என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "materials"
- ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
- அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் வடக்கு வீதியில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது.
இந்த கடையில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் திடீரென பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அஜித்குமார், சங்க செயலாளர் சரவணன், விற்பனையாளர் சிவகாம சுந்தரி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
பேராவூரணி:
பேராவூரணி தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்ககைள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தாசில்தார் சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இதில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாசில்தார் சுகுமார் பேசுகையில்:-
வடகிழக்கு பருவமழை க்காக புயல், மழை, வெள்ள த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் மழையளவு, மழை நிலவரம், மழைக்கால உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு போன்ற நிலவரங்களை உடனே மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறையினர் நீர்நிலைகள், குட்டைகள், திறந்தவெளி கிணறு போன்றவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும்.
பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிகள், சமுதாய கூடங்களை தயார்படுத்த வேண்டும்.
அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மணல் மூட்டைகள், மீட்பு பணிக்கான பவர் பம்புகள், ஜெனரேட்டர் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் வருவாய்துறை, பொதுப்பணி துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, ஊராட்சி துறை, சுகாதார துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி, திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்த குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
- பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.
சீர்காழி:
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100,க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணியை தொடங்கினர்.
பூம்புகார் பீச் மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்றவற்றை ஒவ்வொ ன்றாக எடுத்து சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் கூறுகையில்:
நம் பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்தில் சேர்மன் சாமி தலைமையில் அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
காரைமேடு ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திலும், அதனைத் தொடர்ந்து பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களிலும் அகில இந்திய அளவில் இப்பணி நடைபெற உள்ளது.
குறிப்பாக கடற்கரை பகுதியில் வீசப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி கடலில் கலந்து மீன்கள் உண்ணும் பொழுது அந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பீச் பகுதியில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
- ரூ.65 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.65,000 மதிப்பிட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் உள்ள சுந்தரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.
முன்னதாக தலைமை ஆசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதக்கத்துல்லா, முன்னாள் ஊராட்சி தலைவர் பவானி, மீனவர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பெற்றோர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பொதுத்தேர்வி ல் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், மாவட்ட அளவிலான தூய்மை பாரத எழுத்தறிவு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாஸ்ரீ-க்கும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் வழங்கிய சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் பெற்றதற்காக தலைமை யாசிரியர் நீலமேகத்திற்கும், தன்னார்வலர் மீனாம்பாள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வின் போது மனைவி இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய நாகரத்தினத்திற்கு சால்வை அணிவித்து, அவரிடம் மதுரையில் வழங்கப்பட்ட சுழற்கோப்பையை நாகாரத்தினத்திடம் வழங்கி பாராட்டினர்.
மேலும், போட்டி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நினைவு பரிசுகள் வழங்கபட்டது.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நீலமேகம் பரிசு வழங்கினார்.
முடிவில் பள்ளி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.
- சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை - அண்ணா பேட்டை காமாட்சி அம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது
திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர் முன்னதாக காமாட்சி அம்மன் பெத்தாரண்ய சுவாமி முனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.
விளக்கு பூஜை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர்
- ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
- வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 1970ம் ஆண்டு காலகட்டத்தில் ராஜ இல்லற ஜோதி என்பவர் 8-ம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.
இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் .
இந்நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் பிரபு ராஜ்குமார் தன் தாய் பயின்ற திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் விளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான மின்விசிறிகள், மின்விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் தரைவிரிப்புகள், தண்ணீர் குடம், எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான பல்வேறு பொருட்களை தமது ஜோதி அறக்கட்டளை சார்பில் கல்வி சீர்வரிசையாக வழங்க முடிவு செய்தார்.
அதன்படி ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட அறக்கட்டளை பணியா ளர்கள், விளத்தூர் மற்றும் பயரி பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சீர்வரிசை தட்டுகளுடன் பள்ளிக்கு தேவையான பொரு ட்களையும் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தியிடம் கல்வி சீர் வரிசையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசு பொருட்களும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தையல் நாயகி, உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
- வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.
அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.
இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா?
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மணத்திடல் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50) தொழிலாளி.
இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.
இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை கிளம்பியது. சிறு நேரத்தில் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கின.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது . இதில் வீடு கட்டிடம் தரைமட்டமாகியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருவையாறு தீயணைப்பு நிலையம் மற்றும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .
அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த நகை, பணம், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின . ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகியதாக கூறப்படுகிறது .
இது குறித்து போலீசார், மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக வீடு இழந்து பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்திற்கு தாசில்தார் பழனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவுதமன் ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரூ.14 லட்சத்தில் புதிய பொது விநியோக கட்டிடம் கட்டப்பட்டது.
- அத்தியாவசிய பொருட்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அருந்தபுரம் ஊராட்சி உத்தமர்குடியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் புதியதாக பொதுவிநியோக கட்டிடம் கட்டப்பட்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார்.
ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ண பிரியா விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாஆசை த்தம்பி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டிடத்தை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை வழங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹமதுரிபாயி,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, அருந்தபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் காமராஜ், ஊராட்சி சங்க நிர்வாகிகள் ஜெகத்குரு, மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருட்டுபோனது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது37). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக திருமங்கலம் நகர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை இந்த நிறுவ னத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக சாலை யோரங்களில் கம்பி, பிளாஸ்டிக் பைப்கள் வைக்கப்பட்டிருந்தன.
சம்பவத்தன்று திருமங்க லம் நகர் பகுதியில் சாலை யோரத்தில் வைக்கப்பட்டி ருந்த 1,500 மீட்டர் பிளாஸ்டிக் பைப்கள், 30 இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இதுகுறித்து கட்டுமான நிறுவன மேலாளர் சந்தோஷ் திருமங்கலம் நபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்