என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National Seminar"
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், ‘மாறி வருகின்ற இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், 'மாறி வருகின்ற இந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் வடிவேல் அர்ஜூனன், ஹரியானா மத்திய பல்கலைக்கழக பேராசிரியை லாங்காய் ஹிமானிங்கன், ஹிமாசலப்பிரதேச அரசு கல்லூரி பேராசிரியர் சந்தீப்குமார் தாக்கர், மும்பை எஸ்.என்.டீ.டி. கலை மற்றும் எஸ்.சி.பி. வணிகவியல் பெண்கள் கல்லூரி பேராசிரியர் கிஷோர் காதம் ஆகியோர் பேசினர். முன்னதாக பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கணேசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். கருத்தரங்க செயலர் அசோகன், கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். நிறைவு நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார். இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் 203 பேர் பங்கேற்றனர். இதில் 59 மாணவர்கள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முதுகலை பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
- பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன் விழா தொடக்க உரையாற்றினார்.
- உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் எட்ஜ் கம்பியூட்டிங் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
உடுமலை:
உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் எட்ஜ் கம்பியூட்டிங் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கணிப்பொறியியல் செயற்கை நுண்ணறிவுத்துறையும், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர் ஜெ.ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி முதன்மை உரையாற்றினார். பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன் விழா தொடக்க உரையாற்றினார்.
இதையடுத்து உடுமலை அரசு கலைக்கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான ஈ.கார்த்திகேயன், கோவை கே.ஜி.கலை அறிவியல் கல்லூரி கணிப்பொறி பயன்பாட்டு துறை இணை பேராசிரியர் கே.எஸ்.மகராசன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ப்ரீத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். நிறைவாக உதவி பேராசிரியர் கி.பவித்ரா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரியில் இருந்து 153 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
- கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
- விளையாட்டு கலாச்சாரம் என்ற தலைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர்ஆறுமுகம் எடுத்துரைத்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய ஆக்கி அணி தலைவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான பிலிப்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஆங்கில துறை தலைவர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். விளையாட்டு கலாச்சாரம் என்ற தலைப்பில் ஆறுமுகம் எடுத்துரைத்தார். சிகரம் நோக்கி என்ற தலைப்பில் பிலிப்ஸ் மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டில் சிகரத்தை எப்படி அடைவது என்பது பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்தார். விளையாட்டு, வீரர்களுக்கு தனது அறிவுரைகளை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் பிரேமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் குரு சித்திர சண்முக பாரதி, பால் மகேஷ் பேபி மாலினி, மீனாட்சி , முருகன், துரை லிங்கம், சாம்சன் லாரன்ஸ், மாரி செல்வம், ராஜேஷ் கண்ணா, மாரியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் “பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் "பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மதுரை பெஞ்ச் முதல்வர் ஸ்ரீ.எம். சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மற்றும் சமூக பணித்துறைத் தலைவர் வேலுசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி உயிரியல் துறை இணைப்பேராசிரியர் அருண் நாகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பிரிவின் இணைப்பேராசிரியர் ஹேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கருத்தரங்கிற்கு 9 கல்லூரிகளில் இருந்து பேரா சிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு 129 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். முடிவில் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆறுமுக செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.
- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
- கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பு துறை மற்றும் உள்தர உறுதிப்பிரிவு சார்பில், ''மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் சமீபத்திய போக்குகள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பேராசிரியர் வளனரசு வரவேற்று பேசினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து மின்னணு தொடர்பு துறை தலைவர் பெனோ எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்'' என்று கூறினார். தொடர்ந்து அவர், மாநாட்டின் தொகுப்பு நூலை வௌியிட, அதனை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி பெற்று கொண்டார்.
கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மணி, பேராசிரியர் வளனரசு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ந்து வழிகாட்டினர். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
- வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார்.
