என் மலர்
நீங்கள் தேடியது "Padayatra"
- யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
- மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டார்.
இந்த யாத்திரை 9 மாநிலங்களை கடந்து 108-வது நாளான நேற்று காலையில் டெல்லியை சென்றது. டெல்லி மாநில எல்லையான பதர்பூர் சென்றதும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ராகுல் நடைபயணம் சென்றார். இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழிநெடுக ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றார்கள்.
சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்பட ராகுல் குடும்பத்தினரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பேரணியில் பங்கேற்றார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது கட்சியினர் 250 பேருடன் பேரணியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல், கார்கே, கமல் உள்ளிட்டோர் பேசினார்கள்.
மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பேரணியில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை.
சோனியா முகக்கவசம் அணிந்து இருந்தார். பிரமாண்ட கூட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்து வந்தனர்.
நேற்றைய நடைபயண நிறைவில் ராகுல் பேசும்போது, `2,800 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கேயும் நான் வன்முறையை பார்க்கவில்லை.
இந்த பாதயாத்திரை இந்தியாவை இணைப்பதை தான் நோக்கமாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக வெறுப்பு, வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை தான் பரப்பும்' என்றார்.
நடைபயணத்துக்கு 7 நாட்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மீண்டும் 1-ந்தேதி அவரவர் கண்டெய்னர்களில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கண்டெய்னர்களில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் குளிர் சாதன வசதிகளை அகற்றி விட்டு ஹீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த சில நாட்களில் நிறைவடையும். அதன்பிறகு மீண்டும் பாதயாத்திரையை ராகுல் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
- தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
- பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல்லடம் :
ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.
பெரும்பாலும் சாலையோரமாகவும்,நெடுஞ்சாலைகளை கடந்தும் செல்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான தனி நடைபாதை திண்டுக்கல் முதல் பழனி வரை இருப்பதை போல் திருப்பூர் - பழனி,கோவை - பழனி ஆகிய ரோடுகளில் தனி நடைபாதை அமைக்க வேண்டும்.
மேலும் பக்தர்கள் தங்குவதற்கான ஒய்வு இடங்கள்,நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்கப்பட வேண்டும்.பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பேருந்து என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாதாரண கட்டணத்தில் அதிக பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
+2
- நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
நெல்லை:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.
பொங்கல் வைத்து வழிபாடு
பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் அவர்கள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கடந்த 1 வாரமாக வே பாத யாத்திரை யாக திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
வேண்டுதல் நிறைவேற...
இதே போல் மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வர்களும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரை செல்கிறார்கள்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு இணங்க காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.
நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்லும் பக்தர்கள் கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு தைப்பூச மண்டபத்தில் ஓய்வு எடுத்து செல்கிறார்கள்.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
- வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
- பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.
பல்லடம் :
புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு தைப்பூசவிழாவுக்கு பாதயாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்லடம் வழியாக பாத யாத்திரை செல்கின்றனர்.
இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பாத யாத்திரையாக பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே,போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் பக்தர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில்,போக்குவரத்து போலீசார் பழனி மலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்தினை தவிர்க்கும் பொருட்டு பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.
- காஷ்மீரில் பாதயாத்திரையின் நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றது காங்கிரஸ்.
சிம்லா:
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
காஷ்மீரில் மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில் சில இடங்களில் வாகனங்கள் மூலமாகவும், வேறு சில இடங்களில் நடைபயணமாகவும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக்சிங் ஏற்கனவே கூறியுள்ளார்
இந்நிலையில், பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி காஷ்மீரில் பாதயாத்திரை செல்வது உறுதி. அதே சமயத்தில், பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
பாதுகாப்பு தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.
- பாதுகாப்பு அளிக்கும்வரை நடைபயணத்தை தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் அறிவித்தது.
ஜம்மு:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறுகையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என விளக்கமளித்தனர்.
- அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் பாதயாத்திரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் பாதயாத்திரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளருமான சங்கர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டார கிழக்கு காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் (மேற்கு) சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் புதுவை புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அகில இந்தியமீனவர் காங்கிரஸ் செயலாளர் காங்கேயன் மாநில பி.சி.சி. செந்தில்குமரன், அன்புமணி செயலாளர் சூசைராஜ்மற்றும் அனைத்து கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நிர்வாகிகள் புதுவை மாநில அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் தலைமையில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து பஞ்சாயத்து ராஜ், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் சங்கர் பாபு மற்றும் தொகுதி பொருளாளர் பாபு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கர், கருணா, கர்ணன், கருணாகரன், சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்
- பக்தர்கள் நடை பயணத்தின் போது வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.
கந்தர்வகோட்டை:
வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பாண்டி மண்டல சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த சன்மார்க்க சங்கத்தினர் மதுரையிலிருந்து வடலூர் வரை கடந்த 60 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு, கந்தர்வகோட்டை வள்ளலார் மடத்தில் தங்கி, தொடர்ந்து வடலூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். சன்மார்க்க சங்க பக்தர்கள் நடை பயணத்தின் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், உயிர் பலி தவிர்த்தல் உள்ளிட்ட வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நடை பயணம் மேற்கொண்டனர்.
- 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 291 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இந்த காவடிகள் கடந்த 29-ந்தேதி குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு சிங்கம்புணரி வந்தடைந்தது.
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாதயாத்திரையாக சென்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறார்கள். அதன்பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.
பிப்ரவரி 4-ந் தேதி தைப்பூச தினத்தன்று பழனி சென்றடைந்து அதன் பின் 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவிலில் நேற்று காலை மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. சிங்கம்புணரியில் வணிகர்கள் சார்பில் நகரத்தார்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- தைப்பூசத்திற்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் தைப்பூசத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பின்னர் பாதயாத்திரையாக பழனி மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பல்லடம் :
உலகப் புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு, ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.
இதற்கிடையே இந்த வருட தைப்பூசத்திற்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் தைப்பூசத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர். அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையம் வீரவேல் காவடி குழுவினர் விநாயகர் கோவிலில், பொங்கல் வைத்து
வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பழனி மலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்கள்.
இதே போல் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் காவடி குழுவினர், முருகன், விநாயகர், மாகாளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பின்னர் பாதயாத்திரையாக பழனி மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதே போல, பனப்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து பழனி பாதயாத்திரை குழு புறப்பட்டு சென்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கயம் :
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு தைசப்பூசத்தையொட்டி திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை என பல மாவட்டங்களில் இருந்து குழுக்கள், குழுக்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை தைப்பூசம் என்பதால், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர், காங்கயம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு த.மு.மு.க., கோம்பை தோட்டம் கிளை சார்பில் டீ, காபி, பால், பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
- விருதுநகரில் இன்று மாலை பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை நடக்கிறது.
- ராம.சீனிவாசன் தலைமையில் 2000 பேர் பங்கேற்கின்றனர்.
மதுரை
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். இதன் அடிப் படையில் தேசிய அளவில் முதலாவதாக 'பி.எம்.மித்ரா' மெகா ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைய உள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதுநகரில் சுமார் 1052 ஏக்கர் பரப்ப ளவில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில், விருதுநகரில் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவி லில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை ஆன்மீக பாதயாத்திரை நடைபெறு கிறது.
ராம.சீனிவாசன் தலை மையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் மெகா ஜவுளி பூங்கா தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த யாத்திரையில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் 200 கார்களில் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலை மையில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, உசிலம்பட்டி மண்டல தலைவர் கீரிப்பட்டி வி. போஸ் மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் நாகராஜ், காளிதாஸ், ஓ.பி.சி. அணி வேல்முருகன், வெற்றி வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் செய்துள் ளனர்.
ராம சீனிவாசன் தலை மையில் நடைபெற உள்ள இந்த ஆன்மீக பாதயாத்திரை தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.