என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Palanivel Thiagarajan"
- பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும்
- யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள்
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், "பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு விட்டது.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா இது? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது.
பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள். பாஜக அரசு நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
- பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
- பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.
சென்னை:
பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி தமிழ்நாடு வந்த போது பல்லடம் பொதுக் கூட்டத்திற்கு பிறகு மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.
அதன் பிறகு இரவு 8 மணிக்கு பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு மதுரையில் ஓட்டலில் தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடிக்கு சென்றார்.
இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை வீர பாஞ்சான் பள்ளி ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்று சால்வை அணிவித்தார்.
இந்த நிலையில் அன்றைய தினம் பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அமைச்சர் பழனிவேல் பழனிவேல் தியாகராஜன் அங்கே சென்றும் பிரதமர் மோடியை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி ஓட்டலில் இருந்து பிரதமர் புறப்பட்டபோது, முதல் நபராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது. இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை. அதன் பிறகு மதுரை விமான நிலையத்திற்கு சென்றும் பிரதமரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழியனுப்பி வைத்தார்.
பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
மதுரை வந்த பிரதமர் மோடியை நான் 4 முறை சந்தித்தேன். அவரை வர வேற்பதற்காக தமிழக அரசு எனக்கு 2 முறை புரோட்ட கால் கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்ட காலில் பிப்.27-ல் ஓட்ட லுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப்ரவரி 27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பு எனக்கு வந்தது உண்மை தான். அப்போது மாநில அரசின் வழி காட்டுதலையே நான் பின்பற்றினேன்.
பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்ததை நான் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதன் நகல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்று விடும்.
பிரதமர் பயணத்தில் மாநில அரசின் புரோட்ட கால்படி துணை செயலாளர் ஒருவரும் இருப்பார்.
அவரும் எனக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு குறித்து தகவல் தெரிவித்தார். பிரதமரிடம் என்ன பேசினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. ஆனால் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை தேங்க்யூ பாய்.. தேங்யூ பாய் என்று தட்டிக் கொடுத்தார்.
பிரதமரை சந்தித்த போட்டோவை எங்கும் நான் வெளியிடவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
- ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு இந்த மாநாடு வித்திட்டுள்ளது. இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, என் இதயத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈர்த்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம், 74,757 இளைஞர்கள், மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 14,54,712 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மட்டுமின்றி ஏற்றுமதியையும் இலக்காக கொண்டு செயல்பட திட்டம்.
9 நாடுகள் இந்த மாநாட்டில் பன்னாட்டு அரங்குகள் அமைத்து சிறப்பு சேர்த்துள்ளன.
எங்கள் அரசு மீதும் கொள்கை மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்.
தொழிற்சாலை அமைத்து, உற்பத்தி தொடங்கிய பின்னும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
மாநாட்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
முதலீடு செய்யாதவர்களையும் முதலீடு செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.
- பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாறறினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கணினிகளை மனிதர்கள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்க தொடங்கிவிட்டோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் Content-களை உருவாக்கினால் அது வேலைவாய்ப்புகளை பெருக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் DeepFake உள்ளிட்ட எதிர்மறையான தாக்கங்கள்
அதிகரித்துள்ள சூழலில், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.
பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.
மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்பை AI தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி சரி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி:
30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, அரசியல் காரணங்களுக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள். கிரிமினல் சட்டவிதிகளின் கீழ் போதிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இருக்கும்போது, நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது" என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத்துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே யானையின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்டளையின் நிறுவனர் ரங்கராஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும், குறைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-
யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோதிலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று தாய்லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகிழகுளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.
நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளுடைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்கமான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.
எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவனிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள்ளார்.
- வேலை செய்வதில் சலிப்புடன் இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஏன் இப்படி கூண்டுக்கிளியாக கஷ்டப்படணும்.
- ராஜினாமா செய்யும் பட்சத்தில் மதுரையில் இடைத்தேர்தல் வரும்.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கல்வியாற்றலிலும், நிர்வாக திறமையிலும் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அவரது நேரம் சரியில்லை. அவரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டது. ஆனால் அந்த துறையில் அவர் எதிர்பார்த்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வேலை செய்வதில் சலிப்புடன் இருக்கும் அவர் ஏன் இப்படி கூண்டுக்கிளியாக கஷ்டப்படணும். மீண்டும் அமெரிக்கா சென்று சுதந்திர பறவையாக இருக்கலாமே என்று யோசிக்கிறாராம். கிளி பறந்தாலும் பறந்து விடும் என்கிறார்கள்.
ராஜினாமா செய்யும் பட்சத்தில் மதுரையில் இடைத்தேர்தல் வரும். உங்களால் ஒரு இடைத்தேர்தல் வந்தால் அரசியலை தாண்டி மக்கள் மத்தியிலும் கெட்ட பெயர் வருமே என்று அவரது நலம் விரும்பிகள் கூறியதால் தான் யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
- அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார்.
- அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
சென்னை
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது. அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடிதர விருப்பமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆடியோ விவகாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் 2 முறை விளக்கம் அளித்துள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார்.
அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது.
அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் அண்ணாமலை அளித்த பேட்டியில், "ஆடியோ விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றால் ஒரிஜினல் ஆடியோவும் என்னிடம் உள்ளது. அந்த ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று காலையில் இந்த சந்திப்பு நடந்தது. சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிக்கொண்டிருந்தார்.
ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். அதன் பிறகு இன்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
- 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது.
மதுரை:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ புனையப்பட்டதா? இல்லையா? என்பதை அவரே எப்படி கூற முடியும்? நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி தொடர்பான அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம்.
12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. மனித வாழ்க்கை சுவிட்ச் போட்டால் ஓடும் எந்திரம் போன்றது அல்ல. 12 மணி நேர வேலைக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்பது தான் ஸ்டாலினின் பண்பாடு. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.
- எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன.
மதுரை:
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் தங்களது மூதாதையரைவிட அதிகமாக சம்பாதித்துள்ளனர். அது பிரச்சினையாகி வருகிறது.
அதனை எப்படி கையாளுவது? எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது? ரூ.10 கோடி, ரூ.20 கோடி என்று அவர்கள் சிறுக சிறுக குவித்தது தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என்று உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த ஆடியோவில் ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழி பெயர்ப்பும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.
எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது.
அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்
சென்னை:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
அதனால், தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.
தி.மு.க வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்