search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People with disabilities"

    • மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.
    • மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று திங்கட் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத்தி லிருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் மாற்று திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாற்றத்திறனாளிகள் திரண்டு இருந்தனர். பின்னர் மாற்றுத் திறனாளிகள் நிலம் மற்றும் மனை வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு இலவசமாக செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தின் மூலம் விண்ணப் பிக்கப்படும் வங்கி கடன் மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    மாற்று திறனாளி கள் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சித் துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமும் எழுப்பி னார்கள். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    • வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான ‘ஆடியோ கிராம்’ அமைக்க வேண்டும்
    • கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஆஸ்பத்திரியில் காது கேளாதோர், வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான 'ஆடியோ கிராம்' அமைக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் மேரி, ஷீலா, முத்துலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்மாநில தலைவர் ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், மகேஷ், பிரபுதாசன், புருஷோத்தமன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    நாமக்கல்:

    வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் சுமதி ஆகியோர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது காதொளி கருவி இருந்தும் வட்டார அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க மறுப்பதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    • வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங் களது குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடை பெற உள்ளது.

    இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே கும்ப கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங் களது குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன்னார்குடியில் 13-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டம் நடக்கிறது.
    • யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியப்பதாவது:-

    மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம். யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுதிறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் மட்டும் 2023-24ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்ல நிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழையும், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
    • நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நாளை 13-ந்தேதி காலை 11.00 மணி அளவில் வளாகத்தில் வருவாய் மாற்றுத்திறனாளி களுக்கான மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் சிறப்பு குறை தீர்க்கும் அலுவலகத்தில் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இதில்மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறும், மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1. கைப்பேசி எண். ஆகிய ஆவணங்களுடன் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஒன்றியம் கரடிக்குப்பம் நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. .

    இதனால் அந்த 3 ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட அமைப்பாளர் குமார் தலைமையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பி ரமணியன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு சமதான கூட்டத்துக்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.பின்பு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி கரடிக்கு ப்பம், நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படும், நிலுவைத் தொகை வழங்காமல் இருந்தால் உடன டியாக வழங்கப்படும், 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி றனாளிகள் உள்ள கிராமங்களில் அவர்களுக்குள் ஒரு பணித்தள பொறு ப்பாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா 260 பேருக்கு ரூ.19. 89 லட்சம் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டுபயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் 50 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் இலவச வீட்டுமனைப்பட்டா 31 பேருக்கும் ரேசன் கார்டு 20 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3பேருக்குஅரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 3 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 260 பேருக்கு ரூ.19 லட்சத்து 89 ஆயிரத்து290 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் மேல்மலையனூர் யூனியன் தலைவர் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் தாசில்தார் கோவர்தனன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், ஜமாபந்தி கண்காணிப்பு அலுவலர் உஷா, யூனியன் துணைத்தலைவர் விஜயலட்சுமி முருகன் மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதை சந்திரகுப்தன்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×