என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mysterious death"
- நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வாலிபர் மரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பி வந்து கொண்டிருந்தது. இதில் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனர்.
இந்த பொதுப் பெட்டியில் உள்ள கழிப்பறையில் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உள்ளே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
கதவு நீண்ட நேரம் திறக்கவில்லை. பயணிகள் கதவை தட்டினாலும் பதில் இல்லை. அப்போது அந்த ரெயில் சேலத்தைத் தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.
பின்னர், அந்த ரெயில் ஈரோடு இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. அங்கு தயாராக இருந்த ஈரோடு ரெயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் சந்தன கலர் முழுக்கை ரவுண்ட் நெக் பனியன் அணிந்திருந்தார். ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிதிருந்தார். நெற்றியின் வலது பக்கம் ஒரு கருப்பு மச்சம் இருந்தது. வலது கால் முட்டியில் ஒரு கருப்பு மச்சம் உள்ளது. வலது தொடையின் வெளிப்புறத்தில் ஒரு காய தழும்பு உள்ளது.
மேலும், அந்த நபரின் சட்டை பையில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் இருந்தது. மற்றபடி எந்த ஒரு பொருட்களும் பைகளும் சிக்கவில்லை. அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.
- காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர்.
மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எம்.பி அன்வருல் அசீம், கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.
ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாக நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச எம்.பி., கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
- தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்திருக்கலாம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்த கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரிக் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
- உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (வயது51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).
இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள பிக்ஸ்கைவே அன்ட் வான்கிரிக் டிரைவ் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.
அப்போது அங்கு ராஜீவ் வாரிகோ, ஷில்பா கோதா, மகேக் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார், சந்தேகத்திற்கிடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி டாரின்யங் கூறும்போது, வீட்டில் தீப்பிடித்தது தற்செயலாக ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் சந்தேகத்திற்குரியதாக விசாரித்து வருகிறோம்.
தீ விபத்துக்கான சாத்தியமான காரணம் அதிகம் இல்லை. இவ்வழக்கு எங்கள் கொலைப்பணியகத்துடன் விசாரித்து வருகிறோம் என்றார். உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடலில் படுகாயங்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது
- செல்வபுரம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த தனகிரி (வயது 49) என்பவர் பூட்டிய வீட்டுக்குள் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக பேரூர் குமாரபாளையம் கிராமநிர்வாக அதிகாரி வெற்றிவேல், செல்வபுரம் போலீசில் புகார்அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தனர். இதில் தனகிரி உடலில் படுகாயங்கள் இருப்பது தெரியவந்தது.
தனகிரிக்கு மதுப்பழக்கம் உண்டு. நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவார்.
எனவே அவரது நண்பர்கள் தனகிரியை அடித்து படுகாயம் ஏற்படுத்தினரா, அல்லது குடிபோதையில் கீழே விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஓறையூர்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா (வயது 19), இவருக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். அகல்யா,கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்தார். தனது மகன் சசிதரனுக்கு இட்லி ஊட்டி உள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலையை கவனித்தார்.பிறகு குழந்தையை எழுப்பிய போது குழந்தை அசைவில்லாமல் இருந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரே தபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வத்திராயிருப்பு அருகே விவசாய தொழிலாளி மோட்டார் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
- மகளுக்கு திருமண நிச்சயம் செய்திருந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை அடுத்துள்ள ஆத்தங்கரை பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). இவருக்கு கிருஷ்ணம்மாள் (39) என்ற மனைவியும், மகன் மகள்களும் உள்ளனர்.
ராஜா மற்றும் அவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து விவசாயம் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜா தனது மகளுக்கு திருமண நிச்சயம் செய்தி ருந்தார். இதற்காக உறவினர் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழை கொடுத்து வந்தனர்.
சம்பவத்தன்று கிருஷ் ணம்மாள் மட்டும் திரும ணத்திற்கு அழைப்பிதழை கொடுக்க வெளியூர் சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்பு ஊர் திரும்பிய கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணம்மாள் உடனே கூமாபட்டி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மகன் சரத்குமாரை வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிக் கொண்டார்.
- தள்ளிவிட்டதால் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேற்கு பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சரத்குமார் (25) என்ற மகனும் சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சரத்குமார் தனியார் வாகனம் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.
சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சரத்குமார் தனது தந்தையை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மகன் சரத்குமாரை வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிக் கொண்டார்.
இன்று காலையில் பார்த்த போது பின் தலையில் ரத்தக் காயங்களுடன் சரத்குமார் இறந்து கிடந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரத்குமார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், போதையில் அறையில் வைத்து பூட்டியதால் சரத்குமார் மேற்கூரையை உடைத்து தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இருந்தபோதும் ஆறுமுகம் தள்ளி விட்டதால் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார்.
- தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் (51) இவரது தம்பி செல்வம் (45)தி.மு.க. பிரமுகர். இவர்கள் இருவரும்குணசேகரன் மகனை பார்ப்பதற்காக நேற்று இரவு புதுவை மாநிலம் குருவிநத்தத்துக்கு சென்றனர் பின்பு இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார். .வரும் வழியில் புதுவை மாநிலத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வந்தனர்.பண்ருட்டி காந்தி ரோடு சாரதா பள்ளி அருகே சென்று கொண்டி ருந்த போதுஇவர்களுக்கு போதை அதிகமாகி காந்தி ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்தனர்.
பின்பு குணசேகரன் மோட்டார்சைக்கிள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.காலை 6 மணிக்கு போதை தெளிந்து தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார். பண்ருட்டியில் தம்பி செல்வம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் போதையில் இறந்தாரா? வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 68). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது பக்கத்து நிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடப்பதாக கூறினர்.
பின்னர் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உலகநாதனின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்கில் பிணமாக கிடந்தார்
- சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ராமர் கோவில் தெரு சேர்ந்தவர் சுந்தர். ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி தரணி (வயது 23) திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தரணி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணையில் கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
வாணியம்பாடி சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த மாதனூர் பெரியங்குப்பத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று மாலை துத்திப்பட்டு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மோகன சுந்தரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்