search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "redressal camp"

    • மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது.
    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது. கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 17, 18, 21 ஆகிய 3 வார்டுகளை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை ஆன்லைன் மூலம் பெற்று அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொடை க்கானல் நகர் மன்ற தலை வர் செல்லதுரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். 500க்கும் அதிகமான பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய மனுக்கள் அளித்தனர்.

    இவர்களுக்கு உடனடி யாக ஆன்லைன் மூலம் பதில் அளிக்க ப்பட்டது. குறைதீர்க்கும் முகாமில் புதிய இலவச வீட்டு மனை பட்டாக்கள், புதிய வீட்டு வரி மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டது. 30 தினங்களுக்குள் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க ப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒரே இடத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஒன்று சேர்ந்து பொது மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவர்களுக்குரிய நிவா ரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    • மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    இந்திய அஞ்சல் துறையில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் மதுரை பி.பி.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் வருகிற
    27-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் மனுக்களை 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணி யார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற் றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்த மாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாத வர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும், இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது. கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தபால்களை உதவி இயக்குநர், அஞ்சல்துறை அலுவலகம், தெற்கு மண்டபம், மதுரை-625 002 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். தபால் உறையின் முன்பக்க மேல்பகுதியில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்-ஜூன் 2023 என குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    • போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மதுரை

    மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோர் பங்கேற்று குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை தெற்கு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை (15-ந் தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் குறைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலமாகவோ மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். ேமற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 9 தாலுகாவில் ரேசன் பொருட்கள் வினியோக குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணை க்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் இ-சேவை மைய கட்டிடம், ராமேசுவரம் வட்டம் நடராஜபுரம் ரேஷன் கடை, திருவாடானை வட்டம் பதனக்குடி ரேஷன் கடை, பரமக்குடி வட்டம் மஞ்சக்கொல்லை இ-சேவை மைய கட்டிடம், முதுகுளத்தூர் வட்டம் கொழுந்துரை இ-சேவை மையக் கட்டிடம், கடலாடி வட்டம் நரிப்பையூர் ரேஷன் கடை, கமுதி வட்டம் கீழராமநதி ஊராட்சிமன்ற கட்டிடம், கீழக்கரை வட்டம் குத்துக்கல்வலசை ரேஷன் கடை (கலையரங்கம்), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் செங்குடி ரேஷன் கடை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாயவிலைக்க டைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (10-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் 27-ந் தேதி நடக்கிறது
    • புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது.

    புகார் மனுக்களை வருகிற 14-ந் தேதிக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    இந்த குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

    தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி, ''தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜே.பிரதீப் குமார், உதவி இயக்குநர், அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002'' என்ற முகவரிக்கும் pg.madurai@indiapost.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அனுப்பலாம்.

    தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்- செப்டம்பர் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை மதுரை மண்டல தபால்துறை உதவி இயக்குநர் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

    • கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி பேரூராட்சி பகுதியில் க.ஒத்தக்கடையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல் கொடுமுடி அருகே கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாம் கொடுமுடி சமூகநல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிளாம்பாடி பிர்க்காவுக்கு உட்பட்ட ஊஞ்சலூர், வெள்ளோட்டம் பரப்பு, கிளாம் பாடி, பாசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இம்முகாம்களில் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, தெருவிளக்கு போன்ற மனுக்கள் பெறப்பட்டன.

    இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாம்களில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் சக்திவேல், கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுதா, நித்யகல்யாணி, ஊஞ்சலூர் ரமேஷ், பிரபாகர், மருத்துவ துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பவானி வட்டத்திற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், கவுந்தபாடி நில வருவாய் அலுவலகம், குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் என 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிசான்றிதழ், வருமானம், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் 171மனுக்களும், கவுந்தபாடியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 208 மனுக்களும்,குறிச்சியில் மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் 112 மனுக்களும் என மொத்தம் 491மனுக்கள் பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுக்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    • அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
    • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் (11- ந்தேதி) கீழ்கண்ட வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் கடலூர் தோட்டப்பட்டு, பண்ருட்டி சிறுகிராமம், குறிஞ்சிப்பாடி ஆதிநாராய–ணபுரம் (கிழக்கு), சிதம்பரம் கிள்ளை (தெற்கு), காட்டுமன்னார்கோயில் குமாரகுடி, புவனகிரி சி. புதுப்பேட்டை, விருத்தாசலம் மாத்தூர், திட்டக்குடி எறையூர், வேப்பூர் மண்ணம்பாடி, திருமுட்டம் சோழதரம் கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

    மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுப்பட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க–லாம்.

    தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை–களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை நடக்கிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை 27-ந்தேதி காலை 10.15 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். 

    இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    ×