search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigaiton"

    • நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

    மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் அன்பு ஊருக்கு வந்தார்.
    • ஆத்திரமடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் பிரதான சாலையைச் சேர்ந்த அன்னக்கொடி மனைவி விஜயா. இவர்களுக்கு சிவன் காளை (வயது 32), அன்பு (28) என்ற 2 மகன்களும், கனி (25) என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். சகோதரர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. சிவன் காளை உள்ளூரிலேயே கூலி வேலை பார்த்து வந்தார். அன்பு கோவையில் இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் அன்பு ஊருக்கு வந்தார். நேற்று தனது தாய் விஜயாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனை சிவன் காளை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணனை குத்திக்கொன்ற அன்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை விமான நிலயத்தில் இருந்து சென்ற கார் ரேணிகுண்டா அருகே லாரி மீது நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சிலர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் தங்களது உறவினரை அழைத்து செல்வதற்காக காரில் மீனம்பாக்கத்துக்கு வந்திருந்தனர்.

    வெளிநாட்டில் இருந்து வந்தவரை ஏற்றிகொண்டு கடப்பா மாவட்டம் நோக்கி கார் திரும்பி சென்று கொண்டிருந்தது.

    ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா மண்டலத்துக்குட்பட்ட மாமண்டூரு என்ற இடத்தில் எதிர்திசையில் இருந்து வந்த லாரி இன்று அதிகாலை அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கங்காதரம்(35), அவரது மனைவி விஜயாம்மா(30), சகோதரர் பிரசன்னா(32), மைத்துனி மரியம்மா(25) மற்றும் ஒன்றரை வயது குழந்தை என 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    அவர்களின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Fivekilled #carlorrycollide
    துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #MaduraiAirport
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவும் துபாய் விமானம் மதுரை வந்தது.

    அந்த விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய நுண்ணறிவு பிரிவு சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து விமானத்தில் வந்த 120 பயனாளிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.


    அப்போது 2 பயணிகள் சூட்கேஸ்களில் தங்க கட்டிகள் கடத்தி வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் சூட்கேஸ்களுடன் பெருங்குடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

    போலீசார் சூட்கேசில் இருந்த தங்க கட்டிகளை கைப்பற்றியபோது ஒன்றரை கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    இது குறித்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #MaduraiAirport #GoldSmuggling
    கேரள மாநிலத்தில் ஆசிரியர் செல்போன் பறித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் குமரன்நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயன்- ஷீலா தம்பதி மகன் ஜிஷ்ணு (வயது 17). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்போனை ஜிஷ்ணு மறைத்து எடுத்துச்சென்றார். ஆசிரியர் பாடம் நடத்தும்போது செல்போன் மணி அடித்தது. இதனை கவனித்த வகுப்பு ஆசிரியர் செல்போனை மாணவரிடம் இருந்து பறித்தார். பின்னர் மாணவரின் பெற்றோரை வரவழைத்து ரூ.250 அபராதம் செலுத்தும்படி கூறினார். பெற்றோர் அபராதம் செலுத்தினர்.

    பின்னர் பெற்றோருடன் மாணவரையும் ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஆனால் செல்போனை திருப்பி தரமறுத்து விட்டார். இதில் ஜிஷ்ணு வேதனை அடைந்தார்.

    வீட்டுக்கு சென்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணலியில் இன்றுகாலை வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    மணலி அடுத்த சின்ன சேக்காடு, பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 55). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 6 மணி அளவில் கோபால் அருகில் உள்ள கடையில் செய்தித்தாள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். வீட்டு முன்பு வந்தபோது மர்ம வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார்.

    திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோபாலை சரமாரியாக வெட்டினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

    உடனே மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோபாலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே கோபால் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட கோபாலுக்கு மீனாட்சி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகிலா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று காலை கொலை நடந்த போது வீட்டின் உள்ளே கோபாலின் மனைவி மற்றும் மகன், மகள் இருந்தனர். கொலையுண்ட கோபாலின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கோபால் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார் என்று தெரியவில்லை. வேலை பார்த்த இடத்தில் அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சையில் இன்று காலை தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை மணமகள் நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், வல்லத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இன்று காலை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இதையொட்டி இன்று காலை மண்டபத்தில் இருவீட்டார் குடும்பத்தினர், உறவினர்கள் என தடபுடலாக திரண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினார்.

    மேலும் தான் வேறொரு வாலிபரை தாதலித்து வருவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடுக்கிட்டனர்.

