search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power pole"

    • மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது.
    • காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.

    அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.

    மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.

    உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
    • அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம், சென்னிமலை சாலை, புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது பழுதடைந்த நிலையில், கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

    அப்பகுதியில் வீடுகள் அதிகம் உள்ளதாலும், மழைக்காலம் என்பதாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் புதுச்லைசேரி சாலையில் உள்ள ஆலமரம் நள்ளிரவில் விழுந்து 3 மின்கம்பம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை பணியாளர்கள், பொதுப்பணி துறையினர், மரக்காணம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    • லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார் .
    • போலீசார் வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் (வயது36) என்பவர் ஓட்டிச் சென்றார் . நேற்று இரவு 7.40 மணி அளவில் முண்டியம்பாக்கம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சாலை முழுவதும் சிதறியது.

    இதனால் திருச்சி சென்னை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ் ,காத்தமுத்து மற்றும் போலீசார் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர். விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் லாரி மற்றும் கரும்புகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல் நிற்கிறது.
    • தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் காந்தி ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல் நிற்கிறது. இந்த மின் கம்பத்திலிருந்து ஏராளமான மின் இணைப்புகள் செல்கின்றன. இதனால் அந்த மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.

    எந்த நேரமும் விழும் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அரசு கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே உள்ள பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் அமைந்துள்ளன. இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். மின் கம்பம் சாய்ந்து விழும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
    • சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் அடியில் இருந்து 6 உயரத்திற்கு சிறிய அளவிலான மற்றொரு இரும்பு கம்பம் நடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிசையாக நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்றில் பெரிய மின் கம்பத்துக்கும் அதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    இந்த மின்கம்பம் அமைந்துள்ள வயல் தற்போது தரிசாக காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகள் தொடங்கிவிடும். அப்போது இதில் வளர்ந்துள்ள மரம் மேலே உள்ள மின்சாரக் கம்பியை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மின்சார வயர்களின் வழியாக செல்லும் கிராமங்களில் மின்தடைஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பூதராய நல்லூர் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்றி சீரான மின்விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் மின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
    • அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிர குடும் பத்தினர் வசித்து வரு கின்றனர். அந்தந்த பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் வாரிய அலுவலர்கள் முறை யாக மின்கம்பத்தை பராமரிக்காததால் தற்போது பல மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.

    குறிப்பாக கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் கம்பத்தின் தலை பகுதியில் உள்ள சிமெண்டுகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

    இந்த மின்கம்பம் அருகே குழந்தைகள் விளையாடி வரு கின்றனர். அதுமட்டுமல்லாது அந்த மின்கம்பத்தை கடந்து முதியோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்கின்ற னர். அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வுகள் ஏற்பட்டு அவ்வப்போது மின்தடையும் ஏற்படுகிறது. பல மாதங்க ளாகியும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் உடைந்து விழும், டிரான்ஸ்பார்மர்கள் எப்பொழுது வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. இதனை மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரங்களை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். பழுத டைந்த மின்கம்பங்களால் நகரில் பல பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படு வதற்குள் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
    • போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.

    இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

    இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

    இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது
    • மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.

    ஈரோடு, 

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ஜோசப் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜோசப் தோட்டம் பகுதியில் உயர் மின்னழுத்த லைன் செல்கிறது.

    இங்குள்ள ஒரு உயர் மின் அழுத்த லைனில் உள்ள மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.

    அந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து எந்த நேரமும் விழும் சூழ்நிலையில் உள்ளது.

    மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கீழக்கரையில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பங்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பாவது:-

    கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மக்கள் அதிகம் நடமாடக்கூடிய முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு இருந்த மின் கம்பத்ைத அகற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும். கீழக்கரை முக்கு ரோட்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்து கொண்டு இருக்கிறது. அந்த மின்கம்பத்தில் மின்சாரம் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் கீழக்கரையில் தெருக்களில் ஆங்காங்கே மின்சார வயர்கள் பொதுமக்கள் தொடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவைகளை உயரத்தில் கட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனு கொடுக்கும் நிகழ்வில் நகர செயலாளர் காதர், துணைத்தலைவர்கள் சுல்தான், சிக்கந்தர், ரீகான் செயற்குழு உறுப்பினர்கள் ஜலீல், ராஜா, சித்திக், அஸ்ரப் மற்றும் தாஜூல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மின் வாரிய ஊழியர்கள் இந்த கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
    • வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

    உடுமலை :

    உடுமலை-தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் காங்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டும், இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளதால் அச்சத்துடனேயே மக்கள் அந்த பகுதியை கடக்கும் நிலை உள்ளது.

    அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மின் வாரிய ஊழியர்கள் இந்த கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

    மேலும் பொதுமக்கள் இந்த கம்பத்துக்கு அருகில் வருவதற்கே அஞ்சும் நிலை உள்ளதால் அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே இந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

    தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

    தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.

    இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.

    அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-

    தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.

    ×