என் மலர்
நீங்கள் தேடியது "price hike"
- சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
- கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாக மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் மூலம் எண்ணெய் பிழியப் பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் டேங்கர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில், லாலாபோட்டை, வாணியம்பாடி, முத்தம்பட்டி, திருச்சி, கரூர், வாகரை, தேவத்தூர் பகுதி விவசாயிகள் 140 பேர், 64 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1264 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 19 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.6 அதிகரித்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ரூ.4 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60.80 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.49 லட்சது 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
தற்போது முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தேங்காய் விலையும் தேங்காய் பருப்பு விலையும் கடகடவென சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் சற்றே விவசாயிகள் நிம்மதி அடையும் வகையில் விலை உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் விலைகளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
பொன்னேரி:
தமிழகத்தில் பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இந்நிலையில், பொன்னேரி அண்ணா சிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர துணைத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
மேலும், பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதி கேசவன், பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ் சர்மா, மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் சோமு ராஜசேகர், தாட்சாயினி மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
- விலை உயர்வு நெக்சான் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில், நெக்சான் மாடலின் புதிய விலை விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்வின் படி சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான், XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) டார்க் மற்றும் XZA + (O) டார்க் என ஆறு வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன.
மற்ற வேரியண்ட்களான ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எடிஷன் முன்பை போன்றே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. நிறுத்தப்பட்ட வேரியண்ட்களுக்கு மாற்றாக XZ+ (HS), XZ+ (L), XZ+ (P), XZA+ (HS), XZA+ (L) மற்றும் XZA+ (P) போன்ற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புது வேரியண்ட்களில் எந்த விதமான புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

விலை உயர்வின் படி டாடா நெக்சான் பெட்ரோல் வேரியண்ட் விலை குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்சான் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.
டாடா நெக்சான் பெட்ரோல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 62 ஆயிரத்து 900 ஆகும். டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- திருப்பத்தூர், நெற்குப்பையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நெற்குப்பை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வழிகாட்டு தலின்படி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவரும், மாவட்ட பாம்கோ சேர்மனுமான ஏவி.நாகராஜன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஏ.எல்.சிவானந்தம் (எ)போஸ், மாவட்ட சேர்மன் பொன்மணி.பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவருமான கரு.சிதம்பரம், ஒன்றிய செயலா ளர்கள் குணசேகரன், வடிவேல், செந்தில்.மா
வட்ட பேரவை துணை செயலாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஆசிப் இக்பால், மாவட்ட வக்கீல் பிரிவு அழகர்சாமி, ராபின் சையது முகமது, ராஜசேகர், நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம்.
நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாகராஜன், மாவட்ட பேரவை பொருளாளர் நேரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க.சார்பில் நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் தி.மு.க. ஆட்சியை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புதுமடம் தர்வேஸ், ஸ்டாலின் ஜெயசந்திரன், சரவணக்குமார், செந்தில் குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராமநாதபுரம் நகர துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, கீழக்கரை நகர அவைத்தலைவர் சரவணபாலாஜி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சுரேஷ், நகர முன்னாள் செயலாளர் இம்பாலா உசேன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மின் கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.
- அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டி மேடு ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன
போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கல்பட்டு முத்துமைச்செல்வன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், ராஜா, ஜே. பேரவை துணைச் செயலாளர் பாலாஜி, இணைச் செயலாளர் செங்குட்டுவன், நிர்வாகிகள் வக்கீல் பிரபாகரன், கனல் கண்ணன், பழக்கடை மணிகண்டன், வண்டி மேடு ராஜா ராமன், பன்னீர், கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். இதேபோல் திண்டி வனம், கோட்டக் குப்பம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. மாநில நிர்வாகி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிநகரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ராமநாதபுரம் பாரதிநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலை மையில், மண்டபம் (மேற்கு) ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபா லசிங்கம், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், முதுகுளத்தூர் நகர் கழக செயலாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.
ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டி யன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், மருதுபாண்டியர் நகர் ராஜேந்திரன், பாரதிநகர் தினகரன், மாரியப்பன், வசந்தநகர் வீரபாண்டியன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கருணாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய பொருளாளர் ரகுபதி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் தெய்வேந்தி ரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், கங்காதேவி, மாவட்ட மீனவரணி துணை செயலாளர் வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் தலைமையில், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சுமதிஜெயக்குமார், செவத்தான் முனியாயி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன், நாகநாதன், காஞ்சிரங்குடி பாலு, முன்னாள் கவுன்சிலர் சரண்யா நாகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் வழங்கினர்.
ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி யன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவிகா, ஒன்றிய கவுன்சிலர்களான ராஜ்குமார், குப்புராமு சாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் பால், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டி பங்களாவில் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிர்வாகிகள் பிச்சை, பாண்டி, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர் கேட்டுகடையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரேவதி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினர்.
- வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வாழை இலை ஏலம் நடக்கிறது.
- வாழை இலை கட்டுகளின் வரத்து மிகவும் குறைவானது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வாழை இலை ஏலம் நடக்கிறது.
வாழைத்தார் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு கொண்டு வரப்பட்டாலும், வாழை இலை அதிகபட்சமாக ஆனைமலை, சேத்துமடை, அம்பாரம்பாளையம், நெகமம், கோமங்கலம், ஆழியார், கோட்டூர், சமத்தூர், வடக்கிபாளையம், பொன்னாபுரம், ராமபட்டிணம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இதை உள்ளூர் மற்றும் கேரள பகுதி வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து ஏலம் மூலம் வாங்கி செல்கின்றனர்.
திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் அதற்கு தகுந்தாற்போல வாழை இலை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் வாழை இலை அதிகளவு துளிர் விட்டது.
இதனால் மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து அதிகரித்தது. மேலும் விஷேச நாட்கள் ஒரளவு இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனையானது.
இந்த மாதத்தில் கடந்த 2 வாரமாக விஷேச நாட்கள் குறைவாக இருந்ததாலும், இரவு நேரத்தில் பனியும், பகல் நேரத்தில் கடுமையான வெயில் காரணமாகவும், பல இடங்களில் வாழைகள் வாடி வதங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரமாக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வாழை இலை கட்டுகளின் அளவு வெகுவாக குறைந்தது.
நேற்று நடந்த ஏலத்தின் போது, வாழை இலை கட்டுகளின் வரத்து மிகவும் குறைவானது. இதனால் வாழை இலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் கொண்டு வரப்படும்.
ஆனால் நேற்று 100க்கும் குறைவான இலை கட்டுகளே கொண்டு வரப்பட்டது. வாழை இலை வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் 7 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வாழை இலை அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது.
அதிலும் கேரள வியாபாரிகள் கலந்து கொண்டு இலைகட்டுகளை அதிகளவு வாங்கி சென்றனர் என பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்படுகிறது.
- பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு எஸ்யுவி மாடல்களின் புதிய விலை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு எஸ்யுவி-க்கள் புதிய RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதால் இவற்றின் விலை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தப்படுகிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 31 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. பொலிரோ நியோ மாடலின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்கிறது.
புதிய விலை விவரங்கள்:
பொலிரோ நியோ ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்தில் துவங்கி ரூ. 12 லட்சத்து 14 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 79 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொலிரோ நியோ மாடலின் N10 லிமிடெட் எடிஷன் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொலிரோ B4 வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதன் டாப் எண்ட் B6 (O) விலை ரூ. 31 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ B6 விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 10 லட்சம் என்றே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 100 பிஎஸ் பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பொலிரோ மாடலில் 75பிஎஸ் பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு எஸ்யுவி-க்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
- தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
- பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து கடந்த சில நாட்களாக அதன் விலை கிடு, கிடுவென அதிகரித்து உள்ளது.
பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல் பச்சை மிளகாய், இஞ்சி விலையும் எகிறி உள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.100-க்கும், இஞ்சி ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்து உள்ளதால் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளை குறைத்து இல்லத்தரசிகள் வாங்குகிறார்கள். காய்கறி விலை அதிகரிப்பால் குடும்ப தலைவிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக விலை குறைந்து இருந்த தக்காளியின் விலையும் உயரத்தொடங்கி உள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று வியாபாரிகள் கூறினர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் காய்கறி விலை (கிலோவில்) வருமாறு:-
உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.25, பன்னீர் பாகற்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.80, பட்டை கொத்த வரங்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.30, பீன்ஸ்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.60, முட்டை கோஸ்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.17.