search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.8.46 கோடியில் துணை மின் நிலையம்
    X

    ரூ.8.46 கோடியில் துணை மின் நிலையம்

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்
    • ஜவ்வாது மலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அமைகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில்10, ஆயிரம் வீடுகள் மற்றும் விவசாய பம்பு செட்டுகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஒட்டி திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ., கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ரூ.8.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து புதிய துணை மின் நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பேலூர் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் சி.அருள் பாண்டியன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் (பொது) எம்.சம்பத் முன்னிலை வகித்தார்.

    அனைவரையும் உதவி செய்ய பொறியாளர் எம்.கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. திருப்பத்தூர் நல்லதம்பி

    எம்.எல்.ஏ., கலந்துகொண்டு ரூ.8.46 கோடியில் கட்டப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றிகளை தொடங்கி வைத்தும் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்எல்ஏ பேசியதாவது:-

    ஜவ்வாது மலையில் 15 ஆண்டுகளாக துணை மின் நிலையம் கேட்டு போராடி இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மின் நிலையம் அமைக்க திருப்பத்தூர் கங்கலாபுரம் மின் நிலையத்திலிருந்து 578 மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளது. வனத்துறையில் மின்கம்பங்களை எடுத்துச் செல்ல ரூ 1,கோடியே 25 லட்சம் கட்டப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையம் சீரான மின்சாரம் ஜவ்வாது மலை முழுவதும் கிடைக்கும், 15 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இந்த துணை மின் நிலையம் பெற்றுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சி. என். அண்ணாதுரை எம்பி பேசியதாவது:-

    50 ஆண்டு காலத்தில் முதல் முறையாக திருப்பத்தூர் அடிவாரத்தில் இருந்து புதூர் நாடு வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரம் அகலப்படுத்தி தார் சாலை அமைக்க ப்பட்டுள்ளது. மேலும் ஜவ்வாது மலை பிரதம மந்திரி கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஜவ்வாது மழையில் செல்போன் டவர் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என பாராளுமன்றத்தில் பேசியதற்காக திருவண்ணாமலை, ஜவ்வாது மலை ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில்32, இடங்களில் 4-ஜி செல்போன் அவர்கள் அமைக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நான்கு இடங்களில் ஜவ்வாது மலையில் அமைக்கப்பட உள்ளது மேலும் புதிய வங்கி கிளை திறக்கப்பட உள்ளது என அவர் பேசினார்.

    Next Story
    ×