என் மலர்
நீங்கள் தேடியது "Rice"
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பொம்மியம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த மூட்டைகளை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
- 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளுக்குத்தான் மத்திய அரசு ஜி.எஸ்.டி. விதித்து இருந்தது. ஆனால் இப்போது அதை 26 கிலோவாக பேக்கிங் செய்கிறார்கள்.
அரிசி, பால், தண்ணீர், மின்சாரம் போன்றவை மக்களின் அத்தியாவசிய தேவைகள். என்ன விலை கொடுத்தும் இந்த பொருட்களை மக்கள் வாங்கியே தீர வேண்டும். இதை மனதில் கொண்டு இந்த பொருட்கள் மீது இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிப்பது வாடிக்கையாகி விட்டது.
பொதுவாக மழைக்காலங்கள், நெல் விளைச்சல் குறைந்த காலங்களில் அரிசி விலை சற்று உயரும். அதன் பிறகு குறைந்து விடும். இதை பொதுமக்களும் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 கிலோ கொண்ட அரிசி மூட்டை மற்றும் 5 கிலோ, 10 கிலோ பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளுக்கு 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பை காரணம் காட்டி அரிசி விலையை உயர்த்தினார்கள். அப்படி பார்த்தாலும் ஆயிரம் ரூபாய் அரிசி மூட்டைக்கு 30 ரூபாய்தான் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ.100 வரை உயர்த்தினார்கள். அதற்கு அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியே காரணம் என்று மக்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது அரசுக்கு டிமிக்கி கொடுத்து ஜி.எஸ்.டி.யில் இருந்து வியாபாரிகள் தானாகவே விலக்கு பெற்று விட்டார்கள்.
அதாவது 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளுக்குத்தான் மத்திய அரசு ஜி.எஸ்.டி. விதித்து இருந்தது. ஆனால் இப்போது அதை 26 கிலோவாக பேக்கிங் செய்கிறார்கள். அந்த பைகளின் மீது 26 கிலோ அச்சிட்டு விற்பனைக்கு விட்டுள்ளார்கள்.
சட்டப்படி 25 கிலோவுக்குத்தான் ஜி.எஸ்.டி. வாங்க முடியும். 26 கிலோ என்றால் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லையாம். இது சட்டத்தில் இருந்து நழுவுவதற்கோ இல்லை சட்டத்தை ஏமாற்றுவதற்கோ என்று இருந்தால் பரவாயில்லை.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ரகசிய ஏற்பாடு என்கிறார்கள். அப்படியானால் வரி உயர்வை ரத்து செய்து அரிசியை குறைந்த விலைக்குத்தானே விற்க வேண்டும்.
அப்படி யாரும் விற்கவில்லை. 30 ரூபாய் ஜி.எஸ்.டி. உயர்வுக்கு 100 ரூபாய் உயர்த்தியதை அப்படியே வைத்துள்ளார்கள். இப்போது அதிலும் கூடுதலாக ரூ.1200 முதல் ரூ.1250 வரை விற்கப்பட்ட மூட்டை விலையை ரூ.1400 முதல் ரூ.1450 வரை உயர்த்தி இருக்கிறார்கள். சராசரியாக ஒரு கிலோ அரிசி ரூ.3 முதல் 4 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது என்ன நியாயம்?
கூடுதல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? ஆக உயர்த்தப்பட்ட விலை முழுவதும் அரிசி விற்பனையாளர்களுக்கு லாபமாகி விடுகிறது. இதற்காக அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கும் கமிஷனை சற்று உயர்த்தி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அரிசி விலை உயர்வுக்கான உண்மையான காரணத்தை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஒன்று ஜி.எஸ்.டி. வரி உயர்வு என்றார்கள். இன்னொரு பக்கம் விளைச்சல் இல்லை என்றார்கள். இன்னொரு புறத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது என்கிறார்கள். எதுதான் உண்மையான காரணம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லாம் அரசுதான் காரணம் என்று பழியை அரசு மீது போட்டு கொள்ளை லாபம் மட்டும் அடிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
மத்திய அரசோ, மாநில அரசோ... சம்பந்தப்பட்ட துறைகள் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி எங்கே குளறுபடி என்பதை கண்டறிந்து இதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
- அரிசி கடையில் நடந்த ரூ.22 ஆயிரம் திருட்டப்பட்டது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி
திருச்சி கம்பரசம்பேட்டை முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக்( 38). இவர் கம்பரசன் பேட்டை பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு ஒன்பதரை மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 22,000 ரொக்கம் மற்றும் இரும்பு மேசை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஜாபர் சாதிக் ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும்.
- விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.
மூலனூர் :
திருப்பூர் மாவட்டம் மூலனூர், கருப்பன் வலசு, தலையூர், எல்லப்பாளையம் பெரமியம், ஆத்துக்கால்புதூர், காளிபாளையம், வீராச்சிமங்கலம், படுகை தாராபுரம் ஆகிய அமராவதி ஆற்றுப் படுகைகளில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அமராவதி அணையின் நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும் நெல் ரகங்களான ஏடிடி 45, ஏடிடி37, சாவித்திரி போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
இதில் குறைந்த நாட்களில் மகசூல் தரும் இதில் ஏ.டி.டி. 45 ரக நெற்பயிர்களை அதிக அளவில் நடப்படுகிறது. இந்த ரக நெல் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதால் இந்த ரக நெல் பயிரை இப்பகுதி விவசாயிகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணி சுமார் 90 சதவீத நடவு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதுபற்றி அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிக அளவில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் மற்றும் நூல் மில்களுக்கு சென்று விடுவதால் நெல் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை.
