என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prohibition"

    • 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
    • மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    1960ல் பம்பாய் மாகாணத்தில் இருந்து பிரிந்து குஜராத் மாநிலம் உருவானத்தில் இருந்து அங்கு மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது. 

    ஆனால் அங்கு ஆளும் பாஜக அரசு, கடந்த 2023 இல் காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் (Gandhinagar Gift City) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விருந்தினர்களுக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு அளித்தது.

    இந்நகருக்கு வரும் உலகளாவிய முதலீட்டாளர்கள், அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்காக இந்த தளர்வு அளிக்கப்பட்டிருந்ததது. அதன்படி இந்நகரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் மது விற்பனை நடந்து வருகிறது.

    இந்நிலையில் கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விற்ற மதுபானங்களின் மூலம் குஜராத் அரசு ரூ. 94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தகவலை இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

    மதுவிலக்கு மற்றும் கலால் இலாகாவை தன்வசமே வைத்துள்ள பூபேந்திர படேல், மதுபான விற்பனைக்கு வழங்கப்பட்ட உரிமம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பூபேந்திர படேல் பேசியதாவது, ஜனவரி 31, 2025 நிலவரப்படி, கிஃப்ட் சிட்டியில், 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.

    இங்கு மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மதுபான விற்பனையிலிருந்து மாநில அரசு ரூ.94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும் பூபேந்திர பாகல் தெரிவித்தார். பூரண மதுவிலக்கு அமலில் இருந்தும் வணிக நோக்கங்களை கருத்தில் கொண்டு குஜராத் அரசு வழங்கியுள்ள இந்த தளர்வும், அதன்மூலம் வருமானம் ஈட்டி வருவதும் விமரிசனத்துக்குள்ளாகி வருகிறது.

    • மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது.
    • விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி, ராமபட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் வாழும் பகுதிக்குஅருகில் இயங்கும் கல் குவாரிகள் செயல் பாடுகளால் அதீத வாழ்வியல்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இக்குவாரிகளின் செயல் பாடுகள் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக வெடிகளை பயன்படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படுகிறது.

    மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் முறையாக புகை மாசுகளை கட்டுப்படுத்தக் கூடிய எந்த ஒரு நடவடிக்கையும்மேற்கொள்ளாத காரணத்தால் அதிக மாசு மற்றும் குழந்தைகள் வெடிச்சத்தம் கேட்டு அழுது கொண்டும் விரக்தியிலும்உள்ளார்கள். விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.கிணற்றின் சுற்றுச்சுவர்கள் சேதமடைகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கைஎடுத்து மேற்கண்ட குவாரிகளில் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி மின்சார வாரிய செயற்பொ றியாளர் லதா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை 29-ம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் நடந்தது.
    • இதனைத்தொடர்ந்து தனியார் மகாலில் வெடி வெடிக்க தடை பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத்தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சிவக்குமார், சுசிலா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நகராட்சி 24 வார்டுகளிலும் குடிநீர் வசதி, ரோடு வசதி, தெரு விளக்கு என தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவுன்சிலர்களின் கோரிக்கையாக உசிலம்பட்டி பகுதிகளில் தனியார் மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு வெடி வெடிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தனியார் மகாலில் வெடி வெடிக்க தடை பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.
    • குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். அப்போது மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.

    இதனால் சமீப காலமாக குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அதிக அளவில் புறப்பட்டு அருவிக்கரைகளில் நடமாட தொடங்கிவிட்டன. இதனால் அவை உணவுக்காக கடைகளில் புகுவதும், சுற்றுலா பயணிகளை கடித்து காயப்படுத்துவதும் என பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து இன்று மெயினருவி கரையில் வனத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும். அவைகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது தவறு.

    இது அவைகளை இடையூறு செய்வதற்கு சமம். எனவே குரங்குகளுக்கு இனி யாரேனும் உணவளித்தால் வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனச்சரக அலுவலர் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்த பலகையில் எழுதப்பட்டுள்ளது.

    • சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
    • விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தா சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார். கீழ்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் பெத்தாசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தாசமுத்திரம் பெரு மாள் கோவில் அருகே பனை மரத்தில் பானை கட்டி இருந்ததை பார்த்த னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பானையின் உள் பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்டு பதநீர் என்ற பெயரில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    பனை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை போலீசார் உடைத்தனர். இதையடுத்து பதநீர் என்ற பெயரில் கள் இறக்கி விற்பனை செய்த பெத்தா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கலெக்டர் அலுவலகம் மற்றும் வாசலில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இலங்கை வாலிபர் ஜாய்(வயது 35) என்பவர், தனது குடும்பத்தினருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி ரகளை செய்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

    அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாசலின் இருபுறமும் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னரும், மனு அளிக்க வரும் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வாசலில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாநகர தலைமை இடத்து துணை கமிஷனர் அனிதா தலைமையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் மேற்பா ர்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணி தடை பட்டுள்ளது.
    • நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய தாலுக்கா களில் மொத்தமாக 170-க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் நடப்பு பருவத்தில் இயங்கி வருகிறது.

