என் மலர்
நீங்கள் தேடியது "roads"
- நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் ‘அடல்சேது’ கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
மும்பை:
நவிமும்பையில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நவிமும்பை விமான நிலையம்- தானே இடையே 26 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க சிட்கோ (நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம்) திட்டமிட்டுள்ளது.
மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் 'அடல்சேது' கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நவிமும்பை விமானநிலையத்தை தானேயுடன் இணைக்கும் வகையில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி திகா பத்னி மைதானம் அருகில் உள்ள தான் நிரான்கரி சவுக்கில் இருந்து வாஷி பாம் பீச் வரை 17 கி.மீ.க்கு பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது.
அதன்பிறகு பாம் பீச் ரோட்டில் இருந்து நவிமும்பை விமான நிலையத்துக்கு நேரடியாக இரட்டை பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது.
- உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
- வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டப்பொறியாளா் ரமேஷ்கண்ணா தலைமை வகித்தாா்.
இதில், தி கன்ஸ்யூமா்ஸ் கோ் அசோசியேஷன் தலைவா் காதா்பாட்ஷா பேசியதாவது:-
திருப்பூா் மாநகரில் சாலை பராமரிப்புக்காகத் தோண்டப்படும் குழிகள் இருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டிக்கா்கள் ஒட்டவேண்டும். அவிநாசி தோ் வரும் நெடுஞ்சாலைப் பகுதி மிகவும் சிதிலமடைந்துள்ளது. ஆகவே, உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
நல்லூா் நுகா்வோா் நலமன்றத் தலைவா் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
காங்கயம் சாலையில் டிஎஸ்கே மருத்துவமனை பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல, திருப்பூா் ெரயில் நிலையம் முதல் வஞ்சிப்பாளையம் வரை அனைத்து சாலைகளும் மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் (சட்ட விழிப்புணா்வு அணி) மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா் பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் அது தொடா்புடைய ஒப்பந்ததாரா்களால் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால் முறையாக மறுசீரமைப்பு செய்வதில்லை. ஆகவே உரிய கவனம் செலுத்தி அனைத்து சாலைகளும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
- மேலப்பாளையம் ரவுண்டானா, அம்பை சாலை உள்ளிட்ட இடங்களில் மாடுகள் சுற்றித்திரிகிறது.
- சாலைகளில் பிடிபடும் மாடுகளை ஏலம் விட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதிகளில் பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்து வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
குறிப்பாக பிரதான சாலைகளான டவுன் எஸ்.என்.ஹைரோடு, தெற்கு புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம், தச்சநல்லூர், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, அம்பை சாலை உள்ளிட்ட இடங் களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகிறது.
இதனால் போக்கு வரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவ துடன், சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்தும் வருகிறார்கள்.
புகார்
எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர், கமிஷனருக்கு பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாதுஷா மேற்பார்வையில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, அம்பை சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் இன்று பிடிக்கப்பட்டது.
சுமார் 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர். வழக்கமாக இவ்வாறு பிடிபடும் மாடுகள் உரிமை யாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து இதுபோன்று அவர்கள் சாலையில் மாடுகளை திரியவிட்டால், அந்த மாடுகளை கோசாலை யில் அடைத்து வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் இன்று முதல் சாலைகளில் சுற்றித்திரிந்து பிடிபடும் மாடுகளை ஏலம் விட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிடிபடும் மாடுகள் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று மாலையே ஏலம் விடப்படும் என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் சாலைகளில் திரியும் மாடுகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் ஏலம் விடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.
- இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் இடறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் பருவ மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- நகரில் உள்ள சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
- ஆன்லைன் வர்த்தகத்தை தடை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முகம்மது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், முகம்மது ஹனீபா, கான்முகம்மது, கவுரவ ஆலோசகர் சம்சுதீன், துணைசெயலாளர்கள் செய்யதுஅலி, ஆதிமூலம், ரவிக்குமார், பொருளாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை குறிப்பாக நயினார்குளம் சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
புதுப்பேட்டை செக்கடி சுடலைமாடன்சுவாமி கோவில் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து நீர் வெளியே சென்றது. இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் சரவணன் , துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, பொதுமக்கள் வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
சேரன்மகாதேவி முதல் புதுப்பேட்டை நோக்கி செல்லும் தண்ணீர் செல்லும் ஓடைகள் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தால் அனைத்து வியாபாரிகளும் சிறுவணிகர்களும் நலிவடைந்து வருவதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.
+2
- மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
- சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது.
நெல்லை:
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
புழுதி பறக்கும் சாலைகள்
குறிப்பாக பழைய பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, எஸ்.என்.ஹைரோடு வரை சாலைகள் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனை அவ்வப்போது தற்காலி கமாக சீரமைத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே எஸ்.என்.ஹைரோட்டில் செல்லும் போது கடுமையான புழுதி பறக்கிறது. இதனால் ஆஸ்மா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வியா பாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாநக ராட்சி பகுதியில் நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான 112 கிலோமீட்டர் தூர சாலை உள்ளது. இதில் பழையபேட்டை முதல் கே.டி.சி.நகர் வரையிலான சாலைகளும் அடங்கும். இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் தான் சீரமைக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியினை கொண்டு நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக ரூ.10.66 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக ரூ.17.92 கோடி மதிப்பீட்டிற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது. வருகிற வாரம் இதற்கான பணிகள் தொடங்கும்.
இதன்படி சந்தி பிள்ளை யார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை சாலைகள் போடப்பட்டது. இதேபோல் டவுன் சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட சாலைகளிலும் புதிதாக பணிகள் நடை பெற்றுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவனந்தபுரம் சாலை, தாழையூத்து பகுதிகளில் சாலைகள் புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகளை சுறுக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
- பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.
