என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "offerings"
- இறை வழிபாட்டில் நைவேத்தியம் என்பது முக்கிய நிகழ்வாகும்.
- சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நைவேத்தியம்.
இறை வழிபாட்டில் நைவேத்தியம் என்பது முக்கிய நிகழ்வாகும். மூலவர் விக்கிரகத்தின் அளவிற்கும், 'பிரகார தெய்வங்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப சாஸ்திரத்தில் ஒரு கணக்கீடே உள்ளது. அந்த கணக்கீட்டின்படி, மூலவர் அகலம், உயத்துக்கு ஏற்ப சரியான அளவு நைவேத்தியம் தயாரித்து இறைவனுக்கு சமர்ப்பித்து வந்தால், அந்த ஆலயம் உயிரோட்டமாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். இந்த நைவேத்தியம் இறைவனுக்கு படைக்கப்படும்போது, அதில் ஒரு பகுதியானது, அந்த கோவிலை பாதுகாக்கும் பூத கணங்களுக்கும், இறைவனிடம் வேண்டுதலை கொண்டு சேர்க்கும் தேவதைகளுக்கும் உணவாக மாறுகிறது. சில ஆலயங்களில் உள்ள வித்தியாமான நைவேத்தியங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தேங்காய் துருவலும், துலுக்க நாச்சியார் சன்னிதியில் ரொட்டி, வெண்ணெய், கீரையும் நைவேத்தியமாக வைக்கின்றனர்.
கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணம்மிக்க கஷாயம் நைவேத்தியமாகும்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் 'முனியோ தாயன் பொங்கல்' எனும் அமுது படைக்கப்படுகிறது.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவிலில் ஆத்ம நாதருக்கு, புழுங்கல் அரிசி சோறும், பாகற்காய் கறியுமே நைவேத்தியம்.
மதுரை கள்ளழகருக்கு, முழு உளுந்தை ஊற வைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு, சுடச்சுட நெய்யப்பம் செய்து படைத்துக் கொண்டே இருக்கின்றனர். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
கேரளாவில் உள்ள திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளை சாறு எடுத்து, அதைப் பாலுடன் கலந்து ஈசனுக்கு நைவேத்தியமாக படைக்கின்றனர். பின்னர் அது பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த மூலிகைப் பால் வயிற்றுக் கோளாறை நீக்கும் சக்தி கொண்டது.
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன்படியைத் தாண்டி படைக்கப்படும் ஒரே நைவேத்தியம், மண் சட்டியில் வைக்கப்படும் தயிர் சாதம் மட்டுமே.
சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் சுண்டக் காய்ச்சிய பால் பாயசம் நைவேத்தியமாக படைக்கின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்தியம்.
- திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.
- 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.
கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது.
7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
- வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது உண்டியல் எண்ணிக்கையில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன் ஆகி யோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
- காப்பு கட்டிய பின்னர், தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
- சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பக்தர்கள் முதலில் கடலில் நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.
தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய பின், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு என்பதை தங்களது வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
உடன்குடி, பரமன்குறிச்சி, சீர்காட்சி, தாண்டவன் காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டபத்து மற்றும் குலசேகரன் பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் திரும்பிய திசைகள் எல்லாம் தசரா பக்தர்கள் வீதி,வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்யும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை 10-ம் திருநாளான வருகின்ற 24-ந் தேதி கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு குலசேகரன் பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹார காட்சி நடைபெறும். மறுநாள் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
- கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா
- சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா
சித்தூர்:
காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா வந்து அருள் பாலித்தார்.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 18-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து மாலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவின்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 19-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. அதன்பிறகு பூலங்கி சேவை வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
- 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.
- கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும். மற்ற கோவில்களில் 9 நாட்கள், 11 நாட்கள், 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
பிரம்மோற்சவ விழாவின் 13-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை ராவணாசூர வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் வரசித்தி விநாயகர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை யாளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக அகரம்பள்ளி, சின்னகாம்பள்ளி உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து யாளி வாகன வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பொய்யாமொழி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- கள்ளழகர் கோவிலுக்கு 2 ஆயிரம் மூட்டை நெல்லை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினார்கள்.
- ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
அலங்காநல்லூர்
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
அப்போது பக்தர்கள் காணிக்கையாக உண்டிய லில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டுமின்றி, நேர்த்திக்கடனாக தங்களது நிலத்தில் விளைந்த நெல் மணிகளையும் கள்ளழகர் என்ற சுந்தரராஜா பெரு மாளுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இதற்காக நெல்மணிகளை கொட்டி வைக்க தனி இட மும் ஆலயத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 28ஆயிரத்து 830 கிலோ (2ஆயிரம் முட்டை கள்) நெல்மணிகள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை ஏலம் விட்டு அளவீடு செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக கோவில் நிர்வாகத்தினல் செய்து வந்தனர். இதில் கோவிலுக்கு வருவாயாக ரூ.20 லட்சத்து 61ஆயிரத்து 280 கிடைத்துள்ளது. முந்தய ஆண்டு ஒரு லட்சம் கிலோ நெல்மணிகள் காணிக்கை யாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ நெல்மணி கூடுதலாக காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
பரமத்தி வேலூர்:
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் , பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், வேலூர் மகாமாரியம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்த்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில் ,ராஜா கோவில், பாண்டமங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன் கோவில், கொந்த ளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்