என் மலர்
நீங்கள் தேடியது "Problem"
- 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் பலனில்லை
- கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு பட்டவையனார் கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைக்க முயன்ற சிவந்தான் கரைகாரர்களுக்கும், அதைத்தடுக்க முயன்ற தாணான் கரைகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தாண ன் மற்றும் சிவந்தான் கரைகளைச் சேர்ந்த 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இக்கோயில் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2 சமாதான கூட்டமும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சமாதான கூட்டமும் நடைபெற்றது, இந்நிலையில் மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு வகையில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவ லர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு சமாதான கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த சமாதான கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கோயில் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
- கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கதவு திறக்காமல் போன விவகாரம்...
- விரைவில் விசாரணை தொடங்க உள்ளது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத் திலிருந்து பல்வேறு வெளிநா–டுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்குவதற்கு தயாரானார்கள். ஆனால் விமானத்தில் கதவுகள் திறக் கப்படவில்லை. ஊழி–யர்கள் முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே விமானத் திற்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் பெரும் அவ–திக்கு ஆளானார்கள். பின்னர் உடனடியாக இது பற்றி தொழில்நுட்ப வல்லு–நர்களுக்கு தகவல் தெரி–விக்கப்பட்டது. அவர்கள் வந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை திறந்தனர். அதன் பிறகே பயணிகள் வெளியே வர முடிந்தது.இந்த விவகாரம் தொடர் பாக விமான நிலைய ஆணையக் குழுவின் சார் பில் விசாரணைக்கு உத்தர–விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த விமான நிலைய ஆணைய குழுவினர் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.
- கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
- உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று போலீசார் -வணிகர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமை தாங்கி பேசியதாவது :-
கடைகளில் யாராவது பொருட்கள் திருடுகிறார்களா என கண்காணிப்பதற்காக கடையின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளீர்கள். அதேபோல் கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
அப்படி செய்தால் தான் மர்ம நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் சார்பில் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வணிகர்கள் கூறும்போது, போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நகரில் இரவு நேரங்களில் அதிக அளவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.
மாநகரில் 1400 கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
- கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
- தீபா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது 25) மரப்பட்டையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது திருமணமாகி 2 மாதம் ஆகிறது.
கணவன்- மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணிக்கராஜா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தீபா வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே தீபாவை அவரது கணவர் மாணிக்கராஜா பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது தீபா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து தீபாவின் தாயார் கற்பகம் எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பாபநாசம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் தீபாவுக்கு திருமணமாகி 2 மாதம் ஆவதால் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரணை நடத்தி வருகிறார்.
- மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார்.
- கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டியை அடுத்த பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32). இவருக்கு அதே பகுதியைசேர்ந்த மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார். இவர்களை மீட்டு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று பவித்ராவின் தந்தை சிவா என்பவர் அடையாளம் தெரியாத 3 பேருடன் கோபி யின் வீட்டிற்கு சென்று கோபியின் பெற்றோரிடம் ஆகியோருடன் தகராறு செய்தனர். இதை அறிந்த கோபியின் பெரியப்பா மகன் கார்த்திக் தட்டி கேட்டார்.
அப்போது சிவா மற்றும் அவருடன் வந்த நபர்கள் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர். காயமடைந்த கார்த்திக் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளர். இது பற்றி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவா மற்றும் அவருடன் வந்தவர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகள், பெண்களுக்கான பிரச்சினை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண் கள் குழந்தைகள் காண வில்லை, போக் சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரு கிறது.
இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் திருச் சுழி காவல் துணை கண் காணிப்பாளர் அறிவுரை யின் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீர்மானிக்கப்பட்டு அ.முக் குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை, நேர்த்தியாயிருப்பு இடையப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த கிராம மக்களிடம் அ.முக்குளம் காவல்நிலைய சார்பு ஆய் வாளர் அசோக்குமார் நேரில் சென்று பொது மக்கள் மற்றும் காவல்துறை யினர் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும், பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்தும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் குழந்தைகளி டம் பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாயி னும் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரி விக்கலாம் எனவும், வேலைக்கு சென்று வரும் பெண்கள் சந்திக்கும் பிரச் சினைகளை பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணான 181 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி னார்.
மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தா லோ, சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற் பனை செய்தாலோ உடனடி யாக இதுகுறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின் போது சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
- ரவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அவரப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த வர் நந்தகுமார். இவர் செஞ்சி ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் திண்டிவனம் பொலகுப்பம் அருகே காலி மனை அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரோசனை போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு திண்டி வனம் அரசு பொது மருத்து வமனைக்கு பிேரத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீஸ் விசாரணை செய்தனர். விசாரணையில் நந்த குமார் சட்டை பையில் ஒரு துண்டு சீட்டில் திண்டிவனம் முருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கேண்டீன் ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
அவர் பாக்கெட்டில் இருந்த சீட்டை வைத்து கேண்டீன் ரவியை போலீ சார் விசாரணை செய்தனர். விசாரணையில் கேண்டீன் ரவிக்கும் நந்தகுமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இதனால் ரவி நந்த குமாருக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதனால் விரத்தி அடைந்த நந்தகுமார் தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை யடுத்து கேண்டீன் ரவிக்கு திடீரென உடல்நிலை சரி யில்லாததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்து உள்ளனர்.
- பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வேண்டும், பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வாரச் சந்தை வளாகத்துக்கு சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் அக்டோபா் 9-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இந்நிலையில், பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, பொறுப்பாளா்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், அதிமுகவைச் சோ்ந்த ஜெயபால், மூா்த்தி, மதிமுகவை சோ்ந்த பாபு, காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ள கடையடைப்பை திரும்பப் பெற வேண்டும், அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கரூரில் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது
- வலைதளத்தை வேண்டுமென்றே முடக்கி வைப்பதாக குற்றச்சாட்டு
கரூர்,
கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 7 திரையரங்குகளில், 5 திரையரங்கங்களில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19-ந் தேதி வெளியாக உள்ளது.கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கரூர் சினிமாஸ் என்ற இணையதளம் மூலம் ரசிகர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியானது. ஆனால், 10 நிமிடத்திற்குள் வலைத்தளம் முடக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும், அதைத்தொடர்ந்து 11 மணிக்கும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெப்சைட் இயங்கவில்லை. மேலும், 19-ந் தேதி வரை படத்திற்கான டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.ரசிகர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே இணையதளத்தை முடக்கி வைத்துவிட்டு, மறைமுகமாக திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் விற்பனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டபோது, ஒரே நேரத்தில் ஏராளமான நபர்கள் வலைதளத்தை பயன்படுத்துவதால் இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
- குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
- பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.
சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.
- பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும்.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் விதமாக கருத்தரங்கத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது - பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னே ற்றும் வகையில் "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும். 2022-2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுக்கவும், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகச் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்துபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சாரா செலின் பவுல் , சமூக நலத்துறை அலுவலர் கோமதி , அரசு டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.
- இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகுக்கிறது.
தற்போது இரவு 8.30 மணியில் இருந்து உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மெதுவாக உள்ளதாகவும், பலரும் அப்ளிகேஷனை ஓபன் செய்ய முடியாமலும் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.
இதை அந்நிறுவனம் வேகமாக சரி செய்ய வேண்டும் என்று மக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியவாறு உள்ளனர்.