என் மலர்
நீங்கள் தேடியது "Pamphlet"
- கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.
சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார்.
- இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர்.
தஞ்சாவூர்:
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பொதுக்கூட்டத்தை விளக்கியும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தஞ்சையில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார். இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முழக்கங்கள் இட்டு அனைவருக்கும் வழங்கினார்.
அன்னைத் தமிழை அரியணை ஏற்றி போற்றுவோம், ஆதிக்க இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர். இந்த நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது
- பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
தூத்துக்குடி:
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரின் ஆலோசனை படி 29-வது வார்டுக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையம், பாளையங்கோட்டை ரோடு, மீனாட்சிபுரம் உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் 14-வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
- பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்துக் கூறினர்
- சாதனை பட்டியலை நோட்டீஸ் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் சூசை நகர் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்துக் கூறினர்.
மேலும் மத்திய அரசு செயல்படுத்திய சாதனை பட்டியலை நோட்டீஸ் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் சுனாமி காலனி, லேபர் காலனி உட்பட சுற்றுவட்டார பகுதிக்கு பகுதிகளுக்கும் சென்று வழங்கினர்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும் தெற்கு மண்டல பார்வையாளருமான உமரி. சத்தியசீலன்,மாவட்டத் துணைத் தலைவர் தங்கம்,கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மண்டல் தலைவர் மாதவன், துணைத் தலைவர் பொய்சொல்லான், பொதுச் செயலாளர் மகேஷ்,மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் மாசாணம், ஒன்றிய மகளிர் அணி தலைவி செல்வி, லட்சுமி, காளீஸ்வரி மற்றும் ராஜ்குமார் தீபன் முனியசாமி முருகேசன் முத்துகிருஷ்ணன் செல்வம் மிக்கி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி கால்நடை மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி கால்நடை அரசு மருத்துவ மனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருவாரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
நகராட்சிஆணையர் (பொ), கால்நடை மருத்துவர்கள் சந்திரன், இலக்கியா ராஜசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் வி.ஐ.ஏ. ஷிப் கேட்டரிங் காலேஜ் பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், நகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியானது நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக சென்று கால்நடை மருத்துவ மனைக்கு வந்தடைந்தது.
இதில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
- ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் விழிப்புணர்வு.
- கடைவீதி, பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட தொழுநோய் அலுவலர் அறிவுறுத்தலின் படியும் இடையூர் சங்கேந்தி வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன மேற்பார்வையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் நித்தையன் தலைமையில் நடைபெற்றது.
இடையூர் சங்கேந்தி மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் வருவதை தடுப்பது குறித்தும் விரிவாக விழிப்புணர்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் .மேலும் கடைவீதி, பேருந்து நிலையம் போன்றவற்றில் விழிப்புணர்வு துண்டுபிர சுரங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, செல்வசிதம்பரம், அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர்.
- மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
- 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.
மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.
தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.
- ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர்.
தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.
- குத்தாலம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பொது மக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப் படையின் சார்பாக பள்ளியைச் சுற்றியுள்ள குத்தாலம் மேலத்தெரு நடுத்தெரு கீழத்தெரு மற்றும் கழுங்கடித் தெரு ஆகிய பகுதிகளில் மக்களிடையே பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இலா செல்லம்மாள் பேரணியை துவங்கி வைத்தார்.
பள்ளியின் தேசிய பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அங்குள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் தேசியப் பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் ஐ.சந்தோஷ் காட்சன் ஐசக் ஆசிரியர் செய்திருந்தார்.
- ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வள்ளியூர்:
ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.
மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
- அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவு க்கரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர்ரா மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பிரச்சார வாகனம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க ப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறது. மேலும் பொது மக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவ ர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
- பேரணி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார்.
பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம்,ஆசிரியர்கள் அகல்யா, பொற்கொடி, கீதா,வளர்மதி ஆகியோர் திட்டச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்ட மைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.