என் மலர்
நீங்கள் தேடியது "onam"
- இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார்.
- போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
- இட்லி சாப்பிடும் போட்டியில் 60 பேர் பங்கேற்றனர்.
கேரளாவின் கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
இப்போட்டியில் 60 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 50 வயது முதியவர் ஒரே நேரத்தில் 3 இட்லிகளை வாயின் உள்ளே திணித்துள்ளார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியதால் அவர் மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.
பின்னர் சுற்றி இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
- ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனியக்குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்றய தினம் அவரது தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும் இன்று திக்கணங்கோடு சந்திப்பில் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை தொடங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Dr. பினுலால் சிங், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு. ராஜேஷ்குமார், சி.பி.எம் மாவட்ட செயலாளர் திரு செல்லசாமி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராஜசேகரன், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் நேற்றய திருவட்டாரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

- விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
- விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்று வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி. "நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது.
இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது என்பது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெங்களூரில் உள்ள அபார்ட்மெட் ஒன்றில் நடந்த சம்பவம் பலரின் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
- கோலத்தை அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அபார்ட்மெண்ட் வீட்டில் குடியிருப்பது சில நேரங்களில் உதவியாகவும் சில நேரங்களில் உபத்திரவமாகவும் இருப்பது வழக்கம். அந்த வகையில் பெங்களூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் நடந்த சம்பவம் பலரின் கண்டனங்களைக் குவித்து வருகிறது. கேரளாவில் பிரதானமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழகம் உட்படத் தென் இந்திய மாநிலங்களிலும் சமீபகாலமாக அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சம்பீஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மெண்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பங்கள் ஒன்றிணைத்து ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பகுதியாக அபார்ட்மெண்ட் பொது தளத்தில் உள்ள பகுதியில் சிறுவர் சிறுமிகள் ஒன்றிணைத்து வரைந்த பூக்கோலத்தை அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வந்த நடுத்தர வயது பெண் ஒருவர் காலால் அளித்துள்ளார். கோலம் போடுவோர், அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டியது தானே, பொது இடத்தில் ஏன் போட வேண்டும் என்று கேட்டு அவர் கோலத்தை அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இயல், இசை, நாடகம் போன்ற பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ராசிகா, ஆயிஷத்துல் நஷீதா கலந்து கொண்டனர். கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இயல், இசை, நாடகம் போன்ற பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை இனிய தமிழ் சங்கம், கலை மற்றும் இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். விழாவின் ஒருங்கிணைப்பாளர் மின் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நெடுமால் புகழேந்தி நன்றி கூறினார்.
- மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
- வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வள்ளியூர்:
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சிறப்பு, கொடுத்தல், பரிமாறுதல், அன்பு செலுத்துதல் ஆகியவற்றை பள்ளியின் முதல்வர் எடுத்து கூறினார். பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து திருவாதிரை நடனமாடி பள்ளி மாணவர்கள் மகிழ்ந்தனர்.
- கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.
- ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும் என்றார்.
கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.
இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
- கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, ரோஜா பூ, கேந்தி பூ உள்ளிட்ட பூக்கள் இந்த சந்தைகளுக்கு விற்பனைக்காக விவசாயி கள் கொண்டு வருவார்கள்.
கடந்த சில நாட்களாக பூக்கள் விலை இல்லாததால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் மற்றும் கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1100-க்கும். கேந்தி பூ கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனை ஆகிறது.
வரக்கூடிய நாட்களில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரி விக்கின்றனர் இதனால் இப்பகுதியில் உள்ள பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்.
திருப்பூர் :
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி( வியாழக்கிழமை ) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வரும் செப்டம்பா் 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும். திருப்பூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண திருவிழா நடைபெறும். இந்தாண்டும் பக்த பேரவை சார்பில் 7-ம் ஆண்டு திருவோண திருவிழா நடந்தது.
விழாவையொட்டி காலையில் அத்திப்பூ கோலமிடுதல் நிகழ்ச்சி மற்றும் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பக்த பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழாவில் பண்பொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர்.
சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குழல்வாய் மொழியம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஷ்ராம் தலைமை வகித்தார். மேலும் பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ்ராம், பள்ளி முதல்வர்கள் பொன் மனோனியா, புஷ்பா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
ஓணம் பண்டிகையையொட்டி மாணவ, மாணவிகள் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். ஓணம் பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவ -மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினர்.
In these difficult times, with prayers in my thought, greetings today on the auspicious ThiruOnam. I am sure Lord Mahabali will strengthen our resolve to tide over the challenges and rebuild Kerala. The entire nation is with you.
— Nirmala Sitharaman (@nsitharaman) August 24, 2018