என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "offer"

    • நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், நெய், வெண்ணெய், பன்னீா், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களையும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையுமின்றி விற்பனை செய்துவருகிறது.

    இதில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம்.

    அந்த வகையில், கிருஷ்ணஜெயந்தி (ஆக.26-ந்தேதி), விநாயகா் சதுா்த்தி (செப்.7-ந்தேதி) உள்ளிட்ட பண்டிகை களை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, ரூ.85-க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ.75-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

    இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
    • இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வாகும்.

    கோயம்புத்தூரில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் பிளாட் 50% விற்பனையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

    இது ஜனவரி முதல் 12, 2025 வரை நடக்கிறது. புத்தாண்டை நம்பமுடியாத சேமிப்புடன் பலதரப்பட்ட தயாரிப்புகளில் நம்பமுடியாத சலுகைகளுடன் தொடங்குவதற்கான வாய்ப்பு இது.

    லுலுவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், " லுலு பிளாட் 50% விற்பனையின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ, பிரச்சார டி- சர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

    இந்த நிகழ்வு பங்கேற்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இது ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும்.

    லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் பிராந்திய மேலாளர் மகேசன் கூறும்போது, முது பிளாட் 50% விற்பனை ஜனவரி 2025 பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வாகும்.

    மேலும் கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    இந்த நிகழ்வு ஜனவரி 9 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும். இது கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் நடத்தப்படும் லுலு பிளாட் 50%-ன் மூன்றாவது பதிப்பாகும். 

    1600க்கும் மேற்பட்ட பிராண்டுகள் சலுகை விற்பனையில் பங்கேற்கின்றன. அற்புதமான சேமிப்பை அனுபவிக்கவும், மகிழ்ச்சியுடன் ஆண்டைத் தொடங்கவும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

    சலுகைகள் குறித்து லுலு ஹைப்பர்மார்க்கெட்டின் பொது மேலாளர் பாலாஜியிடம் கேட்டபோது, "லுலு ஹைப்பர்மார்க்கெட் உங்களுக்கு பிடித்த பொருட்களுக்கு 50% தள்ளுபடியை வழங்குவதால், மேலும் சேமிக்கவும், அதிகமாக ஷாப்பிங் செய்யவும், மேலும் புன்னகைக்கவும் தயாராகுங்கள்.

    34000 க்கும் மேற்பட்ட பொருட்களில் எங்களிடம் தோராயமாக உள்ளது 50% சதுகையுடன் 15000 பொருள்கள் விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர் வசதிக்காக, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை கடை திறக்கப்படும்.

    மேலும், ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை கடை திறக்கப்படும். மளிகை சாமான்கள் முதல் கேஜெட்டுகள் வரை, பாஸ்மதி அரிசி முதல் பிரியாணி வரை, இந்த விற்பனை அனைவரின் தேவையும் பூர்த்தி செய்கிறது.

    இந்நிகழ்ச்சியில் லுலு ஹைப்பர் மார்கெட்டின் கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், நிதி மேவாளர் கணேஷ், மற்றும் இதர லுலு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின்தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது.

    இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவ ண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் இறக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா குத்துவி ளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியும், சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி. வாடிக்கை யாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

    தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் விற்பனை நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.

    விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் குமார் செய்திருந்தார்.

    • மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும், செஸ் போட்டியை காணவும் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
    • காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்பட்டுவிடுமோ.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டில் 54 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 29 லட்சம் பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.

    இரு வகை பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களே அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இதுவரை, பாட நூல், பாட குறிப்பேடுகள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி போன்ற அனைத்து சலுகைகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்து வந்தன.

    ஆனால், அண்மைக்காலமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிர்க்க ப்பட்டு வருகின்றனர்.

    மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

    ஐ.ஐ.டியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுச் செலவை அரசே ஏற்கும் என்ற சலுகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    எனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட ஷாநவாஸ் எம்.எல்.ஏ, இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

    • ரூ.999 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.777 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம்.
    • பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணத்தில் அதிகபட்சமாக ரூ.500 கட்டண சலுகையாக வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குகிறது.

    அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி வரை பிரீடம்-75 என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பாரத்பைபர் இணைப்பு மாதம் ரூ.449 மற்றும் ரூ.599 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.275 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம்.

    மேலும் மாதம் ரூ.999 திட்டத்தை தேர்ந் தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.777 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம். குறிப்பிட்ட சில தரைவழி பிராட்பேண்ட் திட்ட இணைப்புகளுக்கு வைபை மோடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதிய பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.500 கட்டண சலுகையாக வழங்கப்படுகிறது.

    தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கை–யாளர்கள், தங்களது தொலைபேசி எண்களை மாற்றாமலேயே பாரத் பைபர் திட்டத்திற்கு எந்த வித அதிக கட்டணங்களும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம்.

    மேலும் சலுகையாக மாதாந்திர கட்டணத்தில் ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். புதிதாக இணைப்புகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிர்மாண கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

    புதிய பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம்கார்டு இலவசமாக வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா தெரிவித்துள்ளார்.

    • முத்துமாரி (34) கடந்த மே மாதம் 23-ந் தேதி அன்று திருவேங்கடம் சாலை இணைப்புச் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது கார் மோதி பலியானார்.
    • கலாராணி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 358 மதிப்பெண்களும், வாணிஸ்ரீ 433 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

    சங்கரன்கோவில்:


    சங்கரன்கோவில் காந்தி நகர் 4-ம் கீழ தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் சங்கரன் கோவில் உள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார்.


    இவரது மனைவி முத்துமாரி (34) கடந்த மே மாதம் 23-ந் தேதி அன்று திருவேங்கடம் சாலை இணைப்புச் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது கார் மோதி பலி யானார்.


    இவர்களுக்கு கலாராணி, வாணிஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி இறந்த மறுநாள் பெரியசாமியின் மகள்களுக்கு 10-ம் வகுப்பு கணித பரீட்சை இருந்துள்ளது. பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்ற நினைப்பில் அவர் தன் மனைவி இறந்ததை குழந்தைகளிடம் சொல்லாமல் அவர்களை அவர்கள் பாட்டி வீட்டுக்கு அனுப்பி தங்க வைத்து மறுநாள் பரீட்சை எழுத வைத்துள்ளார்.


    தன் தாய் இறந்தது தெரியாமல் வழக்கம்போல் படித்துவிட்டு தேர்வு எழுதினர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யது.


    இந்நிலையில் கலாராணி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 358 மதிப்பெண்களும், வாணிஸ்ரீ 433 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர். தற்போது சங்கரன் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதாஅஜய்மகேஷ்குமார் ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பெரியசாமி வீட்டுக்கு சென்று பெரியசாமி மற்றும் அவரின் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.


    தொடர்ந்து 2 பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்காக ரூ. 20 ஆயிரம் வழங்கினார்.


    இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர நிர்வாகி பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய் மகேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முத்து மணி கண்டன், பாட்டத்தூர் சண்முகையா, சபரிநாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்து புதிதாக இரண்டு சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புது சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 519 மற்றும் ரூ. 779 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவை தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன.

    பயனர்கள் மத்தியில் அதிக பிரபலம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் புது சலுகைகள் பற்றிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும். சமீப காலங்களில் ரிசார்ஜ் கட்டணங்கள் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், குறைந்த விலை சலுகைகள் சற்றே ஆறுதலாக அமைந்துள்ளன.

    ரூ. 519 மற்றும் ரூ. 779 பிரீபெயிட் சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், மூன்று மாதங்களுக்கு 24\7 சர்கிள் சந்தா, இலவச ஹெலோ-டியுன்கள் மற்றும் இதர பலன்களை வழங்குகின்றன.


    ஏர்டெல் ரூ. 519 பலன்கள்:

    புதிய ஏர்டெல் ரூ. 519 சலுகை அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 90 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

    ஏர்டெல் ரூ. 779 பலன்கள்:

    ஏர்டெல் ரூ. 779 சலுகையும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 135 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

    இரண்டு புதிய சலுகைகளுடன் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள், மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24\7 சர்கிள் சந்தா, பாஸ்டேக் மீது ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோ-டியுன்கள், விண்க் மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்த போதிலும் 64Kbps வேகத்தில் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம். இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் ஏர்டெல் வலைதளத்தில் கிடைக்கின்றன.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். அதன்படி பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.150 ரிசார்ஜில் ஃபுல் டாக்டைம் பெறலாம்.

    விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த சலுகை மிக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது பற்றி வெளியாகி இருக்கும் அறிவிக்கையின் படி ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15, 2022 துவங்கி ஆகஸ்ட் 21, 2022 வரை வழங்கப்படும். முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட புது சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.

    இவை தவிர பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    • ரேசன் கடைகளில் இ.சேவை மையங்களை நடத்த இயலாது: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் அறிவித்தூர்.
    • கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சலுகை, உரிமை வழங்க கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த அகவிலைப்படி பெற்று வந்தனர்.

