என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja"

    • மதனகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடந்தது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    மதனகோபால சுவாமி கோவிலில் நேற்று கோ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து பசுவிற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், பசுவையும் வழிபட்டனர். மேலும் இளம்பெண்கள் பஞ்சபாண்டவர் சன்னதியில் உள்ள ஆண்டாள் சிலை முன்பு திருப்பாவை பாசுரங்களை பாடி, தங்களது வேண்டுதல் நேர்த்தி வழிபாட்டை தொடங்கினர்.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

    திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் உச்சிகால பூஜையின் போது சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நேற்று நடப்பாண்டின் கடைசி வெள்ளிக்கிழமை தினமாக இருந்ததால் திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மடப்புரம் கோவிலுக்கு இயக்கப்பட்டன. மேலும் திருப்புவனம்-மடப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

    இதேபோல் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவில்களில் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • லால்குடி அருகே நகர் கிராமத்தில் அய்யப்பன் மண்டல பூஜை விழா நாளை மாலை நடைபெறுகிறது
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து–வருகிறார்கள்

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால் குடியை அடுத்த நகர் கிராமத்தில் அய்யப்பன் மண்டல பூஜை விழா நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. விழாவுக்கு அகில பாரத அய்யப்ப சேவா சங்க மாவட்ட தலை–வர் ரமேஷ் தலைமை தாங்கு–கிறார். மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் வர–வேற்கிறார்.மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளா–ளர் சுரேஷ், அலுவலக செய–லாளர் அம்சராம், மாவட்ட தொண்டர்படை புஜ்பராஜ், குருசாமி வீரப் பன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக என்.வி.–முரளி கலந்து கொள்கி–றார்.அய்யப்ப மண்டல பூஜையை மாவட்ட கவுரவ தலைவர் எம்.வி.சபரிதாஸன், தலைவர் பாண்டி–யன், செயலாளார் சரவணன், ஆலோசகர் தர்மலிங்கம், செந்தில், ராஜகோபால், பாலசுந்தரம், சசிகுமார், செட்டியப்பன் ஆகியோர் நடத்துகின்றனர்.அய்யப்பன் புஷ்ப அலங்காரத்தை திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் டி.பி.ஞானஸ்கந்த குருக்கள் செய்து வருகி–றார். இந்நிகழ்ச்சியில் மண்டல அபிசேக உபய–தாரர் அய்யாவு, பிரபா–கரன், செல்வநாதன், ஆரோக்கியசாமி, ராஜ–மாணிக்கம், ராமலிங்கம், கதிரேசன், தேவராஜ், நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஜெரால்டு ஆரோக்கியராஜ், நெல்வியா–பாரி மனோகரன் பொதுப் பணிதுறை பிச்சை, திரு–மங்கலம் ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.செல்வம், ஓட்டுநர் பரமானந்தம், ராஜா ஆகி–யோர் நன்கொடை அளிக் கிறார்கள்.அன்று இரவு 7 மணி–யளவில் நாதஸ்வர புகழ் மணக்கால் கோவில் பிள்ளை மற்றும் திருச்சி சிந்தாமணி ஏசு, கார்த்திக்ராஜா, திரு–மங்கலம் கருனாநிதி, உறை–யூர் சத்தியமானவா கோபி குருசாமி ஆகியோரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து–வருகிறார்கள். முடிவில் மாந்துறை சிவன–டியார் மதியழகன் நன்றி கூறுகிறார்.


    • தனுர் மாத பூஜை கடந்த மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
    • புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம்.

    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்ற அழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராதா கல்யாணம் நடைபெற்றது. நந்தகோப மகாராஜாவின் புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.

    இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில்,அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.
    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்படி அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் சிவாச்சா–ரியார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது.

    குஞ்சு மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன் போன்ற மங்கல திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் சாற்றி வழிபட்டனர். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த சுமங்கலிப் பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை நடந்தது. பினனர் அவர்களிடம் திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

    துர்க்கை வழிபாட்டு குழு அமைப்பாளர் யசோதா கோபாலன் அனைவரையும் வரவேற்றார். விஜயகுமாரி, மலர்ச்செல்வி, சாந்தி, மல்லிகேஸ்வரி ஆகியோர் அனைவருக்கும் துணிகள் வழங்கினர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.

    விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புஷ்பாஞ்சலி கமிட்டி பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலை–மையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ரூ.29 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்துத்துக்கான கட்டுமானப் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியது: புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டிடம் 6 தளங்களைக் கொண்டதாகும். இதில் ஆண், பெண் தனித் தனி சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், தலைமை மருத்துவ அலுவலர் உஷா, நகர் மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    • மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு இருக்க வேண்டும்.
    • 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பூஜை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதாமோகன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் போது மாணவர்கள்- பெற்றோர்களுக்கு இடையேயான உறவின் மேன்மையை குறித்தும், மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது பற்றியும் தாளாளர் சுதாமோகன் சிறப்புரையாற்றினார்.

    400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பெற்றோர்களின் பாதம் தொட்டு பூஜை செய்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    • குளித்தலை அருகே சூரியனூரில் நடைபெற்றது
    • எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியனூர் ஊராட்சி பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25..5 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம், 2 சிமெண்ட் சாலை அமைத்தல்.சமத்துவ மயானத்திற்கு காத்திருப்போர் கூடம் ஆகிய பணிகள் துவங்க குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், விழாவில் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், அவைத்தலைவர் ராஜேந்திரன்,குளித்தலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெரு ந்தலைவர் பொய்யாமணி தியாகராஜன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரிசக்திவேல், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் வடிவேல், நங்கவரம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி செந்தில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஸ்சர்மா மற்றும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி செயலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன், துணைத்தலைவர் பாப்பாத்தி காசிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் திருஞானம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள மேலமறை க்காடர் கோவிலில் முதலாம் ஆண்டு சம்வஸ்தராபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

    விழாவையொட்டி கோபூஜை, கும்ப பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதியுடன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பிள்ளையார், முருகன், காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பூஜையில் செவ்வந்திநாத பண்டாரசன்னதி கயிலைமணி வேதரத்னம் உள்பட பிரமுகர்களும், கோவில் திருப்பணி குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.



    மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியில் சாரதா நகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டு நிகழ்ச்சியும், பிறகு மாலை சக்தி கரகம் எடுத்தாலும் நடைபெற்றது.

    அன்றைய நாளில் தாய மங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், புதன்கிழமை மீனாட்சி அம்மன், வியாழக்கிழமை காமாட்சி அம்மன், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மன் போன்ற அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தடையின்றி குடும்பத்தில் சகல சுப நிகழ்ச்சிகள் நடக்க வும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பெண்கள் மற்றும் மாண விகள் கலந்து கொண்ட னர்.

    அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. வருகின்ற 10-ந் தேதி பூச்செரிதல் விழாவும், 11-ந் தேதி முளைப்பாரி எடுத்து சுற்றி வருதல், 12-ந் தேதி பால்குடம், பூக்குழி இறங்கு தலும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.

    ×