வள்ளியூர்-
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக "தொழில் முனைவோரின் எதிர் கால திட்டம்-2047" என்ற தலைப்பில் தேசிய அளவி லான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் வி.பி.ராம நாதன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஆர்.முருகேசன் தொடக்க உரையாற்றினார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தி னராக வணிகவியல் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தர்ம ரஜினி சிறப்புரை யாற்றினார். 2-ம் அமர்வில் கேரளா, கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் அருணாசலம் இந்தியாவில் தொழில் முனைவோரின் எதிர்கால திட்டம் தொடர்பான கருத்து க்களை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவி களுடன் கலந்து ரையாடல் நடை பெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேரா சிரியர்கள் செய்திருந்தா ர்கள். கருத்தரங்கில் தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர் புஷ்பராஜ், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஒருங் கிணைப் பாளர் வேல் பாண்டி நன்றி கூறினார்.
- காளீஸ்வரி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
- தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நீதி இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கேரளா பல்கலைக்கழகக் கல்லூரி இணைப் பேராசிரியர் சீனிவாசன் "காலம் தோறும் அறமுணர்த்தல் பதினென்கீழ்க்கணக்கு அறநூல்களை முன்வைத்து'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
2-ம் அமர்வில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் கரு.முருகனும், 3-ம் அமர்வில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலைத் தமிழ் மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் சிவனேசனும் பேசினர். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். இதில் பிற கல்லூரி மாணவர்கள் 25 பேரும், தமிழியல் துறை மாணவர்கள் 140 பேருமாக மொத்தம் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முத்துச்சிதம்பர பாரதி மற்றும் சங்கர் உள்பட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
- ராமசாமி ராஜா பாலிடெக்னிக்கில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
- ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம், இந்திய பொறியாளர்கள் அமைப்பு இணைந்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தியது. இதில் 25 பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்று கட்டுரையை சமர்ப்பித்தனர். ெதாடக்க விழாவில் பி.ஏ.சி.ஆர். கல்வி அறக்கட்டளை தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். நிறைவு விழாவில் மதுரை பிரிவு பொறியாளர்கள் அமைப்பை சேர்ந்த ராஜயோகன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
சிவில் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, மெக்கானிக்கல் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு விருதுநகர் வி.எஸ்.வின் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மீனாட்சியாபுரம் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மாணவ-மாணவிகள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை ஆட்சி மன்ற குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
- தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழி காட்டுதலின் படி ஏற்பாட்டில் நடைபெற்றது.
- கருத்தரங்கில் ஆராய்ச்சி குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சுகாதார அறிவியல் பிரிவில் பல துறைகள் ஒருங்கிணைந்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழி காட்டுதலின் படி ஏற்பாட்டில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு துறையின் டீன் செந்தில்குமார் வரவேற்று நோக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதிர் தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்கவியல் பேராசிரியர் பன்னீர்செல்வம், சென்னை அப்பல்லோ மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆேலாசகர் அனில்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கருத்தரங்கில் ஆராய்ச்சி குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. செயல்முறை பயிற்சியினை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியில் பிரிவின் பொறுப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் அஜித்குமார், சுபாஷினி ஆகியோர் அளித்தனர்.
கருத்தரங்கில் மாணவர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை, இணைய பட விளக்கம் காட்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறை உதவி பேராசிரியர்கள் திபீகா, வெங்கடேசன், இன்பசாகர், கலைவாணி, சிலம்பரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
- நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
நெல்லை:
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மருத்துவ மற்றும் உயிர்த்தொழில்நுட்பவியல் சங்கத்தின் 9-ம் ஆண்டு மாநாடு மற்றும் நவீன உயிர்தொழில்நுட்பவியல் மூலம் கால்நடை மற்றும் கோழியினங்களின் உடல்நலன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் என்ற தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் தலைமை தாங்கி இக்கருத்தரங்கின் போது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
டாக்டர் ஏ.ஜே.தாமி சிறப்பு இறுதி அறிக்கையை சமர்பித்தார். முன்னதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) எட்வின் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் 29 விஞ்ஞானிகள், 40 முதுநிலை மாணவர்கள் மற்றும் 10 இளநிலை விஞ்ஞானிகள் உள்பட 79 பேருக்கு சிறந்த ஆய்வு கட்டுரைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்