search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power station"

    • பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 20 நாட்களாக நடைபெற்றது.

    இப்போராட்டத்தில் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த ஜிவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும்போது, போராட்டத்தை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி தீர்ப்பு வரஉள்ளது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.

    அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    • என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
    • நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி.2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பூவுலக நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் அதிக அளவு பாதரசம், செலினியம் மற்றும் புளோரைடு இருப்பது தெரியவந்தது. வடக்கு வேலூர் தொல்காப்பியர் நகரில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு நீரில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கபட்ட வரம்பை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் குடிநீரில் அதிகஅளவு கொந்தளிப்பு மற்றும் செலினியம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பொதுமக்களுக்கு சீறுநீரக பிரச்சனைகள், சுவாச மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி தூசி மற்றும் சாம்பலின் மாசுபாடுகள் வீடுகளில் இருப்பதை ஆய்வு கண்டிறியப்பட்டுள்ளது.

    கரிக்குப்ப கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மாசுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உள்ளுர் நீர்நிலைகளில் சாம்பலை கொட்டுவதை நிறுத்தவும் சாம்பலை எடுத்து செல்லும் ஓடைகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. பகுதிகளில் குடியிருப்போருக்கு வருடத்திற்கு 2 முறை இலவச சுகாராத முகாம் நடத்த வேண்டும். சுகாதார பிரச்சனைகள் உள்ள கிராமங்களை என்.எல்.சி. பொதுமருத்துவமனை கண்காணிக்க வேண்டும். நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மண் வாழ்வியலாளர் சுல்தான் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்தது. 2-வது அணு உலையில் உற்பத்தி இன்று தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணு மின் நிலையத்தில் ஒன்று மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டுவருகிறது. 

    இவற்றின் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட்டு க்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3-வது மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    இது தவிர 5 மற்றும் 6-வது அணுஉலைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது.

     அந்த பணி இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    • கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
    • கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுதா, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.

    பற்றாளர் தேவகுமார் கூட்டத்தை நடத்தினார்.

    கூட்டத்தில் கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது
    • இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும்

    விழுப்புரம்:

    திருவெண்ணெநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் பல தடவை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்க ளுக்கு அச்சம் ஏற்படுவதா கவும் திரௌ பதியம்மன் கோவில் திருவிழா நடைபெ றுவதால் சாமி வீதி உலா தேர் வீதி உலா வரும்பொழுது இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும் எனக்கூறி அரசூர் மின்வாரிய அலுவலகத்தை அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது திருவெ ண்ணெநல்லூர் உதவி செயற் பொறியாளர் பாக்கியராஜ், உதவி மின் பொறியாளர் மீனலோச்சனி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாழ்வாக உள்ள மின்கம்பத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகவும் அடிக்கடி அறுந்து விடும் மின்கம்பிகளை மாற்றி புதிய மின்கம்பி அமைத்து தருவதாகவும் கூறினார்

    அதன் பேரில் போரா ட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். அதன் பிறகு உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்
    • ஜவ்வாது மலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அமைகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில்10, ஆயிரம் வீடுகள் மற்றும் விவசாய பம்பு செட்டுகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஒட்டி திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ., கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ரூ.8.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து புதிய துணை மின் நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பேலூர் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் சி.அருள் பாண்டியன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் (பொது) எம்.சம்பத் முன்னிலை வகித்தார்.

    அனைவரையும் உதவி செய்ய பொறியாளர் எம்.கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. திருப்பத்தூர் நல்லதம்பி

    எம்.எல்.ஏ., கலந்துகொண்டு ரூ.8.46 கோடியில் கட்டப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றிகளை தொடங்கி வைத்தும் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்எல்ஏ பேசியதாவது:-

    ஜவ்வாது மலையில் 15 ஆண்டுகளாக துணை மின் நிலையம் கேட்டு போராடி இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மின் நிலையம் அமைக்க திருப்பத்தூர் கங்கலாபுரம் மின் நிலையத்திலிருந்து 578 மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளது. வனத்துறையில் மின்கம்பங்களை எடுத்துச் செல்ல ரூ 1,கோடியே 25 லட்சம் கட்டப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையம் சீரான மின்சாரம் ஜவ்வாது மலை முழுவதும் கிடைக்கும், 15 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இந்த துணை மின் நிலையம் பெற்றுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சி. என். அண்ணாதுரை எம்பி பேசியதாவது:-

    50 ஆண்டு காலத்தில் முதல் முறையாக திருப்பத்தூர் அடிவாரத்தில் இருந்து புதூர் நாடு வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரம் அகலப்படுத்தி தார் சாலை அமைக்க ப்பட்டுள்ளது. மேலும் ஜவ்வாது மலை பிரதம மந்திரி கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஜவ்வாது மழையில் செல்போன் டவர் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என பாராளுமன்றத்தில் பேசியதற்காக திருவண்ணாமலை, ஜவ்வாது மலை ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில்32, இடங்களில் 4-ஜி செல்போன் அவர்கள் அமைக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நான்கு இடங்களில் ஜவ்வாது மலையில் அமைக்கப்பட உள்ளது மேலும் புதிய வங்கி கிளை திறக்கப்பட உள்ளது என அவர் பேசினார்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்த அம்மாள் நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர் , மேரீஸ் கார்னர், திருச்சி ரோடு, ராமகிருஷ்ணபுரம், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர் , பாண்டியன் நகர், எஸ்.இ. அலுவலகம், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர் , பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை பகுதியில் 22-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது.

    இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், சிறுவாச்சி, அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டு நிலைகளில் செயல்படும் ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் முதல் நிலை முதல்அலகில் உள்ள கொதிகலன்குழாயில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதே போல் இரண்டாவது நிலை முதல் அலகிலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது.

    மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வல்லூரில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்தது. இன்று காலை முதல் அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    நிலக்கரி பற்றாக்குறை எதிரொலியால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. #coal #CoalImportScam

    மேட்டூர்:

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவான பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

    2-வது பிரிவான புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். 2 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.

    கடந்த வாரம் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1040 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலக்கரி வேகன்கள் வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.


    இந்த நிலையில் போதுமான நிலக்கரி இருப்பு இல்லாததால் நேற்று முதல் மீண்டும் பழைய அனல் மின் நிலையத்தில் 4-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக இன்றும் அந்த அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி முடங்கி உள்ளது.

    மேட்டூர் அனல் நிலையத்தில் 50 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே நிலக்கரி இருப்பு உள்ளது. இதனால் பழைய அனல் மின் நிலையத்தில் 4-வது யூனிட் நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட்டுக்கு பதிலாக 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூ புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு பதிலாக இன்று 400 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தேவைக்கு தகுந்தாற் போல மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

    தற்போது மின்சாரம் குறைவாக தேவைப்படுவதால் பழைய அனல் மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தேவை அதிகரிக்கும் போது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றனர்.#coal #CoalImportScam

    வடமதுரை மின் நிலையத்தில் பூட்டை உடைத்து வயர்கள் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமதுரை:

    வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக அலுமினிய கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டு இருந்தது. 

    இது குறித்து மின் வாரிய உதவி பொறியாளர் மகேஸ்வரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யலூர் அருகே உள்ள கந்தமநாயக்கனூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின் வயர்கள் அறுத்து திருடப்பட்டன. தொடரும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்? என தெரியாததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பீதியடைந்துள்ளனர்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதே போல இரண்டாம் நிலை இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலை மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.

    இதையடுத்து அதில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நிலைகளில் மொத்தம் 1620 மெகா வாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

    கொதிகலன் குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #ThermalPowerStation

    ×