்கோட்டை ராஜ்யம் அறக்கட்டளை,தென்காசி மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி நடந்தது.
- போட்டியில், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை ராஜ்யம் அறக்கட்டளை, வனத்துறை மற்றும் அரசு நூலகம் வாசகர் வட்டம், வட்டசட்டப்பணிகுழு, தென்காசி மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 4 வயது சிறுவர்கள் முதல் 85 வயது முதியவர் வரை ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. 4 பிரிவாக மாரத்தான் போட்டி நடந்தது. முதல்போட்டியை செங்கோட்டை குற்றவியல்நடுவர் நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜா, 2-வது போட்டியை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்ஜெஸ்லின், 3-வதுபோட்டியை புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிசங்கர், 4-வதுபோட்டியை நூலக வாசகர்வட்டதலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், அவரவர் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு பொதுமக்கள் முன் வரவேண்டும்.
பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் மாணவர்களிடம் ஏற்படுத்த ப்பட்டது.இந்த போட்டியில், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு, தேசிய குற்ற விசாரணை கழகம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது.
- இதில் நிர்வாகி அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், சுனில்குமார், யாச்பவர், ராயல் சந்தோஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
குமாரபாளையம்:
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு, தேசிய குற்ற விசாரணை கழகம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் நிர்வாகி அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், சுனில்குமார், யாச்பவர், ராயல் சந்தோஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சேலம் கோவை புறவழிச்சாலை, எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியின் முன்பு தொடங்கிய மராத்தான் ஓட்டம், பள்ளிபாளையம் சாலை, அபெக்ஸ் காலனி, ஆனங்கூர் சாலை, சேலம் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வழங்கி வாழ்த்திப் பேசினார்.