என் மலர்
நீங்கள் தேடியது "Sacrifice"
- பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென சாலையில் நடந்து சென்ற கலா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
- கார் மீது வேன் மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
- மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் முனியாண்டி (வயது56). இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். முனியாண்டி தனக்கன்குளம் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து வேடர் புளியங்குளத்திற்கு காரில் சென்றார்.
அப்போது ஆவியூரில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கொரியர் வேன், கார் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து முனியாண்டி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.
- சிறப்பு யாகங்களில் பக்தர்கள் கலந்து ெகாண்டு தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்:
நாச்சியார்கோவில் அருகே உள்ள திருநறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார்.
அதேபோல ராமபிராமம் கோவிலில் வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புடைய கோவிலின் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.
அதற்கான பாலாலயம் எனப்படும் திருப்பணி துவக்க விழா, இன்று காலை சிறப்பு யாகங்களுடன் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சுமார் 25 வயது மதிக்கதக்க வாலிபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.
- வாலிபர் யார், எப்படி விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவில்,நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 25 வயது மதிக்கதக்க வாலிபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வாலிபர் யார், எப்படி விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்
தாராபுரம் தும்பலபட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அன்பழகன் (வயது 22). பனியன் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பல்லடம் - தாராபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓர பள்ளத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்
- கண்டக்டர்- தொழிலாளி விபத்தில் சிக்கி பலியானார்கள்.
- இதுகுறித்து சூலக்கரை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் விஜிக்குமார் (வயது 26). தனியார் பஸ் கண்டக்டரான இவர் சம்பவத்தன்று முத்துராமலிங்கபுரம் பஸ் நிலையம் அருகே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜிக்குமார் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்தவர் முனியராஜ் (33). இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற முனியராஜ் அருப்புக்கோட்டை-விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் படுகாயமடைந்த முனியராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தந்தை பலி, மகன் படுகாயம் அடைந்தார்.
- இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சியை சேர்ந்தவர் அய்யனார் (வயது60). இவரது மகன் அழகுராஜா (25).
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தந்தையும், மகனும் காலையில் கறி எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தென்பழஞ்சி கண்மாய் அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் அய்யனார் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழி யில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அழகு பாண்டி காமராஜர் பல்கலைக்கழக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை.
- பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மகா அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ சொர்ணகால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.
ஒன்பது யாக குன்டங்கள் அமைத்து சிவாச்சார்யர்கள் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சந்திரசேகர சிவம் தலைமையில் வேதகோஷங்கள் முழங்க யாகபூஜைகள் நடைபெற்று. மகா பூர்ணா ஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு ஸ்ரீ பைரவர் சன்னதியை வந்தடைந்து 18 வகை திரவியங்கள், பன்னீர், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. ஹம்ஸத்வணி இசைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆசிரியர் பரணீதரன் தலைமையில் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துக்கொண்ட பக்தகோடிகளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆலய அறங்காவலர் ராஜராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் செந்தில்குமார், சதானந்தன், பா.ஜ.க. நிர்வாகிகள் அழகிரிசாமி, இளங்கோவன், சேவாபாரதி நிர்வாகிகள் ரங்கதுரை, மும்மூர்த்தி. சமூக ஆர்வலர் ராஜதுரை, கருப்பசாமி, ஆலய நிர்வாகி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.
- தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புத்தாண்டு தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலக நன்மை வேண்டி மகா யாகம் நடக்கிறது.
7 மணிக்கு ஸ்ரீ நவசக்திபீடம் சார்பில் உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவசக்திபீடம், ஆன்மிக ரத்தினா, ஸ்ரீலஸ்ரீசீனிவாச சுவாமிகள், சிறப்பு அதிகாரி சீத்தாராமன், செயல் அதிகாரி சதீஷ், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- ஜமீன்இளம் பள்ளி, அத்திக் காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
- அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம், பாசூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜமீன்இளம் பள்ளி, அத்திக் காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி தலை யில் அடிபட்டு படு காயம் அடைந்தார். இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி தண்ணீர் பந்தல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). கட்டிட மேஸ்திரி.
இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, நாமக்கலில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து குறித்து பல்லடம் போல் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
- பலத்த காயம் அடைந்த அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பிரிவில், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சாலையை கடப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது, பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போல் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.