என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Patrol"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
- இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.
- போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெருக்கஞ்செடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது44) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்து போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- மாவட்ட காவல்துறை எஸ்பி தொடங்கி வைத்தார்
- ரோந்து போலீசாரின் செல்போன்களை பெற்று பொதுமக்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறா வகையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சிறப்பு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் ரோந்து பணிபுரிந்தும், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், நகரில் பூட்டியுள்ள வீடுகள் மற்றும் அதில் வசித்து வருபவர்களின் தகவல்களை சேகரித்தும், வாகன தணிக்கை செய்தும் குற்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் திறம்பட செயல்படுவார்கள்.எனவே பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், உங்கள் பகுதியில் ரோந்து அலுவல் மேற்கொள்ளும் போலீசாரின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு, தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 24 மணி நேரமும் 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார். முன்னதாக கடந்த 10-ந்தேதி பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒருவர் விட்டு சென்ற ரூ.10 ஆயிரத்தை ஓட்டல் உரிமையாளர் நல்ல பூவான் என்பவர் எடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் நிலையத்தில் கொடுத்து சென்றார். அவரின் செயலை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நல்ல பூவானை நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர்.
- தனலட்சுமி தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி காந்திநகர் மண்ணாங்கட்டி மனைவி தனலட்சுமி (வயது 39) என்பவர் தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்துஎரிசாராய பாக்கெட்களைபறிமுதல் செய்துபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலை, தூண்டிக்காரன்சுவாமி கோவில் அருகில் வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் (வயது 35) என்பவா் தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.
உடனே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
- 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன.
- இரவு ரோந்து, வாகன தணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம்.
சீர்காழி:
சீர்காழி காவல் உட்கோட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, புதுப்பட்டி னம், ஆணைக்காரன்சத்திரம், பூம்புகார் உள்ளிட்ட காவல்நி லையங்கள் உள்ளன.இதில் சீர்காழி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஏரியா பரப்பளவு அதிகமாக உள்ளது. இதில் பல கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது.
சீர்காழி காவல்நி லையத்தில் சுமார் அரசு நிர்ணயப்படி 39 காவலர்கள் இருக்கவேண்டும். இவற்றில் 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன. ஆனால் இந்த 37 காவலர்களில் 16 காவலர்கள் வெளி காவல் பணியில் வெவ்வேறு காவல்நிலையங்களில் உள்ளனர்.
இதனால் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. இரவு ரோந்து, வாகனதணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம் ஏற்படுகிறது.இது குற்றசெயல்கள் நடைபெற ஏதுவாக அமைந்து விடுகிறது. சங்கிலிபறிப்பு, வாகனதிருட்டு, சாராயம், கஞ்சா கடத்தல்போன்ற சம்பவங்கள் அதிக ரித்துவருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஆகையால் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டல், திருமுல்லைவாசல் பகுதிகளில் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வலுபெற்று வருகிறது.
இதன் மூலம் புறகாவல்நி லையத்தில் 1 உதவி காவல் ஆய்வா ளர், 4 காவலர்கள் பணிய மர்த்தப்படும் போது அந்த பகுதி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் ரோந்து சென்று குற்றசெல்களை தடுத்திட முடியும் ஆகை யால் காவல்துறைதலைவர் உடனடியாக முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூர் கிராமத்தில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவூர் அரசினர் விடுதி அருகே சாராயம் விற்ற நாகை, செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் (வயது50), இரிஞ்சூர் கிராமம் மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன்னாத் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சுவரை உடைக்கும் போது சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
- மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பாருடன் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பாரிலும் சிலர் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடை மற்றும் பார் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கமாக வந்தனர். பின்னர் அவர்கள் இரும்பு கம்பியால் சுவரை உடைத்தனர். வேகம் வேகமாக சுவரை உடைக்கும் போது சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டனர். அதில் சில அடி நீளத்துக்கு சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
முன்பக்கம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்–பட்டுள்ளதால் பின்புறமாக வந்து சுவரை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்–பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னாநல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- காரைக்கால் பகுதியிலிருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னா நல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழசன்னா நல்லூர் அருகே திருட்டுத னமாக மதுபானம் விற்ற கீழசன்னாநல்லூர் ஜீவா நகரை சேர்ந்த நாடிமுத்து (வயது 43) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 110 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.
- மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
- மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து திருடி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம்-தென்பிடாகை இடையே திருமலைராஜன் ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது.
பின்னர் அந்த மணலை அந்த பகுதியில் கொட்டி வைத்து இரவில் வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது போல் மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
மேலும் சுமார் 25 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு மணலை திருடி கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தும் திருடி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் சிலர் ஆற்றங்கரைகளில் பள்ளம் தோண்டி மணலை திருடி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து ஆற்றில் தோண்டி மணலை திருடிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
- இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது.
அவிநாசி :
அவிநாசி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இதில் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), பெருமாள் (ம.தி.மு.க.,), ராசுவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ராஜ்குமார் (கொ.ம.தே.க.,),
இந்திய கம்யூனிஸ்டு சண்முகம், சுப்பிரமணியம், ஷாஜகான், செல்வராஜ், யாசின் பங்கேற்றனர்.காலை மற்றும் மாலையில் அவிநாசி அரசு பெண்கள் பள்ளி முன்பு மகளிர் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது. போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பகண்டைகூட்ரோடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மையனுாரில் சாராயம் விற்ற பிச்சை(39), அதேபோல் தொண்டனந்தலில் சாராயம் விற்ற ராஜசேகர் மனைவி செல்வி(30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்