என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat"

    • 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

     உடுமலை :

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும், 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    கிராமப்புற வீடுகளில் முழுமையாக செயல்படும் குடிநீர் குழாய் இணைப்பை 62 சதவீத வீடுகள் பெற்றுள்ளன என மத்திய நீர்வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 799 வீடுகள் உள்ளன.கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 77 கிராம ஊராட்சிகளில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.நடப்பாண்டு ஜல் ஜீவன் திட்டம் மட்டுமின்றி 14 மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிற ஒருங்கிணைந்த மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 729 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சில புதிய திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.மீதமுள்ள 77 ஆயிரத்து 70 வீடுகளுக்கு வரும் ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2024ல் முடிக்கப்பட வேண்டிய இலக்கு 2023ல் முடிக்கப்பட்டு விடும் வகையில் செயலாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 1-ந் தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

    இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

    அவினாசி : 

    ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமையான மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களில் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 31 ஊராட்சிகளில் பணியாற்றும்செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அதன் விவரம் வரு மாறு:-

    * உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.

    * தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.

    * பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.

    * கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி

    இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலமேடு அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது.
    • அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலையபட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளி, பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், வாட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெஷிந்தா, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜா, இல்லம் தேவி கல்வி ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலைய பட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    • சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது.
    • சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது. துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சின்ன நட்டாத்தி ஆகிய ஊர்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆம்புலன்ஸ் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கொம்புகாரன் பொட்டல் வார்டு உறுப்பினர் பண்டாரம், நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன்,ஏரல் ஆய்வக மேற்பார்வையாளர்சுரேஷ், சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை, நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி, நுண் கதிர் வீச்சாளர்கள் சுரேஷ்,மாலதி, நுண்கதிர் உதவியாளர் எட்டையா, சுகாதார தன்னார்வலர்கள், மஸ்தூர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி செய்து இருந்தார்.

    • கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • கும்பகோணம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடம் கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினரும், கும்பகோணம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான அசோக்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.எஸ்.பாலசுப்ரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி லட்சுமி பிரியா, மாவட்ட பிரதிநிதி குணாளன், பேரூராட்சி உறுப்பினர்கள் குணசேகர், இளவரசி ராமலிங்கம், ராதிகா ஜெய்சங்கர், கலா ராமமூர்த்தி மற்றும் செழியன், ஆறு.மதியழகன், யூசுப், கோபால் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி 5 ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க பள்ளி பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் தொடக்க கல்வி பயில்வதற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் கோட்டைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2023-24 கல்வியாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதாக மக்கள் உறுதி அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் மற்றும் கோட்டைபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
    • திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு காக்காயன்தோப்பு, வீராம்பட்டினம், மணவெளி, நல்லவாடு, அபிஷே கப்பாக்கம், டி. என்.பாளையம் உள்ளிட்ட14 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மே1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    எனவே பொதுமக்கள், மகளிர் குழு, கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் என திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • முறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள முறையூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்.எம். சுரேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அடிப்படை கட்டமைப்பு-தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கே.வி.வி.டி. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கண்டறியப்பட்டு பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாள்தோறும் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துமாறும் கிராம மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    இதில் சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கதிரேசன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயநிதி குழுவினர், பணித்தள பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.

    ×