என் மலர்
நீங்கள் தேடியது "Robbery arrest"
- ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கெடிலம் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முய ன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் ரகுராமன் (40) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகுராமனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 20 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது.
- மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. ,
க்டலூர்:
பண்ருட்டி அருகே கொங்கராய னூரில்கடந்த 2021-ம் ஆண்டு லாலாப்பேட்டை யை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை தாக்கி வழிபறிகொள்ளை நடந்ததுஇந்த வழக்கில் சம்மந்தபட்டகீழ்பூத்தமங்கலம்விஜயகுமார் என்பவரைடிஎஸ்பி சபிபுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல், ஏட்டு ஜோதி மற்றும் அன்பரசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்
இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர்,நெல்லிகுப்பம், நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், பண்ருட்டியில் 9 இடங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் மைலம்,வானூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம் பகுதியில் 7 இடங்களிலும், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதியில் 2 இடங்களிலும் மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து கொள்ளையடித்த பணம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.
கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.
அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
- கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர்.
- காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து மர்ம நபர் திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது. அவர் வந்த காரின் எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பதிவெண் கொண்ட கார் திருப்பூரிலும் நடமாடி வந்தது. மேலும் அந்த காரில் இருந்த மர்மநபர் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், முபாரக் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சம்மந்தப்பட்ட பதிவெண் கொண்ட கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர். காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு தமராக்கி பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா (வயது 23) என தெரியவந்தது.
இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விதவிதமான கார் பதிவெண்களை கொண்டு பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 2 கார்கள், போலி பதிவெண்கள், கையுறை, முகமுடி, பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பறினர்.
மேலும் அதிபதிராஜாவை பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டை சேர்ந்த பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் மணிகண்டன். செம்பரம்பாக்கம் அடுத்த பாப்பன்சத்திரத்தில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று மதியம் திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.1000-த்தை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட உட்கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜித்தை (29) கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஆந்திர மாநிலம் சத்தியவேடு, வரதயபாளையம், புத்தூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள வங்கிகளில் பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி ரூபாய் நோட்டுகளை கீழே வீசி மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இந்த கும்பலை பிடிக்க திருப்பதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் புத்தூர் துணை போலீஸ் கண்காணிப்பாளர் யஸ்வந்த் மேற்பார்வையில் சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரெட்டி தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சத்தியவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை ராஜமங்கலம், இந்திராநகரை சேர்ந்த விமல் (28) என்பதும் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 2.96 லட்சம் ரொக்கம், 5 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மற்றும் சத்தியவேடு, வரதயபாளையம், புத்தூர் ஆகிய பகுதிகளிலும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
கைதான விமலை போலீசார் புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பதி சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இது தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பிரேம்குமார், அஜித்குமார், சாமுவேல் ஆகிய 3 பேரும் இவர்களது கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், மோட்டார் சைக்கிள்களை திருடி இருப்பதும் தெரிய வந்தது.
திருடிய செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் கொள்ளையர்கள் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெரம்பூர்:
பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்தவர் அமர்நாத் (19). இவர் நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ரமணாநகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்த 3 பேர் அமர்நாத் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்கள்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கத்தியை காட்டி பறித்தனர். பின்னர் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார்கள்.
திருடன் திருடன் என்று அமர்நாத் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். அப்போது அருகில் உள்ள சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிகளை மடக்கி பிடித்தார்.
அவர்கள் பறித்துச் சென்ற பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தார்.
அப்போது அவர்கள் புழலை சேர்ந்த பாட்சா (19), எருக்கஞ்சேரியை சேர்ந்த தீபக் (21), ஜெயசந்திரன் (21) என்பது தெரியவந்தது. பல இடங்களில் இது போல் கத்தியை காட்டி பணம், செல்போன்களை பறித்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளும், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மாலை படாளம் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்பு, கஜேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிற்குமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உஷாரான அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுராந்தகத்தை அடுத்த ஜமீன்என்றத்தூரைச் சேர்ந்த தனுஷ், செய்யூரை அடுத்த தேவராஜபுரம் காமேஷ், மதுராந்தகம் கவாங்கரையைச் சேர்ந்த புனிதன் என்பது தெரிந்தது.
பிடிப்பட்ட 3 பேரும் சித்தமூர் அண்ணாநகர் பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இதே போல் அணைக்கட்டு, படாளம் பகுதிகளிலும் கை வரிசை காட்டி இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு டவுனில் மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்தபோது 3 பேரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது
மதுரை:
உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48), ஆட்டோ டிரைவர்.
இவர் செக்கானூரணியில் திருமங்கலம் சாலையில் ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு 4 பேர் வந்தனர்.
அவர்கள், பணம் கேட்டு கணேசனிடம் மிரட்டல் விடுத்தனர். அவர் தர மறுத்ததால் அடித்து உதைத்து விட்டு, கணேசனின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.
இது குறித்து செக்கானூரணி போலீசில் கணேசன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கணேசனிடம் பணம் பறித்ததாக கொக்குளம் கழுங்கு பட்டியைச் சேர்ந்த பழனி குமார் (23), காசிமாயன் (25), தமிழரசன் (23), திலீப் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம், அணுபுரம், நெய்குப்பி, கரியச்சேரி பகுதிகளில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன், அவரது நண்பர் சதீஷ்ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூர், அஷ்ட லட்சுமி கோவில் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் வீட்டு முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மர்ம நபர்கள் காரை திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே திருடப்பட்ட கார் கொட்டிவாக்கம் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.
உடனே காரில் இருந்த 2 வாலிபர்களும் வேகமாக செல்ல முயன்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் தப்பி செல்ல முடியவில்லை. அவர்களை போலீசார் கைது செய்து காரை மீட்டனர்.
விசாரணையில் பிடிபட்ட இருவரும் பெசன்ட் நகரை சேர்ந்த அய்யனார், சரண் என்பது தெரிந்தது. பழைய குற்றவாளிகளான அவர்கள் பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
கைதான 2 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.