என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mini Bus"
- தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
- மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது வண்டியை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
- கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் மினி பஸ் ஒன்று சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 22 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் வாடகைக்கு ஒரு மினி பஸ்சை பேசி நேற்று இரவு புறப்படனர்.
இந்த மினி பஸ்சில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது வண்டியை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
இதனை அறிந்த பஸ்சில் இருந்தவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து இறக்கி டீ வாங்கி கொடுத்து தூங்கச் சொல்லி உள்ளனர். அதற்கு டிரைவர் தானே வண்டியை ஓட்டி செல்வதாக கூறி வண்டியை மீண்டும் ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மினிபஸ் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அரசு என்ஜினியரிங் கல்லூரி முன்பு வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் கலிமுல்லா உட்பட 22 பேரும் காயமடைந்தனர்.
அப்போது வண்டியில் இருந்தவர் கதறினர். உடனே சாலையோரம் இருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் உடனே கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நிலையில் 17 பேர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்கு வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பின்னர் சில நிபந்தனைங்களுடன் மினி பஸ்கள் இன்று முதல் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி யில் சமீபத்தில் திறப்பு விழா கண்ட அண்ணா (பழைய) பஸ் நிலையத்தில், மினி பஸ்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது அவர்களி டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகளுடன் கலந்தா லோசித்து வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக உறுதி யளித்தார்.பின்னர் சில நிபந்தனங்க ளுடன் மினி பஸ்கள் இன்று முதல் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மினி பஸ்கள் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று காலை நேரில் சென்று பார்வை யிட்டார்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செய லாளரும், மாமன்ற உறுப்பி னருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பி னர்கள் ஜான் சீனிவாசன், சரவணகுமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சுற்றுலா இடங்களை காண வசதியாக ராமேசுவரத்தில் மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்க ளில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர்
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 21 வார்டுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். மேலும் நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அரசு பஸ்களின் மூலம் 5 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். ராமேசுவரத்தில் அரசு பஸ்சை தவிர தனியார் பஸ் வசதிகள் இல்லை.
பஸ் நிலையம் முதல் கோவில் வரை,கோவில் முதல் தனுஷ்கோடி வரை பஸ்கள் சென்று வருகிறது. இதில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் பஸ்சில் செல்ல அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.
மேலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பணம் செலுத்தி செல்கின்றனர். வெளியூர் நபர்களை மட்டுமே குறிவைத்து ஆட்டோக்கள் இயக்கப்படு கிறது. இதனால் உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்களில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர். இதனால் உள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவில், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமர் கோவில், கெந்தமான பர்வதம், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சுற்றுலா பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது.
- நிறுத்திய கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா பூ.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது. இதனால் பயந்து போன ஒரு சிலர் சாலையில் தடுமாறி விழுந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மினி பஸ் மீண்டும் வரும் வரை சாலையிலேயே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மினி பஸ் அதே சாலையில் வந்தது. அதனை நிறுத்திய இந்த கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும், பஸ்சின் ஹாரனை அடித்து நொறுக்கினர். இது குறித்து மினி பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவப்பிரகாசம், அவருடன் வந்த 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
- ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பு மினி பஸ் சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
இவற்றை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் போக்குவரத்துக்கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படுகிறது.
- விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 மினிபஸ்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் மினிபஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத குறுகிய இடங்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. 72 வழித் தடங்களில் 146 மினி பஸ்கள் இயக்க அனுமதி உள்ளன.
ஆனால் டிரைவர் பற்றாக்குறை மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால் ஒரு சில மினி பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. மினி பஸ்களால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் குறைந்த அளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ்கள் நிரம்பி செல்கின்றன.
டெப்போக்களில் ஓடாத, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு சில மினி பஸ்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி பஸ், ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அருகில் உள்ள நகரப்பகுதிகள், மாவட்ட தலை நகரங்களுக்கு மினிபஸ்களை இயக்கினால் கிராமப் பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 மினிபஸ்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காலியாக ஓடக்கூடிய மினிபஸ்களால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் பிற மாவட்டங்களுக்கு கொடுத்தால் அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் இயக்கக்கூடிய மினி பஸ்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. 146 மினி பஸ்களில் 120, 125 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. 10 சதவீதம் 'ஸ்பேர்' பஸ்கள் உள்ளன.