இதன் காரணமாக தற்போது தர்மபுரி, சேலம், ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எந்திர நடவு செய்வது இப்பகுதியில் அறிமுகம் இல்லாததாலும் அதன் பயன் இப்பகுதி விவசாயிகள் தெரிவதில்லை. இதே நிலை நீடிக்குமானால் வரும் காலங்களில் விவசாயம் செய்ய இந்தப்பகுதிகளில் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.
விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் கே.ஜெயராமன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களை கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் விதை ஆய்வுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் 138 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட நெல் விதை உற்பத்தி நிலையங்கள் உள்ளது. அரசுத்துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்புத்துறைகளான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்கள், மற்றும் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் வட்டாரத்தில் தற்போது நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் பயறு வகைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை இருப்பு பதிவேட்டில் இருப்பு வைத்து, முளைப்புத்திறன் பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் கண்டிப்பாக ஒவ்வொரு விதை விற்பனையாளரும் கடையில் வைத்திருக்கவேண்டும். மேலும் விதை விற்பனையாளர் கொள்முதல் செய்த விதைகளை பாதுகாப்பாகவும், முறையாகவும் விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விதை இருப்பு பதிவேடு, விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும். கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
விதைகள் விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியல் கட்டாயம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும், அதில் பயிர், ரகம், விதைக்குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். விற்பனை பட்டியலில் விவசாயிகளின் கையொப்பம் பெறப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாடு) ஆணை 1983 ஆகிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பதுக்கப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குன்றாண்டார்கோவில் பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். இதில் 1 டன் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த செம்பட்டிவிடுதி நால்ரோட்டை சேர்ந்த சேகரை (வயது 42) கைது செய்தனர்."
- சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள்.
- ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
சீர்காழி:
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் 50-வது பொன்விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதா–கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் அனிதா, குடசமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் பிரவின்வசந்த், அனுஷாபிரவின், அலெக்சாண்டர், ரீனிஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கே.வி.ராதாகிருஷ்ணன், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
இதில் அரசு பள்ளி ஆசிரியர் கோவி.நடராஜன் பங்கேற்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் ஜோஸ்வா–பிரபாகரசிங் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் சரோஜா நன்றிக் கூறினார்.
- நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
- பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த கூடிய தொழில்நுட்பகள் குறித்து தெளிவாக விளக்கமளித்தார்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிலரும் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்க ப்பட்ட கலைஞரின் ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் கிராமங்களிலிருந்து பாரம்பரியம் நெல் சாகுபடி குறித்த உள்மாவட்ட அளவிலான கண்டுணர்வு சுற்றுலா திருவையாறு வட்டாரம் கண்டியூர் கிராமம் விவசாயி தியாக ராஜான் நெல் வயலுக்கு 50 விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டன. இவர் 10 ஏக்கரில் பாரம்பரியம் நெல் சாகுபடி செய்து வருகிறார்.
அங்கு அவர் கருப்பகவுனி, கருடன்சம்பா, கூப்பாலை. மாப்பிள்ளை சம்பா கருங்குறுவை, மரதுண்டி, கிச்சிலிசம்பா, சிவப்புகவனி, சம்பா ஆற்பாடு சிச்சடி, முற்றின சன்னம் ஆகிய ரகங்களையும் அதன் செயல்பாடுகள் மற்றம் மருத்துவகுணங்களையம் எடுத்துரைத்தார். விவசாயி களுக்கு உற்பத்தி செய்யும் பாரம்பரியம் நெல் ரகங்க ளை விதையாகவும் அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் மற்றும் பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இதை தவிபதற்க்க நடவு செய்த 30 வது நாள் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர்களின் பக்க கிளைகள் அதிகரிக்கிறது. மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது இந்த பயிர் நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுகிறது.
பாரம்பரியம் நெல் சாகுபடி செய்யும்பொழுது ஏற்ப்படகூடிய பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த கூடிய தொழில்நுட்பகயையும் மிக தெளிவாக விளாக்கம ளித்தார்.
முடிவில் அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.
- பற்றாக்குறையை சமாளிக்க, பல மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை பெறப்படுகிறது.
- ஒரு வருட தேவைக்கும் மேலாக உணவு தானியம் கையிருப்பு.
இந்திய உணவு கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட நிலையம் உள்ளது.

இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும் மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.
பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பெறப்படுகிறது.
பிரதமரின் இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னைப் பிரிவு, 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராசிபுரம் டவுன் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சுமார் 2 ¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 2 ¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ரஜினி ( வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
- 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் சரக்கு ரெயிலில் 26 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு தூத்துக்குடிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்
- டிரைவர் தப்பி ஓடிவிட்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குடிமை பொருள் குற்றபுலனாய்வுதுறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை தாசில்தார் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய மறித்த போது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடு த்து வாகனத்தில் இருந்த 2 ஆயிரத்து 38 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாவட்ட குடிமைபொருள் குற்றப்புலனய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர். இதே போல் கே.புதுப்பட்டி பகுதியில் சின்னசாமி மகன் கைலாசம் என்பவர் 636 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அரிசியையும் பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார் வரதராஜ், புதுக்கோட்டை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கைலாசம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
- நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர தஞ்சை மாவட்ட த்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு திருநெல்வேலிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.