என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mayam"
கடலூர்:
சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. கடந்த 20-ந்தேதி இரவு சந்தியா திடீரென்று மயமானார். அவர் வீட்டில் இருந்த 4½ பவுன் நகைகளை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து மோகன்ராஜ் சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார்.
அதில் தனது மனைவியை தன்னிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்த சிதம்பரம் கீழ்கரையை சேர்ந்த ஜெயசூர்யா கடத்தி சென்றதாக கூறிஉள்ளார். இது குறித்து சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகிறார்.
- இளம்பெண், 10-ம் வகுப்பு மாணவர், செவிலியர் மாயமானர்கள்.
- மாரனேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகரத் அருகேயுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 29). இவரது மனைவி தெய்வலட்சுமி (25). சுப்பு ராஜ் தனியார் நிறுவனத் தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கி டையே தெய்வலட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
வாலிபருடன் காதல்
திருமணத்துக்கு முன்ன தாக தெய்வலட்சுமி அயன் ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரை காத லித்து வந்துள்ளார். அத னால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் மல்லாங்கிணறு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான தெய்வலட்சுமியை தேடி வருகிறார்கள்.
பள்ளி மாணவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவரது மகன் 16 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் பின்னர் மாயமானார். இதுபற்றி அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நர்சு மாயம்
சிவகாசி அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசின்னம்மா (வயது 40). இவரது 18 வயது மகள் 10-ம் வகுப்பு முடித்து விட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் வெளியில் சென்றார்.
அதன்பிறகு அவரை காண வில்லை. இதுகுறித்து தங்க சின்னம்மா கொடுத்த புகா ரின் பேரில் மாரனேரி போலீசார் விசாரித்து வருகி றார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப் பட்டை சேர்ந்த வர் சுப்பிர மணி யன். இவரது மகள் அபர்ணா (வயது 22). இவர் கடந்த 14-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட் டத்திற்கு சென்றவர் வெகு நேரமாகி யும் வீடு திரும்ப வில்லை.
அவரது பெற் றோர் உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.இது குறித்து அபர்ணா வின் பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம் பெண்ணை தேடிவருகின்றனர்.
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் செல்வலட்சுமி. இவரது 32 வயது மகள் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செல்வலட்சுமி அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வருகிற 27-ந் தேதி கோவையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தார். செல்வலட்சுமி அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை.
எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த் தும் பலனில்லை. இதற்கி டையே சகோதரியின் கணவரிடம் செல்போனில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு போனை அணைத்து வைத்து விட்ட தாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்வலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மற்றொரு சம்பவம்
நரிக்குடி அருகே உள்ள புரையறைவாசித்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மணி. இவரது மனைவி லாவண்யா(25). குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லாவண்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பிச்சை மணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.
- 5 பேரும் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில்சென்றனர். அதன் பிறகு இது வரை வீடு திரும்பவில்லை.
- அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
சேலம்:
சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் மெயின்ரோடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சூர்யாபேகம் (62). இவரது மகன் சிராஜ்ஜின் முனீர் (39), வெள்ளி தொழிலாளி. இவரது மனைவி பரக்கத்நிஷா (29). இவர்களது குழந்தைகள் ஷேக்சதாக் (10), ஜாயதா (5).
திடீர் மாயம்
இவர்கள் 5 பேரும் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில்சென்றனர். அதன் பிறகு இது வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
ஆனால் அவர்கள்கு றித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து சிராஜ்ஜின் முனீரின் சகோதரி சல்மா சூர மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்கள். மேலும் மாயமாகி 8 நாட்கள் ஆகி உள்ளதால் அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.
கடன் தொல்லை
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது வெள்ளி வேலை செய்து வந்த சிராஜ்ஜின்முனீருக்கு கடன் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
இதனால் அவரை யாராவது மிரட்டினார்களா? இதனால் அவர் குடும்பத்துடன் அவர் எங்காவது சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது 17 வயது மகள் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெற்றோரிடம் கூறி உள்ளார். படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்றார். ஆனால் வரவில்லை என கல்லூரியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பெற்றோரும், காதலர் கார்த்திக்கும் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
- அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலுார்:
பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.
- வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
- ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50) கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜேஷ் (22) பி.ஏ. பட்டதாரியான இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த ஜெய வர்ஷினி (20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பின்னர் கணவன் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த மனைவி ஜெயவர்ஷினி வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார். எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து சின்னசேலம் போலீசார் காணாமல் போன ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மனைவி சஜிதா கமரூவை காணவில்லை.
- அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், கிருஷ்ண சந்திரபூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ஷதேஹா கமரூ (30). இவரது மனைவி சஜிதா கமரூ (28). இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகனும் உள்ளனர். மகன் சொந்த ஊரில் ஷதேஹா கமரூவின் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளான்.
ஷதேஹா கமரூ தனது மனைவி, மகளுடன், ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்துள்ள வடபழனி பகுதியில் உள்ள ஒரு தே ங்காய் நார் மில்லில் குடும்ப த்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கியுள்ளனர்.
மறுநாள் அதிகாலை ஷதேஹா கமரூ கண் விழித்து பார்த்தபோது, அவரது மனைவி சஜிதா கமரூவை காணவில்லை. உடனடியாக தன்னுடன் வேலை செய்யும் நபர்களு டன் சேர்ந்து அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சஜிதா கமரூவை கிடைக்கவில்லை.
ஒருவேளை அவர் தங்களது சொந்த ஊருக்கு சென்றிரு க்கலாம் என நினைத்து அங்கும் விசாரித்த போது சஜிதா கமரூ அங்கும் செல்ல வில்லை என்பது தெரியவ ந்தது.
இதையடுத்து ஷதேஹா கமரூ அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.
- கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கோவிந்தன் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அங்குள்ள ஏரிக்கரையில் மகனை அமர வைத்துவிட்டு நண்பர் சித்தையனுடன் கோவிந்தன் ஏரிக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மாயம்
மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய கோவிந்தன் அங்கே மகனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது உறவினர்களுடன் ஏரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினார்.
எங்கு தேடியும் நந்தீஸ்வரன் கிடைக்காத நிலையில் இது குறித்து கோவிந்தன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவன் நந்தீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
கோவை.
கோவை சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (49). இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார்.
இவர் கோவை பன்னிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் மாணவியின் செல்போனுக்கு போன் செய்தனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர்கள் மாணவியின் கல்லூரி தோழிகள் விசாரித்ததுடன், அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோருடன் கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தார்.
பட்டமளிப்பு விழா முடிந்ததும், மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி அலுவலகத்தில் சென்று, சான்றிதழ் வாங்கி விட்டு வருவதாக கூறி சென்றார். பெற்றோர் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போதும், அது சுவிட்ச் ஆப் என வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
போத்தனூரை சேர்ந்தவர் சிரஞ்சிவி. இவரது மனைவி சுசித்ரா (32). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சுசித்ரா வீட்டிற்கு வரவில்லை. இது தொடர்பாக சிரஞ்சிவி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுசித்ராவை தேடி வருகிறார்கள்.
- பிளஸ்-2 மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள சேஷபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வளர்மதி(34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வளர்மதிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வளர்மதி மகளுடன் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி பராசக்தி காலனி யை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று சலூன் கடைக்கு சென்று மாணவர் முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை முடியை சரியாக வெட்ட வில்லை என கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தொப்பி அணிந்து கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் தொப்பி அணிந்துவர தடை விதித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்