என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pond"

    • மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    • ட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேலென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீைமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மாடுகள் குளத்தில் இறங்கும்போது சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது
    • தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி அனல்மின் நிலைய பின்புறம் உப்பு நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தேங்கும் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அதன் தரையை உயர்த்த சுற்றுவட்டார பகுதிகளில் மணல் அள்ளி நிரப்பினர். தற்போது ஆபத்தான பகுதியாகிவிட்டது

    காடுகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது கால்கள் சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இதுஆட்கள் அதிகம் நடமாடாத காட்டுப்பகுதி என்பதால் அதிகம் வெளியே தெரிவதில்லை.

    இந்த நிலையில்ஒரு பள்ளத்தில் மாடுகள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பக்கத்து தோட்டக்காரர் சிவலூர்ஜெயராஜ் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் ஒரு மாடு பலியாகி விட்டது.

    • பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
    • சிங்காரவேலவர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி வீரட்டேசுவர சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அங்குள்ள ஏற்பாடுகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அதைத் தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவவர் கோவிலுக்கு சென்று, கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை பார்வையிட்டார்.

    மேலும், சிங்காரவேலவர் கோவில் குளத்தை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது.
    • வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர்.

     பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் எண் 30. இந்த பஸ் பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்ய, கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை ரோட்டின் ஓரமாக ஓட்டினார்.

    இதில், குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ் லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் வேறு நிலை ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
    • சங்கினி குளத்தையும் விரைவில் மீட்க வேண்டும்.

    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்தில் புலவஞ்சி கிராமம்கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலி யில் ஆக்கிரமிப்பு செய்யபட்டு உள்ளதாகவும், இதனால் நீர் செல்வதில் தடை ஏற்பட்டு ள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை, பொது ப்பணித்துறை செயல்பட்டாலும் மற்றும் வருவாய் துறையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் மற்றும் வருவாய் கோட்டா ட்சியர் சாந்தகுமார் மூலம் பொதுப்பணித்துறை இணைந்து பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றிய த்தில் புலவஞ்சி கிராமம் கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலியின் விவசாயத்தை பயன்படுத்தும் கூடிய மதகு எண் 19 என்ற நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்குப் பிறகு பொது பணியும் வருவாய்த்துறையும் இணைந்து வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாய்காலை மீட்டெடுத்து கொடுத்ததற்கு காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் நன்றி தெரிவித்தனர்.

    இது குறித்து காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் கூறுகையில், இதுபோன்று சமூகத்திற்கு வேண்டிய செய்திகளை தொடர்ந்து மாலை மலர் செயது வருவதனால் மாலை மலர் உடைய வாசகர் என்ற முறையில் மாலை மலருக்கு நன்றி கடந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே போன்று மதுக்கூர் பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மதுக்கூர் காவல் நிலையம் அருகாமையில் உள்ள சங்கினி குளத்தையும் கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையும் மீட்டு தரும் என்று நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்றார்.

    • குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.
    • ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பு அருகே கரிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அருகில் உள்ள பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து உபரி நீர் வருடம் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேர்கிறது.

    இதனால் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டது.

    ஆனால் கடந்த 1 ஆண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    இதனால் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள், கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது.குளத்தின் படிக்கட்டுகள் சுகாதாரமற்று காணப்படுகிறது.

    இதனால் குளத்தினை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
    • சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.

    திருப்பூர் :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டு கடந்த கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்று தற்போது துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.திறந்துவிடப்படும் தண்ணீர் பாப்பாங்குளம், குன்னத்தூர், வரையபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் செங்கோட்டையன் பார்வையிட்டார். நீர் வளத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் சோதனை ஓட்ட செயல்பாடு குறித்து விளக்கினர்.

    • குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
    • கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் பாரதி சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரைப்புதூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஆதித்யா கார்டன், அண்ணா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை மழை நீர் வடிகால் என்ற பெயரில் கழிவு நீர் கால்வாய் அமைத்து, கரைப்புதூருக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் ஊர் குட்டையில் விடுவதாகவும், அல்லது குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது. இதனால் கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும். இந்த குட்டை நீரை நம்பி வாழும் கரைப்புதூர் மக்களுடைய நீராதாரம் பாதிக்கப்படும். உலக தண்ணீர் தினத்தின் மகிமையை மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த கிராம சபை கூட்டம் நடத்தி குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனைக ளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழி வகை செய்துள்ளது. கரைப்புதூர் ஊராட்சி ஊர் குட்டையில் இருந்து 500 மீட்டர் தொலை வில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதிக்குள் உறிஞ்சு குழிஅமைத்து கரைப்புதூர் மக்களுடைய நீர் ஆதாரத்தை, பாதுகாத்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
    • அருவி தடாகத்தில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கோடை மழையும் விட்டுவிட்டு பெய்து வந்தது.

    இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் பழைய குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் நேற்று விரால், கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்து தூர் நாற்றம் வீசியதால் இறந்த மீன்களை குற்றாலம் பேரூராட்சி ஊழியர்கள் முழுமையாக அப்புறப்படுத்தினர். கடுமையான வெயில் மற்றும் தடாகத்தில் போதிய தண்ணீர் ஓட்டம் இல்லாததே மீன்கள் இறப்பதற்கான காரணம் என கூறப்படுகிறது.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • 3 முறை குளத்தை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்த ளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும்.

    இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதன் சிகர விழாவான தெப்போற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமள ரெங்கநாதர் பெருமாள், கோயில் திருக்குளத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்க ப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்ப ட்டது.

    தொடர்ந்து, மூன்று முறை குளத்தைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடை ந்தது. இதில், கோயில் செயல் அலுவலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஸ்வரன், நகர மன்ற துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 எண்ணம் இலக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்புநி லையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு ள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தலுக்கு உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேற்படி திட்டத்தில் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்க்கும் திட்டத்தில் 0.1 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த மூலதன செலவினம் ரூ. 10 லட்சத்தில் மகளிர் பிரிவிற்கு மட்டும் 60 சதவீதம் மானியமாக ரூ.6 இலட்சமும், உள்ளீட்டு மானியச் செலவினம் ரூ.8 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சமும் ஆக கூடுதல் ரூ.10.80 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 எண்ணம் இலக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.எனவே மேற்படி திட்டத்தில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்புநி லையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×