    கொரோனா காலத்தில் ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. தலைமை அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது.

    கடந்த ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள ரேசன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 90 சதவீத பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜூன் 10ம் தேதி 7 அம்ச கோரிக்கையுடன் காத்திருப்பு போராட்டடம் நடத்தினோம். அன்று முத-அமைச்சரை சந்திக்க இயலவில்லை.

    தலைமை செயலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக, முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து, ரேசன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அரசு பணியாளர்களில் மிகவும் பலவீனமான பகுதியினர் என சத்துணவு, துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் பேர் உள்ளனர். அத்தகைய ஊழியர்கள் எல்லா அரசு பணியாளர்கள் போல் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வது கிடையாது.

    அத்தகைய பணியாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு விரும்பாத பொருட்களை தலையில் கட்டும் சூழல் இருப்பதால் சில சிக்கல்கள் வருகிறது. மக்களின் விருப்பத்தை ஆண்டு தோறும் கேட்டு, வழங்கினால் பிரச்னைகள் வராது. கருவிழி திரை மூலம் பொருட்கள் வழங்கும் முறைக்கு வரவேற்கிறோம். நுாறு சதவீத கணினி மயமாக்கம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டது.

    கணினி மயமாக்கத்தில் மில்லில் இருந்து பொருட்கள் குடோனுக்கும், குடோனில் இருந்து ரேசன் கடைக்கு வரும் வரை ஆய்வு செய்வதிற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. தவறுகள் தொடங்கும் இடத்தில் ஆய்வு செய்தால், ஒட்டுமொத்தமாக தவறில்லாத நிர்வாகம் நடக்கும்.

    கணினி மயமாக்கத்தில் சில குறைகள் உள்ளது. எல்லா கடைகளிலும் மோடம் இல்லை. பழைய பி.ஓ.எஸ்., மிஷின்கள் உள்ளது. தரமான பி.ஓ.எஸ்., மிஷின்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்சிவக்குமார், மாநில பொருளாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 விலை சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் 400 எம்.பி. கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூன்று சலுகைகளிலும் பயனர்களுக்கு முறையே 1.4 ஜி.பி., 1.9 ஜி.பி. மற்றும் 2.4 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரூ.129 மற்றும் ரூ.249 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகளுடன் ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டது. ஏர்டெல் ரூ.499 சலுகையில் முன்னதாக தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் 400 எம்.பி. கூடுதல் டேட்டா தவிர ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய 4ஜி சாதனம் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இதுதவிர நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் ரூ.448 சலுகையில் முன்னதாக 1.5 ஜி.பி.க்கு பதில் தினமும் 1.9 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகையும் 82 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதிலும் நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா, விண்க் மியூசிக் சந்தா மற்றும் கேஷ்பேக், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டாவுக்கு பதில் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இச்சலுகையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் இதுவரை ஏர்டெல் வலைதளத்தில் மாற்றப்படவில்லை.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் வருடம் முழுக்க தினசரி டேட்டா, அன்லமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.



    ஐடியா செல்லுலார் நிறுவனம் சிட்டிபேங்க் உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுக்க டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கியது. தற்சமயம் இந்த சலுகை வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    வோடபோன் சிட்டிபேங்க் சலுகை ஏற்கனவே ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டதை போன்ற பலன்களை வழங்குகிறது. அதன்படி பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை ஜூலை 31, 2019 வரை வழங்கப்படுகிறது. இச்சலுகை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.



    புதிய சலுகையை பெற பயனர்கள் ஏற்கனவே வோடபோன் பிரீபெயிட் சேவையை பயன்படுத்த வேண்டும். பின் வோடபோனின் சலுகைகள் இடம்பெற்றிருக்கும் வலைதளம் சென்று புதிதாக கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு வாங்கியதும், குறைந்தபட்சம் ரூ.4000 பயன்படுத்தினால் இந்த சலுகையை பெறலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று கிரெடிட் வாங்கிய முதல் 30 நாட்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த தொகையை ஒரே சமயமும் பயன்படுத்தலாம், சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.
    ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. கடந்த வாரம் ரூ.299 விலையில் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

    இதில் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏர்டெல் டி.வி. பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. இதில் ஜீ5, HOOQ, நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.



    வாடிக்கையாளர்கள் ரூ.249 சலுகையை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும்.

    இத்துடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.129 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் டி.வி. மற்றும் வின்க் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
    ×