சீர்காழி:
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள், குடியிருப்புகள் கட்டடங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சீர்காழி புறவழிச் சாலையில் எருக்கூர் ,கோயில் பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகள் குறுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.
ஆனால் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து போதிய எச்சரிக்கை பலகை திசை மாறி செல்லும் அறிவிப்புபலகை, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.
இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.
தொடரும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் ஆகியவற்றை போதிய அளவு அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
- புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி யூனியன் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். யூனியன் துணைச்சேர்மன் மீரா சிராசுதீன், ஆணையாளர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செந்தில், லோபோரின், செல்வின், ராமலெட்சுமி, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
யூனியன் பொதுநிதியில் இருந்து ஞானியார் குடியிருப்பு, கல்லாமொழி, பிறைகுடியிருப்பு, செட்டி யாபத்து, தாங்கை கைலாசபுரம், ஆனணயூர், விஜய நாராயண புரம், வடக்கு காலன்குடி யிருப்பு, வாகை விளை, குதிரை மொழி, முந்திரிதோட்டம் ஆகிய ஊர்களில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளி களில் சுமார்ட் வகுப்புகள் பணிகள் மேற்கொள்ள ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கீடு மற்றும் பள்ளி மாணவர்க ளின் நலன்கருதி செம்மறி குளம் கிராமத்தில் ஊராட்சி யூனியன் தொடக்கப்பள்ளி யில் வடக்கு, தெற்கில் புதிய கட்டிடம், புதிய சமையலறை, செம்மறிகுளம் குமார லெட்சுமிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடம், லெட்சுமிபுரம் பஞ்கு மார சாமிபுரம், பரமன்குறிச்சி பிச்சிவிளை, தைக்காவூர், ஞானியார் குடியிருப்பு, சீர்காட்சி ஆகிய ஊர்களில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-
முருங்கை மகாராஜா (அ.திமு.க.): உடன்குடி பகுதியில் தற்போது தொழில்வளம் பெருகி வருகிறது. எனவே உள்கட்ட மைப்பை மேம்படுத்த கிராமங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும் உடன்குடி பகுதி மக்களின் நலன் கருதி உடன்குடியை தனித்தாலு காவாக அறிவிக்க வேண்டும், யூனியன் பொது நிதியை வளர்ச்சி பணிக்கு செல விடாமல் புதிய வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த நிதியை மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்த வேண்டும்.
சேர்மன் (பாலசிங்): உடன்குடி பகுதியில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பழுதான சாலைகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
- நிழல் தரும் மரங்கள் இல்லாததால் மதுரை நகர சாலைகளில் வெயில் சுட்டெரிக்கிறது.
- வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.
மதுரை
'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்', மரங்களை வெட்டக்கூடாது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், மரத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறியவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை, ஆக்சிஜன், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு மரங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் உள்ள மரங்களை வெட்டக்கூடாது, மரத்தை அப்புறப்படுத்தி னால் அதற்கு பதிலாக 5 மரங்களை நட வேண்டும் என நீதிமன்றமும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது.
ஒரு காலத்தில் கடம்பவனம் என்றழைக்கப்பட்ட மதுரை நகரை சுற்றி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. சாலையின் இருபுறமும் பசுமை போர்வை போல் மரங்கள் வளர்ந்து காணப்படும். காலப்போக்கில் வளர்ச்சி திட்டங்கள், நகர மயமாக்குதல் என்ற பெயரில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன.
மதுரை நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் இருந்த ஆல, அரச மரம் என ஆயிரக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கம் காரணமாக வெட்டப்பட்டது.மதுரை- திருப்பரங்குன்றம் ரோடு, கே.கே. நகர் - ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சாலை, அழகர் கோவில் ரோடு, மாவட்ட நீதிமன்ற சாலை, நத்தம் ரோடு, வைகை கரை சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வில்லாபுரம், அவனியாபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை மற்றும் சிறிய தெருக்கள் முதல் பெரிய தெருக்களில் இருந்த மரங்கள் சாலை விரிவாக்கம் செய்ய வெட்டப்பட்டது. சில இடங்களில் மின் கம்பங்கள் நடுவதற்கும் மரங்கள் அகற்றப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை புதூர் பகுதியில் இருந்து அழகர் கோவிலுக்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக சாலையோரத்தில் பல ஆண்டுகள் வளர்ந்து இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் அகற்றப்ப ட்டது.
இதன் காரணமாக தற்போது சாலை வசதி மேம்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் போது நிழலுக்கு ஒதுங்க கூட மரங்கள் இல்லாதது வருத்தத்துக்குரிய விஷயம். இதுபோன்று நகரின் பல்வேறு சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் அவதி அடைகின்றனர். மதுரையில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் சராசரி அளவு குறைந்து கொண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வெப்பநிலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இடத்தில் தட்பவெப்பநிலையை அங்குள்ள மரங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் நகரில் இருந்த மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டதால் வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.
- ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித்துறை கட்டப்பட்டுள்ளன.
- நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் யாதவர் வடக்கு, தெற்கு தெருக்களில் ஊராட்சி பொது நிதியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித் துறை கட்டப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சாலை மற்றும் பாலங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் பலவேசம் இசக்கிபாண்டி, மேலூர் தி.மு.க. கிளைச் செயலாளர் சுப்பிர மணி, அரசு ஒப்பந்த தாரர் மணி கண்டன், தீபம் கோபால், மணி, முருகேசன், ரங்கன் பண்ணையார், பரம சிவன், நம்பி, போல்ராஜ், வீர லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
- தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-
குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.
எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.