என் மலர்
நீங்கள் தேடியது "POCSO law"
- பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது.
- பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் உள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக இரவில் மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வரும் அவர் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் செல்போன்களில் ஆபாச வீடியோக்களை காட்டியும் தனது காம இச்சைக்கு இணங்க மாணவிகளை அவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் மாணவிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதிக்கு வந்த சின்மயமூர்த்தி, தனது அறைக்கு வரவழைத்த ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சல் போட்டபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். சம்பவம் பற்றி சக மாணவிகளிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டதும் சக மாணவிகள் சிங்கப்பெண்களாக வெகுண்டெழுந்தனர். கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்மய மூர்த்தி தனது அறையை மூட முயன்றார்.
இருப்பினும் மாணவிகள் கதவை இடித்து தள்ளிச் சென்றனர். உள்ளே இருந்த அவரை தடியால் தாக்கினர். அவர் தான் தவறு செய்யவில்லை என கூறினார். அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதபடி தன்னிடம் அவர் தகாத செயலில் ஈடுபட்டார் என கூறினார். உடனே சுற்றி நின்ற மாணவிகள் தடியால் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதற்கிடையே சம்பவம் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரியவந்தது. உடனே அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்திக்கு தர்மஅடி கொடுத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சின்மயமூர்த்தி, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையை தனது காமவலையில் வீழ்த்தியதும், அவருடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அந்த வீடியோக்களை காட்டி மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை எனில் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாகவும், டி.சி. (மாற்றுச்சான்றிதழ்) கொடுத்து அனுப்பிவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மாணவிகள் பயந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி கற்பழிப்பு தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆறு மாதங்களாக 3 பேர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தரகம்பட்டி அருகே கோட்டக்கரையான் பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி அருகில் உள்ள சோளக்காட்டில் ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை செங்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை பார்த்த சிறுமியின் சித்தப்பா முறையுள்ள இடும்பன் (31) என்பவரும், பெரியசாமியுடன் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இவர்கள் 3 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் ரீதியான உறவில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்படி, அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் 3 பேரும் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
- நெருக்கமாக இருந்த போட்டோக்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறிய சுரேஷ் மாணவியை மிரட்ட தொடங்கினார்.
- பயந்துபோன மாணவி கடந்த சில நாட்களாக அச்சத்துடன் இருந்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 24). லாரி டிரைவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் சந்தித்து பேசி வந்தனர். நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அப்போது மாணவியிடம் சுரேஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனை மாணவியும் முழுமையாக நம்பியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியுடன் சுரேஷ் ஜோடியாகவும், மிகவும் நெருக்கமாகவும் நின்று ஏராளமான போட்டோக்களை எடுத்துள்ளார். அதனை தனது செல்போனில் பதிவேற்றம் செய்துகொண்டதோடு, தனது நண்பர்களிடமும் காண்பித்துள்ளார். காதலில் மூழ்கிய மாணவி, அதன் பின் விளைவுகள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் நெருக்கமாக இருந்த அந்த போட்டோக்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறிய சுரேஷ் மாணவியை மிரட்ட தொடங்கினார். இதனால் பயந்துபோன மாணவி கடந்த சில நாட்களாக அச்சத்துடன் இருந்துள்ளார்.
இதற்கிடையே தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மாணவி வீட்டிலேயே இருந்துள்ளார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காதலன் சுரேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்த மாணவியின் தந்தை செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவருடன் பேசினார்.
அப்போது வீட்டின் பின்பக்கம் மறைவான பகுதிக்கு வருமாறு மாணவியை அழைத்துள்ளார். உடனே அந்த மாணவியும் தனது தந்தையிடம் தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு அங்கு சென்றார். அங்கு சுரேஷ் தனது செல்போனில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிடுவதாக மீண்டும் மிரட்டி உள்ளார்.
பின்னர் அந்த மாணவியை அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈச்சர் வாகனத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அழுதுகொண்டே மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறினார்.
இருந்தபோதிலும் மகளின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சுரேசை அழைத்து விசாரித்தனர்.
ஆனால் சுரேஷ் அவர்களையும் மிரட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து மாணவியின் தாயார் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
காதலிப்பதாக ஏமாற்றி பின்னர் புகைப்படத்தை காட்டி மிரட்டி பத்தாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
- தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு மகன் ராமலக்கன் (வயது 23). இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் பாடாலூர் அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்புடன் பழகியபோதும், நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட அவர்கள் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராமலக்கன் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அவரிடம் விரைவில் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமும் அனுபவித்து உள்ளார். இதற்கிடையே மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் மகளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த பள்ளி மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளிடம் கேட்டபோது, அவர் நடந்ததை கூறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
மாணவயிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கர்ப்பமாக்கிய ராமலக்கனை கைது செய்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
- தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும், மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாபு. தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக முண்டகாயம் போலீசார் விசாரணை நடத்தி சாபுவை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு சங்கனாச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். இதில் சாபுவுக்கு 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும், மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தார்.
- திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 33). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் இன்டர் மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவியிடம் சலபதி நெருக்கமாக பழகினார். உன்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என அவரிடம் ஆசை வார்த்தை கூறினார். அவரது பேச்சில் மாணவி மயங்கினார்.
கடந்த புதன்கிழமை இறுதி தேர்வு எழுதிய மாணவியை பேராசிரியர் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார்.
திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் தனது மகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக பேராசிரியர் மீது கங்காவரம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவர்களுக்கு நல்ல போதனைகளை வழங்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
- குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரியவந்ததால், தனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர்.
வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் அவசர சிகிச்சை வாகனத்தில் வைத்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.
திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குறை மாதத்தில் சிறுமியால் பிரசவிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் நெகிழித் தொட்டியில் உயிருடன் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
- மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் 22 வயது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். எனவே மாணவர் தனது காதலியை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்வது என முடிவு சென்றார்.
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவரை மாணவர் திருத்துறைபூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
தங்களது மகளை மாணவர் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் திருத்துறைபூண்டியில் உறவினர் வீட்டில் காதலனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
பின்னர் போலீசார் 2 பேரையும் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்து அழைத்து வந்தனர். விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு 17 வயது என்பதால் அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி:
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சிறுமி அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் சிறுமியை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த சிறுமியை கலந்தபனையை சேர்ந்த உறவுக்கார வாலிபரான இசக்கிமுத்து (வயது 24) கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இவர் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவரை இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி மாணவன் எங்கு சென்றார், யாராவது கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடத்தினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 24) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்த மாணவர், அதன்பிறகு பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அந்த மாணவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மாணவனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி மாணவன் எங்கு சென்றார், யாராவது கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவனும், காயத்ரியும் காதலித்து வந்ததுடன் , காயத்ரியும் வீட்டில் இருந்து மாயமானது தெரிந்தது.
இதையடுத்து இருவரும் எங்கு சென்றார்கள் என்று விசாரணை நடத்தி போலீசார் அவர்களை தேடி வந்தனர். அப்போது அவர்கள் ஓசூரில் தனியாக வீடு எடுத்து தங்கி, அங்கு கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஓசூர் சென்று 2பேரையும் மீட்டு வெள்ளகோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு காயத்ரியிடம் விசாரணை நடத்திய போது, திருமண ஆசைகாட்டி மாணவனை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை கைது செய்தனர். மாணவரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவரை இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விக்னேஸ்வரனை தேடியபோது அவர் வடவள்ளி பகுதியில் உள்ள அவரது உறவுப் பெண் வீட்டில் பதுங்கி இருந்தார்.
- 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை திருமண ஆசை காட்டி விக்னேஸ்வரன் கடத்திச் சென்றுள்ளார்.
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
விசாரணையில் அரிசிபாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 20) என்பவருக்கும், மாணவிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. விக்னேஸ்வரனை தேடியபோது அவரும் மாயமாகி இருந்தார். இதனால் விக்னேஸ்வரன் தான் மாணவியை அழைத்துச் சென்று இருக்க வேண்டும் என போலீசார் கருதினர்.
இதைத்தொடர்ந்து விக்னேஸ்வரனை தேடியபோது அவர் வடவள்ளி பகுதியில் உள்ள அவரது உறவுப் பெண் வீட்டில் பதுங்கி இருந்தார். அங்கு மாயமான மாணவியும் இருந்தார். மாணவியை போலீசார் மீட்டனர். 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை திருமண ஆசை காட்டி விக்னேஸ்வரன் கடத்திச் சென்றுள்ளார். பழனிக்கு அழைத்துச் சென்று கோவிலில் வைத்து மாணவியை அவர் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் மருதமலை கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கிருந்து வடவள்ளியில் உள்ள உறவுப்பெண் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று தங்கி இருந்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் போலீசுக்கு புகார் சென்று சிக்கிக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
- சிறுமி அடிக்கடி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே வேப்பிலைகுட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் (வயது 24) என்பவர், பால் கம்பெனியில் ஆட்டோவில் செல்லும் போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே, சிறுமி அடிக்கடி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.