என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "products"

    • விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கல்.
    • பாட்டு போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றியதொடக்க ப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அனைவரையும் தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளைய ராஜா நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி, கிராம கமிட்டி உறுப்பினர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுகம் நேரு படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

    அப்போது மேலநம்ம ங்குறிச்சி கிராம கமிட்டி உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மேசை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு உபகரண பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப ட்டது.

    தொடர்ந்து,பாட்டு போட்டி, பேச்சு போட்டி களில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.

    அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

    • வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று முதல் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது. காலை முதலே வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபடத் தொடங்கினர்.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனை நடைபெறுவதை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏராளமான பொதுமக்கள் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்தனர்.

    • 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
    • ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து

    கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து

    வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள

    வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    • மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
    • ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி விற்பனையை தொடங்கி வைத்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.

    இதன் மூலம் வருகின்ற நிதி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    • தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.
    • மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஈஞ்சார் மேற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 58). இவர் ஈஞ்சார் விலக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    அந்தப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது 137 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    அங்கிருந்து புகையிலை பாக்கெட்டுகள், ரூ.5 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகாசி அருகேயுள்ள முருகையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் போலீசார் சோதனையிட்டபோது, 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கலை நிகழ்ச்சிகளில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் இந்த ஆண்டு கோடை விழா நேற்று மாலை தொடங்கியது.

    இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

    பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் நன்றி கூறினார்.

    ×