search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை
    X

    பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை

    • விருதுநகரில் இன்று மாலை பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை நடக்கிறது.
    • ராம.சீனிவாசன் தலைமையில் 2000 பேர் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். இதன் அடிப் படையில் தேசிய அளவில் முதலாவதாக 'பி.எம்.மித்ரா' மெகா ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைய உள்ளது.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதுநகரில் சுமார் 1052 ஏக்கர் பரப்ப ளவில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில், விருதுநகரில் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தார்.

    அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவி லில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை ஆன்மீக பாதயாத்திரை நடைபெறு கிறது.

    ராம.சீனிவாசன் தலை மையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் மெகா ஜவுளி பூங்கா தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    இந்த யாத்திரையில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் 200 கார்களில் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலை மையில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, உசிலம்பட்டி மண்டல தலைவர் கீரிப்பட்டி வி. போஸ் மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் நாகராஜ், காளிதாஸ், ஓ.பி.சி. அணி வேல்முருகன், வெற்றி வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் செய்துள் ளனர்.

    ராம சீனிவாசன் தலை மையில் நடைபெற உள்ள இந்த ஆன்மீக பாதயாத்திரை தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×