என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "prize money"
- ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுகிறது.
- இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.
கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் வென்றது.
இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது.
ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தால் ரூ.2 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெண்கலப்பதக்கம் பெற்றால் ரூ.75 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது.
- திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.
- கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
மன்னார்குடி:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.
இதில் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவன் யோகேஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
பின்னர், மாணவன் யோகேஷ்ராஜையும், அவரது பெற்றோரையும், மாணவனை போட்டிக்கு தயார் செய்த தமிழாசிரியர் ராசகணேசனையும், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன், துணை தலைவர் கைலாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- ஐ.சி.சி. கூட்டம் தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
- இதில் திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டர்பன்:
ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே அறிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளில் தற்போது டி20 வடிவிலான லீக் போட்டிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்காவில் எம்.எல்.சி. லீக் நடத்தப்படுகிறது. சவுதிஅரேபியாவிலும் டி20 கிரிக்கெட் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. டி20 லீக்கில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.சி.சி. தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 208 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
- வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை பெற்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 208 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனு க்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர்களை கூடைப்பந்து போட்டியில் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் வெற்றி பெற்று பரிசுத்தொகை மற்றும் கேடயத்தை பெற்றதையொட்டி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பாராட்டினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
- 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை.
மும்பை:
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கபட உள்ளது. இதனை ஐசிசி அறிவித்துள்ளது.
- இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.
- அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.
மும்பை:
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அரையிரயிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் ஐசிசி அறிவித்தபடி அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) ,. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அந்த வகையில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.
- உமாதேவிக்கு நல்லாசிரியர் விருதும், ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
- உமாதேவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
முதுகுளத்தூர் :
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர், உமாதேவி. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்.
கடந்த 5-ந் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், ஆசிரியை உமாதேவிக்கு விருதும், ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அவருக்கு சக ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மேலும் அவர் பள்ளிக்கு வந்தபோது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வரவேற்றனர். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் வேல்முருகன், இந்திராகாந்தி, தலைமை ஆசிரியை ஜோசப் விக்டோரியா ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்து காணப்படுவதால் தனக்கு அரசு வழங்கிய பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தையும், தனது தந்தை மோகன்தாஸ் சார்பாக ரூ.10 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.20 ஆயிரத்தை பள்ளியின் கட்டிடத்தை சீர்செய்ய தலைமை ஆசிரியையிடம் உமாதேவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும்.
- மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின்படி 2022ஆம் ஆண்டு செப்ட ம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டியும், செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டியும் அனை த்து மாவட்டங்க ளிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்க ளுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்க ப்பெற தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில்பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி 15-9-2022 அன்று வியாழக்கிழமையும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 17-9-2022 அன்று சனிக்கிழமையும் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்த னியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.
இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும்.
இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. பள்ளிப் போட்டியானது காலை 9.30 மணிக்குத் தொடங்கப்படும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
- வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுதொகையும்,சுழற்கோப்பையும் வழங்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமழை மா.சு.மணிநினைவு கபாடி கழகம் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடக்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
போட்டிகளில் முதல் பரிசு ரூ. 30,099 நாகப்பட்டினம் அணியினரும், இரண்டாவது பரிசு ரூ. 25,099 ஆறுகாட்டுத்துறை அணியினரும், மூன்றாவது பரிசு ரூ. 20,099 வடமழை மா.சு.மணி நினைவு கபாடி கழகத்தினரும், நான்காம் பரிசு ரூ. 15,099 அக்கரைப்பேட்டை அணியிணரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையோடு சுழற்கோப்பையும் வழங்கபட்டது. விழாவின் முடிவில் கவி இளவரசன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்