    இதற்கிடையே மணமகள் குடும்பத்தினர், மணமகளை சமரசப்புடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலன் அளிக்காமல் போனது. மணமகள் தான் காதலித்த வாலிபரை தான் கரம்பிடிப்பேன் என்று உறுதியாகவும், பிடிவாதமாகவும் கூறியதால் உடனடியாக திருமணம் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த இருவீட்டார் உறவினர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் விரைந்து வந்து மணமகளிடம் விசாரணை நடத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வயிற்று வலி காரணமாக வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55). பொம்மை வியாபாரி. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் தண்டபாணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் தண்டபாணிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த தண்டபாணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாங்குநேரியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துக்கனி(வயது21). இவருக்கும் மானூர் அருகேயுள்ள தெற்கு கரிசல்குளத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று காலை திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து முருகன் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தார். திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டது. மணமகன் வீட்டிலும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி முருகன் குடும்பத்தினருடன் சங்கரன் கோவிலுக்கு ஜவுளி எடுக்க சென்றார். இந்த வேளையில் வீட்டில் இருந்த முத்துக்கனி வீட்டை பூட்டி சாவியை பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு வெளியில் செல்வதாக கூறி சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. ஜவுளி எடுக்க சென்று வீடு திரும்பிய முருகன் மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முத்துக்கனியை அக்கம் பக்கத்தில் தேடினார். எனினும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்கனி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    அரக்கோணம் அருகே மண் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கோலம்:

    அரக்கோணம் அருகே கீழாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளியாங்குப்பம், மதுரா பகுதியில் உள்ள மின்னலம்மன் கோவில் அருகே குளத்தில் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், சிப்பந்தி ஜெயபால் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 டிராக்டரில், 2 பொக்லைன் எந்திரம் மூலமாக கிராவல் மண் எடுத்து கொண்டு இருந்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், மண் அள்ளி கொண்டிருந்தவர்களிடம் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டு உள்ளார். அப்போது மண் எடுத்து கொண்டு இருந்தவர்கள் அனுமதி எதுவும் வாங்கவில்லை என்று கூறி உள்ளனர்.

    அப்படியென்றால் மண் எடுப்பது குற்றமாகும். எனவே டிராக்டர், பொக்லைன் எந்திரங்களை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வாருங்கள் என்று கூறி உள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும், மண் எடுத்து கொண்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் டிராக்டரில் இருந்த சாவியை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் வாருங்கள் என்று கூறியபோது மண் எடுத்த நபர்கள் அருண்குமாரின் கையில் இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு, அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். உடனே அவர்கள், டிராக்டரை எடுத்து செல்ல முயன்றபோது சிப்பந்தி ஜெயபால் தடுத்து உள்ளார்.

    இதனையடுத்து சிப்பந்தியை, மண் கடத்தல்காரர்கள் மார்பில் குத்தி அவரின் சட்டையை கிழித்து உள்ளனர். மேலும் அவர்கள், அவரது கையை சாவியால் கிழித்து உள்ளனர். பின்னர் அருண்குமார், ஜெயபால் இருவரையும் தாக்கி விட்டு மண் கடத்தல்காரர்கள் அங்கிருந்து டிராக்டர், பொக்லைன் எந்திரங்களை எடுத்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அருண்குமார் அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கிருஷ்ணகிரி அருகே குழந்தை பிறந்து இறந்த சோகத்தில் தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் மெக்கானிக். இவரது மனைவி தேன்மொழி (36). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு 5 வயதில் ஞானசாய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தேன்மொழி கர்ப்பம் ஆனார். அவர் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. உறவினர்கள் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தேன்மொழிக்கு குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. அவர் குழந்தை இறந்த சோகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி திடீரென தேன்மொழி வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் தேன்மொழி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 19). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பரமசிவம்(19) இவர்கள் 2 பேரும் ஏ.சி.மெக்கானிக் படித்து விட்டு வேலை பார்த்து வந்தனர்.

    விக்னேஷ், பரமசிவம் இருவரும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் கண்டமங்கலத்தில் இருந்து மேல்மலையனூர் நோக்கி புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டி சென்றார். பரமசிவம் பின்னால் அமர்ந்திருந்தார். விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் லட்சுமிபுரம் கூட்டுசாலை வளைவில் விக்னேஷ் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீரென்று விக்னேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பரமசிவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஷ், பரமசிவம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    ×