என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sangabhishekam"
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தின் போது சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்று கார்த்திகை 3-வது சோமவாரத்தை முன்னிட்டு பழமையான பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை யொட்டி காலை 6 மணிக்கு, பால விநாயகர், வேதாம்பிகை, முருகர், சண்டிகேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜையும், காலை 10.30 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 1,008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிரவாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் செய்து இருந்தனர்.
- புனிதநீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
- வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்வர சுவாமி திருக்கோவில் மூர்த்தி தளம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம்.
வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்த வரலாற்று சிறப்பு பெற்ற இடம் இந்த கோவிலில் கார்த்திகை 2-வது சோம வார்த்தை முன்னிட்டு நேற்று மாலை புனித நீர் அடங்கிய கலசங்கள் மற்றும் 1008 சங்குகள் புனித நீரால் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் விளக்கு அழகு என்ற பெருமைக்கேற்ப சாமி சன்னதியில் உள்ள தோரண விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது பின்பு வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை உபயதாரர் மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.
- மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.
- அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்ட பத்தில் 108 வலம்புரி சங்கு கள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது. அதன் மை யத்தில் வலம்புரி சங்கு வைக்கப்ப ட்டு அனைத்து சங்குகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து வ ரப்பட்ட புனிதநீர் நிரப்ப ப்பட்டு பின்னர் அந்த சங்கு களில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்ம னுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு மாற்று ரைவரதீஸ்வரருக்கு சங்கா பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடை பெற்றது. பின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது.
- 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- 4, 11-ந் தேதிகளில் சோமவார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.
இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரமான நேற்று மாலை பெருவுடையாா் சன்னதி முன் 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, 1008 சங்குகளில் நிரப்பப்ப ட்ட புனித நீரால் பெருவு டையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல, பெரிய கோயிலில் வரும் 27-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11 ஆம் தேதிகளில் சோம வார சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.
- குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவார ஓடைக்கரையில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. அதன் 48-வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. கார்த்திக் பட்டர் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜை செய்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
- வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது
- சோம வாரத்தை முன்னிட்டு நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகத்துடன் மண்டல பூஜை நடந்தது.
- 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.
மண்டல பூஜை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்த பின்பு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சோனையா, கருப்பண சாமி, இருளன், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் அருணாச்சலம், குமார், தங்கராஜ், பாண்டி வேல், கல்யாணசுந்தரம், பாலு, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் செய்தி ருந்தனர். மண்டல பூஜை விழாவை சிவாச்சா ரியார்கள் மனோகர குருக்கள், மகேஷ் குருக்கள் நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்