என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI"

    • நியூசிலாந்து பெண்கள் அணி இந்தியாவில் பயணம்செய்து ஒருநாள் தொடரில் விளையாடியது.
    • இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.

    துபாய்:

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

    பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடம் முன்னேறி 9-வது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்திற்கு வந்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்திசர்மா (703 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். ரேணுகா சிங் தாகூர் (424 புள்ளி) 4 இடம் முன்னேறி 32-வது இடத்திற்கு வந்துள்ளார்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது.
    • 83 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதனையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 45.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இப்போட்டியில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் வீரர் அமீர் ஜாங்கே தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 83 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    மேலும் இப்போட்டியில் 80 பந்துகளில் சதமடித்த அமீர் ஜாங்கே அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் 88 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கேப்டனாக செயல்பட்ட கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 10-ந் தேதி ராஜ்கோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியின் கேப்டனாக இருந்த கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேனுகா சிங் தாகூருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரிச்சா கோஷ் மற்றும் உமா செத்ரி விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது , சைமா தாகூர், சயாலி சத்கரே.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    ஹேமில்டன்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.

    மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    • இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் சிறந்த அணிகள் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆண்டுக்கான ஐ.சி.சி.-இன் ஒருநாள் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ள ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அணியில் இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளில் இருந்து தலா மூன்று பேரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

     


    ஐ.சி.சி.-இன் 2024 ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணியின் சரித் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அசலங்கா 605 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 50.2 ஆகும். இதில் ஒரு சதம், நான்கு அரைசதங்கள் அடங்கும்.

    இலங்கை அணி மட்டும் கடந்த ஆண்டு 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி ஏழு போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    2024 ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி பட்டியல்:

    சரித் அசலங்கா (கேப்டன்) - இலங்கை

    சயிம் ஆயுப் - பாகிஸ்தான்

    ரஹ்மனுள்ளா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான்

    பதும் நிசங்கா - இலங்கை

    குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்) - இலங்கை

    ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டு - வெஸ்ட் இண்டீஸ்

    அசமதுல்லா ஓமர்சாய் - ஆப்கானிஸ்தான்

    வனிந்து ஹசரங்கா - இலங்கை

    ஷாஹீன் ஷா அப்ரிடி - பாகிஸ்தான்

    ஹாரிஸ் ரவுஃப் - பாகிஸ்தான்

    ஏ.எம். காசன்ஃபர் - ஆப்கானிஸ்தான்

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

    இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

    ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
    • அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கட்டாக்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.

    இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

    இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

    அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:

    ஜோ ரூட் - 56, இயன் மோர்கன் - 55, ஐயன் பெல் - 39, பட்லர் - 38, கெவின் பீட்டர்சன் - 34

    • முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர்.
    • இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் களமிறங்கினர்.

    ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகீல் 8 ரன்னில் வெளியேறினார். பேட்டிங்கில் சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் 29 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    குறைந்த போட்டியில் விளையாடி 6000 ரன்கள் கடந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். அந்த பட்டியலில் பாபர் அசாம், ஹசிம் அம்லா 123 போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை கடந்துள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி (136 போட்டிகள்), கனே வில்லியம்சன் (139 போட்டிகள்), டேவிட் வார்னர் (139 போட்டிகள்), ஷிகர் தவான் (140 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

    • முதல் 10 ஓவருக்குப் பிறகு பவர்பிளே கோட்டிற்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்க வேண்டும் என்பது கொடூரமான விதி.
    • பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும்போது, ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் மூலம் பவுண்டரி அடித்து விடுகிறார்கள்.

    டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் வடிவில் விளையாடுவதற்குன ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-

    உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகிவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. இது விளையாடுவதற்கான மோசமான வடிவம். இதற்கு ஏராளமான காரணம் இருப்பதாக நினைக்கிறேன்.

    ஒருநாள் போட்டி வடிவத்திற்கான விதி பயங்கரமானதாக உள்ளது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். விக்கெட் எடுப்பதற்கும், எந்தவிதமான நெருக்கடிகை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்.

    தற்போது 11 முதல் 40 ஓவரை வரை நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர்பிளே கோட்டிற்கு வெளியே இருப்பதால், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும்போது அவருக்கு சற்று நெருக்கடி கொடுக்கும்போது, அவர் ஜஸ்ட் ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் செய்கிறார். இதனால் ஒரு ரன் மட்டுமல்ல நான்கு ரன்கள் கிடைக்கிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிறந்த ஆப்சனாக உள்ளது.

    இவ்வாறு மொயீன் அலி தெரிவித்தார்.

    தற்போது இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது. #EngvsPak
    லண்டன்:

    சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கார்டிப்பில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டியது அவசியமானதாகும்.

    இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 82 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 49 முறையும், பாகிஸ்தான் அணி 31 முறையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #EngvsPak
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சதம் அடித்தும் 6 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. #PAKvsAUS
    துபாய்:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் பகல்- இரவாக நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது.

    மேக்ஸ்வெல் 82 பந்தில் 98 ரன்னும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), உஸ்மான் கவாஜா 62 ரன்னும், அலெக்ஸ் கேரி 55 ரன்னும் எடுத்தனர். இமாத்வாசிம், முகமது ஹஸ்னர், யாஷீர்ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    278 ரன் இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது.

    16.3 ஓவர்களில் 74 ரன்னில் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டான ஆபித் அலி- முகமது ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.

    ஆபித் அலி 112 ரன் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தில் 104 ரன் எடுத்த முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்னே எடுத்தது. இதனால் அந்த அணி 6 ரன்னில் தோற்றது.

    ஆபித் அலி, முகமது ரிஸ்வான் அடித்த சதம் பலன் இல்லாமல் போனது. நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலியா 4-வது போட்டியிலும் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் நாளை நடக்கிறது. #PAKvsAUS
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது. #INDvsAUS
    புதுடெல்லி:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.

    தொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ரன்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    கடந்த ஆட்டத்தில் அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

    20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 136-வது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49-ல் ஆஸ்திரேலியா 76-ல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvAUS
    ×