என் மலர்
நீங்கள் தேடியது "order"
- தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-
லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.
லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.
அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.
தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை
லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.
- கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
- கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
தாராபுரம்:
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தங்கள் செயல்திறனை சுயமதிப்பீடு செய்து மேம்படுத்திக்கொள்ள, PINDIC என்ற செயலியை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கடந்த, 2019ல் அறிமுகப்படுத்தியது.
1 முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து ஆசிரியர்களும், இந்த மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். இதற்கென ஆசிரியர்களுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குரிய படிவங்கள் 'எமிஸ்' தளத்தில் பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தலைமையாசிரியர் மேலாய்வு செய்து உரிய தரநிலை வழங்குவார்.பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களின் செயல்திறன்கள் ஆராயப்படுகின்றன. கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
நடப்பாண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொள்ள, 2023 ஜனவரி 25-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையதள செலவினங்களுக்காக, ஆசிரியர் ஒருவருக்கு, 10 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு.
- கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அனைத்து பள்ளி வாகனங்களிலும் சென்சார் உடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட அரசாணையில் உள்ள துணை விதியின் குறிப்பிட்டுள்ளபடி பொருத்தப்பட வேண்டும் என இதன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி வாகனங்களில் சென்சார் உடன் கூடிய கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பொருத்தப்படாமல் இயக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
- வேளாண் விளைபொருட்கள் கிட்டங்கியை தரமானதாக கட்டி முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
- விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப் பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
இந்த திட்டத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையினரால் கட்டப்படும் தடுப்பணைகள்நல்ல நிலையிலும், தரமானதாகவும், விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய வகையி லும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களை தேர்வு செய்து கட்டப்பட வேண்டும்.
கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் நீர்மட்ட அளவு மேலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயன்களை நேரில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை துறையினரால் இந்த திட்டத்தின் மூலம் ராஜபாளையம் வடக்கு தேவதானத்தில் கட்டப்பட இருக்கும் வேளாண் விளை பொருட்களின் கிட்டங்கி கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி, தரமானதாக கட்டி முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்டராமன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கோவில் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண் விளைபொருட்கள் கிட்டங்கியை தரமானதாக கட்டி முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்தது.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
இந்த திட்டத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையினரால் கட்டப்படும் தடுப்பணைகள்நல்ல நிலையிலும், தரமானதா கவும், விவசாயி களுக்கு பயன்தரக்கூடிய வகையி லும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களை தேர்வு செய்து கட்டப்பட வேண்டும்.
கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் நீர்மட்ட அளவு மேலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயன்களை நேரில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை துறையினரால் இந்த திட்டத்தின் மூலம் ராஜபாளையம் வடக்கு தேவதானத்தில் கட்டப்பட இருக்கும் வேளாண் விளை பொருட்களின் கிட்டங்கி கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி, தரமானதாக கட்டி முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்டராமன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கோவில் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
- வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட்டு ள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு திருமங்கலம் தினசரி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவி ன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் தாசில்தார் சிவராமன் தலைமையில் நடந்தது.
இதில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், டவுன் பிளானிங் அதிகாரி வேல்முருகன், கவுன்சிலர் திருக்குமார், வீரக்குமார். வருவாய்த்துறை சார்பில் சர்வேயர் ரம்யா மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மணிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.
- பெரியபட்டினத்தில் வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
- யூனியன் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
துணைத் தலைவர் சிவலிங்கம்: மாயாகுளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் 100 நாட்கள் பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்துகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
பைரோஸ்கான்: பெரியபட்டினம் ஊராட்சியில் ஜலாலியா நகர், தங்கையா நகர் ஆகிய பகுதிகளில் 2011-ம் ஆண்டு 80 பேருக்கு அரசு இலவச பட்டா வழங்கி உள்ளது.இந்த இடத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மக்களை வீடுகளை விட்டு காலி செய்யுமாறு ஊராட்சி தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
கமிஷனர்: இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி: காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கழுநீர்ஓடை, அலை வாய்க் கரைவாடி, ஸ்ரீநகர், கோகுலம் நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வருவதில்லை. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலாராணி: இந்த யூனியன் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கோரிக்கையை யாரும் முழுமையாக கேட்பதி ல்லை. எங்களின் குரலை கேட்டால்தான் மக்களின் குரலை நிவர்த்தி செய்ய இயலும். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமுருகன்: ஆலங்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்த கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் நீரை தேக்க வழி இல்லாமல் உள்ளது. ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
சுமதி ஜெயக்குமார்: முத்து ப்பேட்டை ஊராட்சியில் ஏராளமானோருக்கு டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறி உள்ளது. கொசு மருந்து அடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியபட்டினம் கவுன்சிலர் பைரோஸ் கான்: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பி.டி.ஓ. கணேஷ் பாபு நன்றி கூறினார்.
- தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்ட் ஆணை அரியலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020ம் ஆண்டில் பாரதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பாரதி (வயது43). இவர் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் திட்டத்திற்கான காப்பீட்டு சேவையான யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சந்ததாராக உள்ளார். இந்நிலையில், பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020ம் ஆண்டில் பாரதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1லட்சத்து 98 ஆயிரத்து 308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டபடி பணத்தை வழங்காததால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதி கடந்த நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அறிவிப்பை பெற்று கொண்டு விசாரணை நாளில் நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில் யாரும் ஆஜராகததால், எம்டி இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடி வாரன்ட் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
- 7 நாட்களுக்குள் மாற்றித்தர நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- வழக்கு தொடுத்த 12 நாட்களில் உத்தரவு
அரியலூர்,
அரியலூர் நகரில் வசிப்பவர் கிரி மனைவி கற்பகவள்ளி(வயது55). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியபோது வீட்டுக்கு பொருத்துவதற்கு தண்ணீர் குழாய்களையும், அதற்கு தேவைப்படும் இதர பொருள்களையும் ரூ.47,000 செலுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார்.ஆனால், தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்ட 3 மாதத்தில் கசிவு, குழாய் அடைப்பு, பாசி பிடித்தல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து குழாய்களை விற்பனை செய்தவரிடம் கற்பகவள்ளி புகார் தெரிவித்துள்ளார். இதனை உற்பத்தியாளருக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.ஆனால் பல மாதங்களாகியும் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் பிரச்சினையை சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.இதையடுத்து கடந்த மாதம் 14 ஆம் தேதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு உற்பத்தியாளருக்கும், விற்பனையாளருக்கும் ஆணையத்திலிருந்து அறிவிப்பு அனுப்பி கடந்த 12 -ந் தேதி முதல் விசாரணை தொடங்கியது.இதில், கடந்த 24 -ந் தேதி சமரச அறிக்கை மாவட்ட ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினமே குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையாக (வரைவோலையாக) வழங்கினர்.இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, சமரச அறிக்கையின்படி குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனம், விற்பனை செய்த குழாய்களையும் இதர பொருள்களையும் எடுத்துக்கொண்டு வழக்கு தொடுத்தவருக்கு ஒரு வார காலத்துக்குள் தரமான குழாய்களையும் இதர பொருள்களையும் வழங்கவேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
- உரிய உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து 3 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் மாதவாலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மாதவாலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.
எனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி கடையால் எங்கள் குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கிராம பஞ்சாயத்து தரப்பில், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர், ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி ஆடு, பன்றி ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
மேலும் இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வக்கீல் கூறியுள்ளார். எனவே உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானையை வனத்துறையினர் பராமரிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
- யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்த வர் சேக் முகமது. இவர் 56 வயதான லலிதா என்ற யானையை வளர்த்து வருகிறார்.
கடந்த ஜனவரி 1-ந் தேதி இந்த யானை தேனி மாவட்டத்தில் இருந்து கோவில் விழாவிற்காக விருதுநகர் கொண்டு வரப்பட்டது. அந்த யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது. இதில் யானைக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த வனத்துறையினர், யானையை உரிமையாளர் ராஜபாளையத்திற்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கவில்லை. அந்த யானையை விருதுநகர் ரெயில்வே காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டிவைத்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அதன் காயங்கள் ஆறாமல் உள்ளது என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரகர் துணை இயக்குநர் திலிப்குமாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த யானையை பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையா ளரிடம் இருந்து அபராதமாக பெற்று விருதுநகரிலேயே யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்தநிலையில் விருதுநகரில் சிகிச்சை பெற்று வரும் யானையை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். அப்போது அவர் யானையின் பராமரிப்பு, அதற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார்.
- மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
விழுப்புரம்:
மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் விடுதிகளில் தங்கி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய உணவு, அடிப்படை பொருட்கள், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வழிவகுத்துள்ளார்.அதனடிப்படையில், மயிலம் ஆதிதிராடர் நல மாணவியர் விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, படுக்கையறை வசதி, மின் வசதி, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாள்தோறும் விடுதியினை தூய்மைப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள விடுதி காப்பாளாருக்கு அறிவுறுத்தப்பட்டது. விடுதி ஆய்வி ன்போது, காப்பாளர் விடுதியில் இல்லா மலும், தின ந்தோறும் விடுதியில் தங்காமல் சென்று விடுவதும், மாணவி யர்கள் தங்கி பயில நடவடிக்கை மேற்கொ ள்ளாமல் இருந்ததும், மாணவி யர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் முழுமையான அளவில் இல்லாது இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆகையால் காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளும் நேரத்தில், விடுதியில் ஏதேனும், முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில், விடுதி காப்பாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும், நடப்பாண்டிற்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தினை சிதற விடாமல் நல்ல முறையில் படித்த அதிக மதிப்பெண் பெற்றிட வேண்டும் என மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். ஆய்வின்போது, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உட்பட பலர் உள்ளனர்.