search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Olympiad"

    • சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது.
    • சமூக ஆர்வலர்கள் டிக்சன் குமார், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சகி-ஒன் ஸ்டாப் சென்டர் சார்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் முத்து மாரியப்பன் வரவேற்று பேசினார். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது. சமூக ஆர்வலர்கள் டிக்சன் குமார், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கனகராஜ் செஸ் ஒலிம்பியாட் குறித்து உரையாற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தை மணி, வார்டு கவுன்சிலர்கள் கலாநிதி, வினோதினி, செல்வவிநாயகம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், சகி-ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    • தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் ஒலிம்பியாட் கோலம் வரையப்பட்டது. மேலும் சிலம்பம், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளையும், 19 நபர்களுக்கு தலா ரூ.1,000-க்கான வங்கி வரைவோலைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசாக வழங்கினார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடுகளை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் பறக்க விட்டனர்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவிற்கு வருகை தந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் ஒலிம்பியாட் சின்னம் அச்சிட்ட தொப்பிகள் அணிந்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு–வலர் கதிரேசன், உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செஸ் சங்கத்தினர், பயிற்சி–யாளர்கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
    • அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.

    அதன்படி வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக

    நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் வரவேற்றார்.

    இந்த ஜோதி ஓட்டமானது சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் தொடங்கி தலைஞாயிறு, கீவளுர், வேளாங்கண்ணி வழியாக நாகை சென்றடைகிறது. தலைஞாயிறுக்கு வந்தபோது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ,நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகர மன்ற ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், தாசில்தார் ரவிச்சந்திரன்ரூ, பேராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் கதிரவன் , செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , வணிகர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி ல்வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் ,முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், மேகலா மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து துறைஅதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக விழிப்புணர்நடத்துவது என்றும், வருகிற 27ஆம் தேதி வேதாரண்யத்தில் மிக பிரம்மாண்டமான விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள்.
    • 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் வைத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் ஒலிம்பியாட் சின்னம் வரையும் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

    பரிசளிப்பு விழாவில் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்புரை ஆற்றினார். இலஞ்சி டேனியல் கல்லூரி நூலகர் ஏஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார்.

    ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை விஜி முத்துமாரி மற்றும் கார்த்திக் செய்திருந்தனர்.

    • வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரிய அளவிலான செஸ் போர்டு வரைந்திருந்தனர்.
    • அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பெரிய செஸ் போர்டை பார்வையிட்டனர்.

    ‌ராசிபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரிய அளவிலான செஸ் போர்டு வரைந்திருந்தனர்.

    இதனை நாமக்கல் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் தெய்வம், வட்டார இயக்க மேலாளர் முருகேசன், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருணாகரன், கலைச்செல்வி, கலா, மணிமேகலை மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பெரிய செஸ் போர்டை பார்வையிட்டனர்.

    • இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஸ்டிக்கர்களால் அலங்கரிக்ப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    கே.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி, செல்வம் கல்லூரி, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மேல்நிலைப்பள்ளி, செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • தமிழ்நாட்டில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி லோகோ சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
    • இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    இதை தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் "தம்பி" என்கிற சின்னத்தினையும் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி அறிமுகப்படுத்தினார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்து அனைத்து தரப்பி–னரிடையேயும் விளம்பரம் செய்யும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே செஸ் போட்டிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் சின்னம் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், உழவர் சந்தை, பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் இது வைக்கப்பட்டு உள்ளது.

    ஜார்ஜியாவின் நடந்து வரும் 43-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், தனது கொலம்பிய நாட்டு தோழியும், செஸ் கிராண்ட்மாஸ்டருமான ஏஞ்சலோ பிராங்கோவிடம் காதலை வெளிப்படுத்தினார். #BatumiOlympiad2018 #NikleshJain
    பாதுமி:

    43-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது சுற்று தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், தனது கொலம்பிய நாட்டு தோழியும், செஸ் கிராண்ட்மாஸ்டருமான ஏஞ்சலோ பிராங்கோவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

    பிராங்கோவின் முன்பு மண்டியிட்டு நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். அவரும் ஏற்றுக்கொள்ளவே, அவரது விரலில் மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்வை கண்ட மற்ற செஸ் வீரர், வீராங்கனைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.  #BatumiOlympiad2018 #NikleshJain
    ×