search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "phone"

    • சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
    • போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர்.

    டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் 16 வயது சிறுவன், புதிய போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்கவில்லை என்று கூறி சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாலை சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சச்சின் மறுத்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சச்சினை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். பின்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், 16 வயது உள்ள 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

    • மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்பதாவது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. எனவே கனமழை தொடர்பாக பொதும க்களுக்கு கீழ்க்க ண்ட முன்னெச்சரிக்கை அறிவு ரைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கனமழை  காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்துவரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இட ங்களுக்கு செல்லவேண்டும்.

    பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்பஅட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், பேரிட ர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077மற்றும் 04142 - 220700, 04142 - 233933மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிட ர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மே ற்படி பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேர டியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    பெண் போலீசிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபரை தேடி வருகின்றனர்.
    மதுரை

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர், செல்போனில் ஆபாச அழைப்புகள் வருவதாக புகார் கொடுத்து உள்ளார். 

    இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் திடுக்கிடும் தகவ ல் வெளியானது.

    மதுரை மாநகர  ஆயுதப்படை மைதானம் 11-வது படைப்பிரிவில் அந்த 25 வயது பெண், போலீசாக வேலை பார்த்து வருகிறார். மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். 

    அந்தப் பெண் போலீஸ் கடந்த 12-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.  அவருக்கு அதிகாலை 5 மணியளவில்   போன் அழைப்பு வந்தது. 
    மறுமுனையில் பேசியவர் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார்.   அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், ‘நான் போலீசாக உள்ளேன்’ என்று தெரிவித்தபோதிலும் அந்த வாலிபர் தொடர்ந்து   ஆபாசமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வந்து உள்ளார். 

    இது குறித்து அந்தப் பெண் போலீஸ் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் போலீஸ்காரருக்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இதில் குற்றவாளியின் செல்போன் நம்பர் மற்றும் முகவரி தெரியவந்தது. இதன் அடிப்படையில்     போலீசார், அந்த   வாலிபரை   தேடி வருகின்றனர்.
    பிளஸ்-2 மாணவி-இளம்பெண் மாயமானார்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள சித்தாலி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி திருமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று பொதுத் தேர்வு எழுத சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளந்தியான். இவருடைய மகள் மகாலட்சுமி(20). மகா லட்சுமி ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்து ள்ளார் 

    இந்நிலையில் மகா லட்சுமியை திருச்செங்கோட்டிலிருந்து  அவரது தந்தை ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இதற்காக தந்தை-மகளும் பஸ்சுக்காக மதுரை மாவட்டம், திருமங்கலம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

    அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் பதட்டமடைந்த கள்ளந்தியான் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். பலனில்லை.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம்.
    • அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    ஆன்லைனில் பெண்களின் புகைப்படங்களை காட்டி வலைவிரித்து பின்னர் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    அந்த வகையில் வியட்னாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.

    இதனால் சென்னையில் வசிக்கும் வாலிபர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர்.

    இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக உள்ளனர். சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

    ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று போலீசார் எச்சரிக்கிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள். அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் போலீசார் இது போன்ற போன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    • கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம்.
    • அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

    சேலம்:

    மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம். எனவே அருகில் அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

    மேலும் அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து போஸ்ட் மேன் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் ஆதாருடன் தொலைபேசி எண் இணைத்தல், திருத்தம் மற்றும் 5 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் ஆகிய 2 வகையான ஆதார் சேவைகளையும் வழங்கி வருகிறது என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    • ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
    • இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).

    இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.

    ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இரண்டு வயது குழந்தைகள் கூட, போனில் வீடியோ பார்க்க ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.

    திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?

    குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

    திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல். 
    மணவாளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்ததை உறவினர்களுக்கு போனில் தெரிவித்த கொத்தனார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, கருங்காலிவிளையை சேர்ந்தவர் சின்னநாடார். இவரது மகன் சுதன் (வயது 27). இவர் கேரளாவில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    சுதன் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். சபரி மலைக்கு சென்றுவிட்டு கடந்த 15-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று சுதன் வி‌ஷம் குடித்தார்.

    தான் வி‌ஷம் குடித்த தகவலை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் மூலமாக கூறினார். தன்னை காப்பாற்றுமாறு கூறி சுதன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் சுதனை தேடினார்கள்.

    அப்போது முட்டம் செங்குழி பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் சுதன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுதன் கொண்டுவரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சுதன் பரிதாபமாக இறந்தார்.

    இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கருங்கல் அருகே தெருவுக் கடை பகுதியை சேர்ந்தவர் காட்வின் (27). வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    ஸ்மார்ட்போன் என்பது அதனை பயன்படுத்துபவருக்கு சிறந்த நண்பனாக விளங்குகிறது என்றால், அவர்களை ரகசியமாக உளவுபார்க்கும் உளவாளியும் அதுவே என்றால் அது மிகையாகாது.

    தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலி மூலம் 80 பெண்களை ரகசியமாக கண்காணித்து அவர்களின் அந்தரங்கத்தை திருடி வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்தார் என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களுக்கு முழுமுதற்காரணம் பெண்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை பிறரின் கையில் கொடுப்பது. இதுவே பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஒருவர் உங்களை ரகசியமாக கண்காணிக்க நினைத்தால் ஒரு செயலி (ஆப்) மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

    பெண்களை கண்காணிப்பதற்கான பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கின்றன. அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா, போன் கால்கள், குறுஞ்செய்திகள், இருப்பிடம் மற்றும் அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்க முடியும்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கண்காணிக்கும் செயலி, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஆன் செய்து விடும் என்பது தான். அதிலும் கேமரா ஆன் ஆகி இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இதுபோன்ற செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் மறைத்து வைக்கவும் முடியும்.

    இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் கண்காணிக்கும் செயலிகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.



    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் ஏதேனும் செயலிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள “பிரி ஸ்பைவேர் ஆன்டு மால்வேர் ரீமுவர்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் ஸ்மார்ட்போனை முழுவதும் ஸ்கேன் செய்தால் ஏதேனும் கண்காணிக்கும் செயலி இருந்தால் காட்டிவிடும்.

    நம் ஸ்மார்ட்போனை யாரிடமும் கொடுக்கவில்லை என்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது அது கேட்கும் அனுமதி அனைத்திற்கும் படித்து பார்க்காமல் ‘ஐ அக்ரி’ என்பதை கிளிக் செய்துவிடுகிறோம். இது நம்மை அறியாமல் நாமே நமது தகவல்கள் திருட வழி ஏற்படுத்தி விடும். இது மிக பெரிய தவறு.

    ஒரு செயலி நமது ஸ்மார்ட்போனில் எதனையெல்லாம் அனுமதி கேட்கின்றது என்று கவனிக்காமல் ஐ அக்ரி என்பதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்வதால் அந்த செயலியை உருவாக்கியவர் உங்களை கண்காணிக்க முடியும் மற்றும் உங்களை பற்றிய தகவல்களை உங்கள் அனுமதியுடன் திருடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

    ஒரு செயலி கேட்கும் அனுமதிகளை படித்து பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தான செயலி என்பதை உணர முடியும். மேலும் அந்த செயலியை உருவாக்கியவர் முதலிலே அவர்கள் என்ன தகவல்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்கிறார்கள் மற்றும் அதனை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக அவர்களின் பிரைவசி பாலிசியில் கூறிவிடுவார்கள். ஆனால் அதையும் நாம் கவனிக்காமல் இன்ஸ்டால் செய்கிறோம். இது நமக்கும், நம் ஸ்மார்ட்போனுக்கும் பாதுகாப்பு இல்லை.

    கூகுள் ப்ளே ஸ்டோரில் பல போலியான மற்றும் ஆபத்தான செயலிகளும் கொட்டிக்கிடக்கின்றன. முதலில் ஒரு செயலி பதிவிறக்க செய்யும் முன் அந்த செயலியின் ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை பார்க்க வேண்டும். ஏனென்றால் அதனுடைய ரேட்டிங் வைத்து அதனை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

    ரிவ்யூ மூலம் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியவரின் கருத்துகளை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் டெவலப்பர்ஸ் பெயரை கவனியுங்கள். டெவலப்பர்ஸ் பெயர் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பழுது நீக்க கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து, பின்னர் அவற்றை நீக்கி இருப்பீர்கள். ஆனால் மென்பொருள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டு எடுத்துவிட முடியும்.

    எனவே ஸ்மார்ட்போனை பழுது நீக்குபவர்கள் அது பெண்ணின் ஸ்மார்ட்போனாக இருந்தால் அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்க வாய்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கு இத்தனை இன்னல்களை தரும் ஸ்மார்ட்போனால் அவர்களுக்கு ஒரு சில பயன்களும் இருக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறார்கள் சில விஷக்கிருமிகள். கண்களுக்கே தெரியாத சிறிய ரகசிய கேமராவெல்லாம் வந்துவிட்டது.

    பெண்கள் ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே ஏதேனும் கேமரா இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தால் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி அதனை கண்டுபிடித்து விடலாம். கூகுள் ப்ளே ஸ்டாரில் “ஹிட்டன் கேமரா டிடெக்டர்” என்று செயலி கிடைக்கிறது. ரகசிய கேமரா இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் அந்த இடத்தில் இந்த செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ஏதேனும் சிறிய ரகசிய கேமரா இருந்தால் கூட பிப் சத்தத்தை எழுப்பும். அதை வைத்து எளிதாக அந்த இடத்தில் கேமரா இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம். இன்றைக்கு பெண்கள் அவர்களுடைய ஸ்மார்ட்போனில் ஏராளமான செயலிகளை வைத்திருப்பார்கள். மிக முக்கியமாக வைத்திருக்க வேண்டிய செயலி “பீ சேப்” என்ற செயலி. இது பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள போது உதவும்.

    எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் உள்ள ஆபத்தினால் அதனை கைவிடுவது அறியாமை ஆகும். அதனை விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது நமது கைகளில் தான் இருக்கிறது. இன்றைக்கு தொழில் நுட்பம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் நாம் தான் பாதுகாப்பற்ற மற்றும் விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

    ப.பொன்விக்னேஷ்,
    கல்லூரி மாணவர்
    ×