    100-க்கும் குறைவான நிலையங்களுக்கு மட்டுமே சொந்த கட்டிடம் இருப்பதால் பெரும் பகுதி கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில், கோயில்கள், சமுதாயக்கூடம், ஊர் பொது இடங்கள் ஆகியவற்றில் செயல்படுகிறது.

    தற்போது ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் 8ஆயிரத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேல் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    நெல்மூ ட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்துச்செல்ல போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் வராததால் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது.

    பல மையங்களில் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணியும் தடைப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் கூறியதாவது:-

    கடுமையான மழை வெள்ள பாதிப்பு, அதன் பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த போது பாதிப்பு என விவசாயிகள் பெரும்பாடுப்பட்டு அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வந்தால் அடுக்கி வைக்க இடம் இல்லாமலும்,ஏற்கனவே அடுக்கி வைத்துள்ள நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் முறையாக அனுப்பாததே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

    எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மாவட்டம் முழுவதும் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நுகர்வோர் வணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.
    • தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாள ராக இருந்தவர் தேவமணி (வயது52). இவர் திருநள்ளாறு -சுரக்குடி சந்திப்பில் வசித்து வந்தார். தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி இரவு, தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார். இக்கொலை வழக்கில் மணிமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கடந்த 21-ந் தேதி, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்.

    மேலும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் திங்கள் மற்றும் வெள்ளி என 2 நாட்கள் காலை 10.30 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என ஜாமீனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மணிமாறன் நேற்று திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றுள்ளார்.   மணிமாறன் அடிக்கடி திருநள்ளாறு வந்தால் சட்ட ம்-ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும் என்பதால், திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், மணிமாறன் காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.  அதன் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள மணிமாறன், 144 பிரிவின் கீழ் கோர்ட் உத்தரவுப்படி குறிப்பிட்ட நேரத்தை தவிர, காரைக்காலில் நுழைய கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மணிமாறன் 2மாதத்திற்கு காரைக்கால் மாவட்டத்திற்குள் முழுமையாக வர தடை விதிக்க வேண்டும். அல்லது வேறு போலீஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டுக்கு திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய போலீசார் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடைகேட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
    • அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முரு கேசன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கம்பளிப்பட்டி, நாகப்பன் சீவல்பட்டி, கந்துகப்பட்டி, தாயம்பட்டி ஆகிய கிராமங் களை உள்ளடக்கியது நெல்லுக்குண்டுபட்டி கிராமமாகும்.இந்த கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை முதல் 9-ந் தேதி வரை கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளோம்.

    மேலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளில் மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு சிறுவன் ஒருவன் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் கிராமத்தில் பெரும் பதற்றம் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.

    அதனால், இந்த ஆண்டு கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்.

    இந்நிலையில் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் 5 கிராம மக்களின் முடிவுக்கு எதிராக மஞ்சு விரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அப்படி, மஞ்சுவிரட்டு நடத்தினால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மதுரை, மேலூர், நெல்லுக்குண்டு பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் கூறியது போன்று மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி எந்த மனுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
    • படகுகள் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாதங்களில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று 14-ந் தேதி நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் மாதம் 14-ந் தேதி வரை இந்த தடை நீடிக்கும். மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகள் இழுவை படகுகள் ஆகியவை துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூர மிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.

    மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள 2 மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். பெரும்பாலான மீனவர்கள் குடும்ப சூழல் கருதி மாற்று வேலைகளுக்கும் செல்வது உண்டு.

    மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதியில் நேற்று மீன் பிடிக்க சென்று கரைக்குத் திரும்பிய ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மீனவர்கள் துறைமுக கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து மீன்பிடி படகுகளில் பயன்படுத்தி வந்த மீன்பிடி சாதனங்களை இறக்கி பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் என ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோ கப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    அதன் பொருட்டு 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ேபாக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள பஸ்கள் மட்டும் இயக்க தகுதி சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நடப்பாண்டு பள்ளிகள் திறக்கும் முன்பே, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங் களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள னர். இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    குறிப்பாக இதில் பெரும் பாலான வாகனங்களில் சி.சி.டி.வி காமிரா, சென்சார் கருவி உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்படவில்லை. மேலும் சில பஸ்களில் சீட் பெல்ட், மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்டவை சேதமடைந்து இருந்தது. இதனால் இந்த 197 பள்ளி வாகனங்களை இயக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப் படவில்லை. குறைப்பாடு கண்டறியப்பட்ட வாகனங்கள், குறைபாட்டை நிவர்த்தி செய்த பிறகே தகுதிச்சான்று வழங்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    ×