என் மலர்
நீங்கள் தேடியது "O Panneerselvam"
- அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.
- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று நடந்தது.
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என 120 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி அமைப்பது, முகவர்களை தேர்வு செய்வது போன்றவை குறித்து இதில் விவாதித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதால், இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார்கள்.
கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, "அரசியலில் போலி என்றால் அது ஓ.பன்னீர் செல்வம்தான். வழக்கமாக நாம் பொருட்களில் தான் போலியை பார்த்திருப்போம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போலி அரசியல்வாதி" என்று கூறினார்.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் தன்னை தென் மண்டல தலைவராக முன்னிலைப்படுத்தி வந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அவரை பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தோம்.
ஆனால் அவர் போடி தொகுதியிலேயே வெற்றி பெறுவது போராட்டமாக இருக்கிறது. நான் எப்படி அங்கே பிரசாரத்துக்கு வர முடியும் என்றார். அவரை தென்மண்டல தலைவராக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கூட்டத்தில் பேசிய பலரும் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
- ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார்.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
- பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அன்று காலையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டை தலைமை கழகத்துக்கு ஓ.பி.எஸ். சென்றபோது அங்கு அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறின.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தான் முதலில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு சாதமாகவும் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் அமைந்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையே தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி முதல் தீவிரப்படுத்தப்பட்டது. இரு தரப்பை சேர்ந்த வக்கீல்களும் தங்கள் தரப்பில் இருந்து பரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். தொடர்ந்து 3 நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்ராய் ஆகியோர் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பு வாதங்களை வருகிற 16-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் இதுவரை கோர்ட்டில் எடுத்து வைத்த வாதங்களை எழுத்து வடிவில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். பொதுக்குழு மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் தரப்பில் மூத்த வக்கீல் முகுத் ரோகத்கியும், செயற்குழு தரப்பில் மூத்த வக்கீல் அதுல்சித்லே மற்றும் வக்கீல்கள் பாலாஜி, சீனிவாசன், கவுதம்குமார் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். இவர்கள் தரப்பில் சுமார் 15 பக்கங்களை கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை வருகிற 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடும்போது, கட்சி விதிகளுக்கு உட்பட்டே ஜூலை 11-ந்தேதி பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்கிற மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.
இந்த கூட்டம் நடத்தப்படுவதை அவர்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) அறிந்திருந்தனர். இதனை ஜூலை 4-ந்தேதி தாக்கல் செய்த சிவில் வழக்கிலும் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதிடும்போது, பதவியில் இருந்து நீக்கி விட்டால் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக பொதுச்செயலாளர் ஆகி விடலாம் என்று நினைத்ததாக வாதிடுவது சரியல்ல. அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றபிறகே ஓ.பி.எஸ்.சை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற முக்கிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் இடம்பெற உள்ளது.
ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிருஷ்ணகுமார், வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் ஆகியோர் வாதிடும்போது எந்தவித அடிப்படை காரணமும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு உள்ளன என்று வாதிட்டார்.
2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட கட்சி விதிகள் திருத்தம் அ.தி.மு.க.வினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு முரண்பாடான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டிருப்பதாகவும் இரண்டு நீதிபதிகள் அமர்வு இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வாதிட்டனர்.
இதற்கு முன்னரும், சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வாதங்களை ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் எடுத்து வைத்துள்ளனர். அவை அனைத்தையும் சேர்த்து ஓ.பி.எஸ். தரப்பிலும் எழுத்துப்பூர்வ அறிக்கை 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதை யடுத்து இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வழங்கப்பட்ட ஐகோர்ட்டு இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு செல்லுமா? செல்லாதா? என்பதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவிக்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
- தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தினமும் பங்கேற்று வந்தனர்.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபை கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தினமும் பங்கேற்று வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்று விவாதத்தில் பங்கேற்றனர்.
இன்று கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். ஆனால் இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் சேலம் சென்றுவிட்டார். இதே போல் ஓ.பன்னீர்செல்வமும் இன்று சட்டசபைக்கு வரவில்லை. அவர் தேனிக்கு சென்றுவிட்டார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
- ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி “இறைவனுக்கே தெரியும்” என கூறிவிட்டு சென்றார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம், "உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்?" என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி "இறைவனுக்கே தெரியும்" என கூறிவிட்டு சென்றார்.
- நாட்டு மக்களின் உதவியோடு பவானி ஆற்றிலிருந்து சுமார் 56 மைல் தூரம் பிரிந்து செல்லக்கூடிய வாய்க்காலினை வெட்டி, அணையைக் கட்டியவர் காலிங்கராயர்.
