என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blockade"

    • கங்கை கொண்டான் அருகே உள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்டது கங்கை கொண்டான் அருகே உள்ள வெங்டாசலபுரம், ராஜபதி, கரிசல்குளம் கிராமங்கள்.

    சாலை மறியல்

    இந்த கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த 3 கிராமத்தை சேர்ந்த 150 பெண்கள், 60 ஆண்கள் உள்ளிட்ட 210 பேர் இன்று கங்கைகொண்டான் நாற்கர சாலையில் இருந்து ராஜபதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாழையூத்து டி.எஸ்.பி. பெரியசாமி, மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது தங்கள் கிராமத்தில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நாளை மறுநாள் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் போராட்டத்தால் காலை 9 மணி முதல் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர்.
    • ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டி.ஜி.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மாதர் சங்கத்தினர் அறிவித்தி ருந்தனர்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மாதர் சங்க நிர்வாகி களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மறியலில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை- திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பஸ் 7 முறை சென்று வந்தது. இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    இதனால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே கூடுதல் நேரங்களில் பஸ்கள் இயக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை-திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.
    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவரது மகன் ராஜி (வயது 34). இவர் ஊரில் வேலை இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடநெமிலி பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மேஸ்திரி மூலம் மும்பையில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று ராஜி மும்பை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ெரயிலில் அடிபட்டு இறந்தார் என்று பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பின்னர்இறந்த ராஜியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் போலீசார் ராஜி உடலை ராஜி ஊரான மேல்வாழைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த ராஜி உடல் இன்று காலை மேல்வாழைக்கு வந்தது. இதை அறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது. ராஜியை மும்பையில் வேலையில் சேர்த்த மேஸ்திரி சங்கர் நேரடியாக இங்கு வர வேண்டும் என்று கூறி அவர்கள் இறந்த ராஜி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி அளி க்கபட்டது. அதனை தொட ர்ந்து போராட்டம் விலக்கி கொ ள்ள ப்பட்டது.

    • பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும்.
    • பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு உள்ளடக்கிய 1,000 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கினர்.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இணைக்க கோரி திடீரென்று சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அதி காரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாப்பாடு செய்து சாலையில் போட்டு உணவு அருந்தி நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில்பெரும் பரபரப்புஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அம்பலவாணன் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்ப ட்ட விவசாயிகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்தால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

    • ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்
    • போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருேக காரைக்காடு சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந் தேதி வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஏழுமலை திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஏழுமலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை இறந்த ஏழுமலை உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி முன்பு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடலுடன் உறவினர்கள் கடலூர் - சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் புகார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர்.


    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொழுவந்தாங்கலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம்போல் சென்றனர் .அப்போது பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனே தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கோவில் கட்டினால் இட நெருக்கடி ஏற்படும். மேலும் கோவிலில் விழா நடக்கும் சமயத்தில் எங்களின் கல்வி பாதிக்கப்படும்.

    எனவே பள்ளி வளாகத்தில் கோவில் கட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அங்குள்ள கடுவனூர்-அத்தியூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த வட பொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமை யிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை அடுத்துள்ள ஆமணக்கு நத்தத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்தப்பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும், மரத்தடியில் மாணவ-மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்துவதாகவும், பள்ளி வளாகத்திலேயே சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைத்து வினியோகிப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து இன்று காலை வகுப்புகளை புறக்கணித்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி முன்புள்ள பந்தல்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். ,
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். பணிநிரந்தரம் செய்து, வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    .அதேபோன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெருமாள், முத்துக்குமரன், மைக்கேல், வீரமுத்து, ஜெயபாலன், கார்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஒப்பந்த தொழி லாளர்களை சாலை மறியலில் ஈடுபடவேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
    • போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டன் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் 370 வீடுகள் உள்ளது.

    இந்த குடியிருப்புக்கு அருகே 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தில் 46 புதூர் ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை சேமித்து பிரித்தெடுக்கும் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை கொட்டி எரித்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் புகையானது இந்த பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்குள் பரவி பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு ள்ளாக்கி வருவதாக பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இங்கு எரியும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சு திணறல், திடீரென மயக்கம் அடைதல், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு பல்வேறு உடல் நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வலியுறுத்தி முத்துகவுண்டன் பாளையம் ரிங்ரோட்டில் திடீரென திரண்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஈரோடு - முத்தூர் பிரதான மற்றும் திண்டல் கொக்கராயன் பேட்டை ரிங் ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    கடைகள்

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர். அதன் ஒரு பகுதியாக சில கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட தொடங்கியது.

    பள்ளி கட்டிடத்தை சுற்றி காம்பவுண்டு கட்டப்படாத நிலையில், கடைகளுக்கு இரவு நேரங்களிலும் ஆட்கள் வந்து சென்றனர்.

    இந்த கடைகளால் பள்ளி மாணவர்கள் விளை யாடுவதற்கும் இடம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

    மாணவர்கள் புகார்

    இந்நிலையில் கடை களுக்கு இரவு நேரங்களில் வருபவர்களில் சிலர் மது அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வளாக பகுதிகளில் வீசி செல்வதாகவும், அது மாணவர்களின் கால்களில் குத்தி காயப்படுத்து வதாகவும் மாணவர்கள் புகார் கூறினர். எனவே பள்ளி கட்டி டத்தை சுற்றி காம்பவுண்டு அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி எஸ்.என்.ஹைரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி கூறினர். உடனடியாக இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், போலீஸ் துணைகமிஷனர் சரவணகுமார் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அதிகாரி லெனின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது பள்ளி கட்டி டத்தை சுற்றி தகரத்தால் அடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

    • 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

    ஊட்டி 

    ஊட்டி அருகே மைனலா அரக்காடு சந்திப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேத்தி பேரூராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஊட்டியிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், முறையாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×