search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ரூ.29 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை
    X

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ரூ.29 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ரூ.29 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்துத்துக்கான கட்டுமானப் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியது: புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டிடம் 6 தளங்களைக் கொண்டதாகும். இதில் ஆண், பெண் தனித் தனி சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், தலைமை மருத்துவ அலுவலர் உஷா, நகர் மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×