- வலுவான வாய்க்கால் திறக்கப்பட்ட தினமான தை 5-ந் தேதி காலிங்கராயன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பூந்துறையை தலைமையிடமாகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த காலிங்கராயர், ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகள் பாசனம் பெற நற்பணி ஆற்றியவர். தன் ஆளுகைக்குட்பட்ட புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, தன்னுடைய சொந்தப் பணத்தில், நாட்டு மக்களின் உதவியோடு பவானி ஆற்றிலிருந்து சுமார் 56 மைல் தூரம் பிரிந்து செல்லக்கூடிய வாய்க்காலினை வெட்டி, அணையைக் கட்டியவர் காலிங்கராயர்.
இப்படிப்பட்ட வலுவான வாய்க்கால் திறக்கப்பட்ட தினமான தை 5-ந் தேதி காலிங்கராயன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாளை (19-ந் தேதி) காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம், நாசுவம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள காலிங்கராயரின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. சார்பில், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முருகானந்தம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கோவிந்தன் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாரப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது.
- கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறிக் கொண்டிருக்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என கூறிக்கொண்டு அறிக்கைகள் வெளியிட்டு வரும் சசிகலா, திடீர் திடீரென சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்கிறார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அவரும் செயல்பட்டு வருகிறார். டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இப்படி 4 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே சசிகலா பேட்டி அளிக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். என்னால் மட்டுமே அது முடியும் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தலைமை பதவிக்கான போட்டி காரணமாகவே பிரிந்துள்ளனர். இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று அ.தி.மு.க.வினரிடம் கேட்டால் "ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியுமா?" என அவர்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள். இதன் மூலம் யாராவது விட்டுக் கொடுத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்பது தெள்ளத் தெளிவாகி உள்ளது.
ஆனால் சசிகலாவோ நேற்று அளித்த பேட்டியில் 2 பேரையும் சந்திக்க முடிவு செய்திருப்பது போல கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனது கட்சியினரை எப்போது வேண்டுமானாலும் நான் சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
"அ.தி.மு.க. விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வை இணைப்பேன், இணைப்பேன் என்று திரும்ப திரும்ப கூறி சசிகலா பிலிம் காட்டிக்கொண்டிருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அவரது தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் இணையலாம். ஆனால் சசிகலாவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது. அவரது பின்னால் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் யாருமே இல்லாத நிலையில் அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்றும் அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சசிகலா சிறையில் இருந்து வெளியானபோது முதலில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார். பின்னர் ஒதுங்கி இருக்கப்போவதாக பின் வாங்கினார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி அவர் பேசியுள்ளதால் சசிகலாவின் எதிர்கால திட்டம்தான் என்ன? என்பதும் குழப்பமாகவே மாறி இருக்கிறது என்றும் அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் ஓ.பி.எஸ். தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் ஓ.பி.எஸ். தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதன்படி ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
- ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்தை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி தரப்பினர் அனுப்பினர். அது பரிசீலனையில் இருந்து வருகிறது.
இதேபோல ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வதாகவும் சட்ட விதிகளை மாற்றம் செய்ய முடியாது என்றும் கூறி வருகிறார்.
அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களை கொண்ட கிளையில் இருந்து தான் சட்டவிதிகளை மாற்ற முடியும். எனவே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உரிய ஆவணங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடிதம் கொடுத்துள்ளது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற முறையில் கடிதம் அனுப்பி உள்ளது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் 2 பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.
இருவரும் ஒன்றாக இருந்தபோது கடந்த தேர்தலில் த.மா.கா.விற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது இரு துருவங்களாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வமும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் கூறும்போது, 'இரட்டை இலை சின்னம் பெறுவதில் இருதரப்பினருக்கும் சிக்கல் இருக்கும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று இணைவது தான் நல்ல முடிவாகும். அதற்கான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் உள்ளது' என்றனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கும் நிலையில் பா.ஜ.க.வின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் உறுதிப்படுத்தாத நிலையே உள்ளது.
இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே தலைமையின் விருப்பமாக இருப்பதால் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை பா.ஜ.க. எடுக்கும் என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆதரவு அணிக்கு தான் இரட்டை இலை ஒதுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அதனால் டெல்லியில் ஆதரவை பெற இருவரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தையும் எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சட்ட நிபுணர்களுடன் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இரட்டை இலையை பெற அழுத்தம் கொடுக்க தேர்தல் ஆணையத்தை சந்திக்கவும் தயாராகி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாதபட்சத்தில் தனி சின்னத்தில் நிற்கவும் எடப்பாடு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தயாராகி வருகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிடும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தானே நீடிப்பதாக கூறிக்கொண்டு நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொங்குமண்டலத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாகவே கருதப்படுகிறது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோற்றுப்போய் இருந்தது. இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி அணி களம் இறங்கி உள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்க ஓ.பி.எஸ். அணியினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் என்கிற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற 23-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். பங்கேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
வருகிற 23-ந்தேதி மாலை 6 மணி அளவில் எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனியாக உள்ள தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வருகிற 23-ந்தேதி முக்கிய ஆலோசனையை நடத்துகிறது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சீட் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிய தே.மு.தி.க. வேறு வழியின்றி டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்று அந்த கட்சி முடிவு எதையும் எடுக்காமல் இருக்கும் நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதனால் தனித்து போட்டியிடுவதா? பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தாங்கள் விரும்பும் கூட்டணிக்கு இப்போதே ஆதரவை தெரிவிப்பதா? என்கிற குழப்பமான மனநிலையில் தே.மு.தி.க. உள்ளது. இதுபற்றி விரிவாக ஆலோசித்து பிரேமலதா முடிவை அறிவிக்க உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்த்து களம் இறங்க வேண்டுமா? என்கிற கேள்வியும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு எடுப்பதற்காக கமல்ஹாசன் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆலோசிக்க ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார். 23-ந்தேதி அன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு ஆகியோர் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
இந்த கூட்டத்தில் அந்தியூர், பவானி, பவானி சாகர், கோபிச்செட்டிபாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்ன? என்பது பற்றி அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.
- ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். இதற்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கோரப்போவதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே கூறி வந்தோம். இப்போது அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.
அ.தி.மு.க.வை வீழ்த்தத்தான் அவர் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால் அவர் கனவில்கூட வீழ்த்த முடியாது.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். தனி மனிதராக ஆதரவு கேட்பதற்கும் கட்சி ஆதரவு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தனி மனிதருக்கு எந்த கட்சியும் ஆதரவு அளிக்காது.
நாங்கள் கூட்டணி தர்மப்படி இன்று மாலையில் பா.ஜனதா தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, பா.ம.க., த.மா.கா., புரட்சி பாரதம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கூட்டணி சகோதரர்களிடம் நாங்களே சென்று ஆதரவு கேட்போம்.
- ஈரோடு கிழக்கு தொகுதி நாங்கள் நின்று வெற்றி பெற்ற தொகுதி அல்ல. மாநில கட்சியான த.மா.கா. தான் அங்கு போட்டியிட்டது.
சென்னை:
சென்னையில் இன்று பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கே:- நீங்கள் தற்போது அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவித்துள்ளீர்கள். ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
ப:- அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, பா.ம.க., த.மா.கா., புரட்சி பாரதம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கூட்டணி சகோதரர்களிடம் நாங்களே சென்று ஆதரவு கேட்போம்.
கே:- ஆனால் கூட்டணி கட்சிகள் இப்போதும் எடப்பாடி பழனிசாமியுடன் தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை யாரும் அணுகினார்களா?
ப:- எங்களிடமும் கூட்டணி கட்சியினர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
கே:- உங்கள் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியும் 16 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை பா.ஜனதாவினர் சந்தித்து பேச உள்ளனர். ஒருவேளை பா.ஜனதா போட்டியிட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
ப:- பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டு அவர்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவித்தால் உறுதியாக ஆதரவளிப்போம். தேசிய கட்சியாக வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களுக்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்று கருதி ஆதரவு தெரிவிப்போம்.
கே:- இது விட்டுக்கொடுப்பதாக அமையாதா?
ப:- ஈரோடு கிழக்கு தொகுதி நாங்கள் நின்று வெற்றி பெற்ற தொகுதி அல்ல. மாநில கட்சியான த.மா.கா. தான் அங்கு போட்டியிட்டது. அவர்கள் தற்போது போட்டியிட விரும்பாத சூழலில் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் போட்டியிட விருப்பம் தெரிவிக்க உரிமை உண்டு.
அதன் அடிப்படையில் யார் ஆதரவு கேட்டாலும் தலைமை கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் பாரதிய ஜனதா போட்டியிட்டால் உறுதியாக நாங்கள் ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.