என் மலர்
நீங்கள் தேடியது "Office"
- சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
- சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.
வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில் களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லாபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உங்கள் லாபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வாடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.
சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா.கீழ் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உணவு பொருள் சிறுதொழில்:
1.மசாலா பொடி தயாரிப்பு
2.ஊறுகாய் தயாரிப்பு
3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு
4.ஜாம் தயாரிப்பு
5.சிப்ஸ் தயாரிப்பு
6.அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு
7.மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு
8.சிறு உணவகம்
9.டீ கடை
10.ஜூஸ் கடை
11.சிற்றுண்டி விற்பனை கடை
12.இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு
சிறு விற்பனை தொழில்கள்:
13.ஆடைகள் விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யலாம்).
14.சிறு பாத்திரங்கள் விற்பனை,
15.அழகு சாதன பொருள்கள் விற்பனை
16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை
17.வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை
18.பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை
19.பழம் விற்பனை
20.காய்கறி விற்பனை
ஆபீஸ்களுக்கு எழுதுபொருள் விற்பனை
பண்ணை சிறு தொழில்கள்:
21.முயல் வளர்ப்பு
22.கோழி மற்றும் காடை வளர்ப்பு
23. தேனீ வளர்ப்பு
24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால் நல்லது )
மேற்கண்ட பண்ணை தொழில்கள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது. இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழிகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்குமிடங்களை தெரிந்து கொள்வது .
மூன்றாவது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைத்தல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும்.
நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் 5 முக்கிய வேலைகளை ஒவ்வொன் றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலை களை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம்.
ஐந்தாவது மனக்காட்சி படுத்துதல் உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் உங்களின் படைப்பு திறனை முடிவாகிவிடுதல். 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடிந்தால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும். உங்கள் நிறுவன கணக்கில் ஏராளமான பணம், கார் பங்களா, வெளிநாடு சுற்றுலா மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்த வேண்டும்.
- எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.
தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.
தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.
சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.
முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
- புங்கனூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
- அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் சட்டமன்ற தொகு–தியை உள்ளடக்கிய மணி–கண்டம் ஊராட்சி ஒன்றி–யத்திற்குட்பட்டது புங்க–னூர் ஊராட்சி.
அமைச்சர் திறந்துவைத்தார்
2,975 ஆண்கள் மற்றும் 3,094 பெண்கள் என மொத்தம் 6,069 மக்கள் தொகை கொண்ட புங்க–னூரில் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்திற்கென ரூ.17.64 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பி–ரதீப்குமார் தலைமை தாங்கினார். புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்துவைத்து குத்து–விளக்கேற்றினார்.
அறைகள்
ஊராட்சி மன்றத் தலைவ–ருக்கான அறை, வார்டு உறுப்பினர்களுக்கான கூட்ட அறை மற்றும் ஊராட்சி செயலருக்கான அறைகளுடன் இந்த ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் கங்காதாரணி, புங்கனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தாமோதரன்,
ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, புங்கனூர் கவுன்சிலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் வயலூர் மணிமேகலை முருகேசன், சேதுராபட்டி வசந்தா தங்கரத்தினம் , ஆளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, சோமரசம்பேட்டை குணவதி துரைப்பாண்டியன், அம்மாபேட்டை தமிழ்ச்செல்வி காந்தி மற்றும் புங்கனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் கண்ணன்,
தி.மு.க. பிரதிநிதிகள் கைக்குடி சாமி, ரெத்தினமூர்த்தி சுப்பிரமணி, சண்முகம், முருகேசன், அய்யாதுரை, சண்முகப்பிரியா, கருப்பையா, சண்முகம், தங்கவேல், அமிர்தராஜ், பாலன், கார்த்திக், சுதாகர், அன்பு, மூக்கன், தீனன், ரமேஷ், வசந்த், முன்னாள் துணைத் தலைவர் வெங்கட் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
- நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை.
- ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதி க்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் கலெ க்டர்அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசி யதாவது:-
இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கவும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை, ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாற்றுத்தி றனாளி நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 59,150 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். முகாமில் வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வேளாண் இணை இயக்குனர் அகண்டாராவ், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி, மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜ், பாஸ்கர் தாசில்தார் ஜெயசீலன் தனி வட்டாட்சியர்கள் ரமேஷ், வேதையன், மாதவன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் 2022-23ஆம் ஆண்டிற்கு " டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது" ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது 2023ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை இந்த மாதம் 30-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
- போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.
பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்.
- குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாளை (வியாழக்கிழமை) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1, வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.
ஆகவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் புறநகர் பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
- ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.
பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.
அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.
சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.
பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
- இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த வீடுகளையும் இடித்து பயனாளிகள் தயாராகினர். ஆனால் 6 மாதமாகியும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை.
குறிப்பாக அந்த அலுவலக நிர்வாக பொறியாளர், அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும், மற்றவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த வீட்டை இடித்து விட்டோம். புதிய வீடும் கிடைக்காததால் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும், உடனே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். வீடுகளை கட்டி தராவிட்டால் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தும், அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர். கூடுதல் ேபாலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வரவேற்றார்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, டி.எஸ்.பி. வசந்தராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார், 30-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஜய், 35-வது வார்டு கார்த்திக், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.
- சிந்துப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகா உட்பட்ட காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இதுவரையில் செயல்பட்டு உள்ள சிந்துபட்டி சார்பதிவு அலுவலகம் செல்லம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிந்து பட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதி மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்லம்பட்டி செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைக்கு இப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிந்து பட்டி கிராமத்தில் உள்ள கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று வரை நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இங்கிருந்து செல்லம்பட்டி செல்ல வேண்டுமானால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யாமல் சிந்துபட்டியிலேயே தொடர்ந்து இயங்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.