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள் சிலர் உடல் சார்ந்த நோய் பிரச்சினைகள் காரணமாக அவர்களுக்கு மினி பஸ்களில் பணி ஒதுக்கப்படுகிறது. வெளிமாவட்டங்களுக்கு மினி பஸ்களை மாற்றும் திட்டம் இல்லை' என்றனர்.
இதற்கிடையில் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் மினிபஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உதிரி பாகங்கள் இல்லாமலும் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் ஒரு சில மினி பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
- மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி வடக்கு தெருவில் வசிப்பவர் அன்பழகன் மகன்வந்தியதேவன் (வயது 26). இவர் ஒரு மினி பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் வசிக்கும் மாரிமுத்து மகன் விக்னேஷ் (24). தட்டுமால் நடுபடுகை செல்வராஜ் மகன் முனுசாமி (29) ஆகிய இருவரும் வேறு ஒரு மினி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் சம்பவத்தன்று நக்கம்பாடி வந்தியதேவன் நடத்துனராக பணியாற்றும் மினி பஸ்சில் இரவு மினி பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளார்.
அப்போது அங்கே வந்த விக்னேஷ், முனுசாமி ஆகிய இருவரும் மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர். இதில் உள்ளே படுத்து உறங்கிய வந்தியதேவன் படுகாயம் அடைந்த கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வந்தியதேவன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், முனுசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையத்திலிருந்து பாப்பான்குளம் வழியாக ஏ.பி.நாடானூருக்கு மினி பஸ் ஒன்று பயணிகளை தினந்தோறும் ஏற்றி சென்று வருகின்றது.
- நேற்று இரவு அப்பகுதி வழியே பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்றது.
கடையம்:
கடையத்திலிருந்து பாப்பான்குளம் வழியாக ஏ.பி.நாடானூருக்கு மினி பஸ் ஒன்று பயணிகளை தினந்தோறும் ஏற்றி சென்று வருகின்றது.
நேற்று இரவு அப்பகுதி வழியே பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்றது. அப்போது பாப்பான்குளத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது செல்லப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த 4 பேர் திடீரென பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். கல்வீச்சில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
இதுகுறித்து பஸ் டிரை வர் சுந்தரராஜ் (வயது 30), நடத்துனர் காளி ஆகி யோர் புகாரின் பேரில் ஆழ்வார்கு றிச்சி போலீசார் செல்லப் பிள்ளையார் குளத்தை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி பகுதியாக உள்ளது. அதனை சுற்றி ஏராளமான கடலோர கிராமங்கள், குக்கிராமங்கள் விவசாய கிராமங்கள் உள்ளன.
பெருகி வரும் மக்கள் தொகையில் கிராமப் புறங்களை நகரத்தோடு இணைக்கும் வகையில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆனால் தொண்டியில் இருந்து இயக்கப்படும் மினி பஸ்களில் சில பஸ்கள் அரசு நிர்ணயித்த வழித்தடங்களுக்கு பதிலாக அரசு பஸ்கள் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இதனால் மாணவ, மாணவிகள் முதல் வயதானோர் வரை மினி பஸ்சின் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சிறுவயது முதல் 10, 11, 12-ம் வகுப்பு பள்ளி செல்லும், சென்று திரும்பும் மாணவிகள் கிழக்கு கடற்கரை முக்கிய சாலையில் மினி பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
தொண்டியில் கடற்கரை பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையம் வழியாக புதுக்குடி விலக்கு, பஸ் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், பெருமாள் கோவில், பாவோடி பள்ளிவாசல், பழைய பஸ் நிலையம், வெள்ளை மணல் தெரு, தெற்கு தோப்பு, தோப்பு விலக்கு, நம்புதாளை பஸ் நிறுத்தம், வன்னியர் சாலை, மீனவர் காலனி, முகிழ்தகம் விலக்கு, பகவதிபுரம், முத்தமிழ் நகர், லாஞ்சியடி, சோளியக்குடி தர்கா, சோளியக்குடி, எம்.வி.பட்டினம் என அரசு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஒருசில வழித்தடத்தை தவிர கிராமங்களை இணைக்கும் வழித்தடங்களில் செல்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தபட்ட துறையினர் அரசு அனுமதித்த வழித்தடத்தை மினி பஸ்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கப்பட்டன.
இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Accident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்