search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SDPI"

    • அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
    • எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

    இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

    போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை.
    • நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

    மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பங்கேற்று பேசியதாவது:-

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த மேடைதான் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு எல்லா மதத்தலைவர்களும் இருக்கிறார்கள்.

    நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

    நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் வந்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையில் முதல்-அமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சிபெறும். ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சி பின்னுக்கு தள்ளப்படும்.

    நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜனதா.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இனி பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம். இதனை முதல்-அமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வையும், பா.ஜனதாவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

    நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை (ஓ.பன்னீர்செல்வம்) அ.தி.மு.க.வில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

    வரும் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு, நிறைய கட்சிகள் வர உள்ளன. எனவே நாங்கள் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார்.
    • கூட்டத்தில் வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கபீர் வரவேற்று பேசினார். இணைசெயலாளர்கள், ரபீக், ஆரிப் பைஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார். கூட்டத்தில் 27 வார்டு மக்களும் பயன்படுத்தும் சிவபுரம் பொது பாதையை அடைத்த வனத்துறைக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை மேற்கொள்வது, களக்காடு காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணை துரித படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி நிதி திரட்டல் சம்மந்தமாக கூடுதல் கவனம் செலுத்துவது, வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் செயற்குழு உறுப்பினர்கள் எம்.எம். நாசர், ராம்நாடு பீர்முகம்மது, முஹம்மதுஅலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

    • நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரிக்கை
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அபுதாஹீர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இணைச் செயலாளர் அப்துல் நசீர் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் யாசர்கான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஷேக் முகம்மது நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாடு நடந்தது.
    • மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை திடல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதி மாநாடு நடந்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும்,தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், அழிந்துவரும் விவசாயத் தொழிலை மீட்டெடுக்கவும், பனைத்தொழிலை பாதுகாக்கவும், தொழில்வளத்தை அதிகப்படுத்தக் கோரியும் இந்த மாநாடு நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்ஜமீல் வரவேற்றார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    • சிறப்பு அழைப்பாளராக களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார்.
    • கூட்டத்தில் பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இணை செயலாளர் முகம்மது ரபிக் வரவேற்று பேசினார். நகர துணை தலைவர் கபீர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு களிலும் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரக் கோரியும், புதிய பஸ் நிலையம் எதிரில் தனியார் விடுதி அமைந்துள்ள உப்பாறு 16 அடி பாதையை மீட்டு தரக் கோரியும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் வகை யில் வருகின்ற 22-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப் பட்டது.

    களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் இன்புளுயன்சா நோய் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப் பைஜி, முகம்மத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

    • பெட்ரோல் குண்டை குடோனில் வீசி சென்றனர்.
    • 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் ஆர்.எ ஸ்.எஸ். பிரமுகரான சச்சின் மற்றும் மதன்குமார் ஆகியோர் தனித்தனியாக பிளைவுட் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த கடைகளில் கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் கடையின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை குடோனில் வீசி சென்றனர்.

    இதில் பெட்ரோல் குண்டு வெடித்து அங்கிருந்த பிளைவுட்டுகள் எரிந்து கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்த நாசர்அகமது(வயது30), ஷேக்பரித்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தக்கலை:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், திருவிதாங்கோடு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அமைப்பின் மாநில நிர்வாகி செரீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வடகரை பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
    • ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையநல்லூர்:

    அச்சன்புதூர் அருகே வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வடகரை பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

    நகர தலைவரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான முத்து முகம்மது தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட துணைத்தலைவர் செய்யதுமஹ்மூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முகம்மது ஒலி வரவேற்று பேசினார்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் யாசர்கான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாவட்ட பேச்சாளர் பரக்கத் நிஷா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வார்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும், குற்றாலம் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வடகரை பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் செங்குளத்தை (புதுக்குளம்) தூர்வாரி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் அப்துல் பாசித் நன்றி கூறினார்.

    • தி.மு.க. அரசு மக்களை திணற வைக்கிறது.
    • கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிமினி விளக்கேந்தி திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா வரவேற்றார். தி.மு.க. அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக்கோரியும், மின்கட்டண உயர்வு முடிவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கோரிக்கை குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தொழிற்சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் சிமினி விளக்கேந்தி கலந்து கொண்டனர்.

    • வரலாற்று கண்காட்சி மற்றும் மக்கள் சங்கமம் பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது.
    • மாநில வர்த்தகர் அணி பொதுச் செயலாளர் ஜாபர்அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மக்களாட்சியை பாதுகாப்போம் தேசிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக வரலாற்று கண்காட்சி மற்றும் மக்கள் சங்கமம் பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி பொதுச் செயலாளர் ஜாபர்அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அப்துல் பாசித் மற்றும் ஹக்கீம் சேட், மாவட்ட மக்கள் தொடர்பாளர் செய்யதலி பாதுஷா, டிவிசன் தலைவர் அய்யூப் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேக் முஹம்மது ஒலி, நகர தலைவர் அபு தாஹிர், செயலாளர் சேக் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகர செயலாளர் நிஸார் நன்றி கூறினார்.

    • நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் 14- ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு மங்கலத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி நடைபெற்றது. மங்கலம் அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் இருசக்கர வாகன பேரணி ஆரம்பித்து அக்ரஹாரப்புத்தூர், மங்கலம் வழியாக பல்லடத்தில் முடிவடைந்தது. மேலும் ரம்யா கார்டன், அக்ரஹாரபுத்தூர், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.

    எஸ்.டி.பி.ஐ., கட்சியின் பல்லடம் தொகுதி பொருளாளர் நாசர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோவை மண்டலத் தலைவர் ராஜா உசேன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்தலைவர் ஹாரிஸ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது ரபிக், எஸ்.டி.டி.யு. தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், எஸ்.டி.டி.யு, மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், எஸ்.டி.டி.யு. துணைத் தலைவர் நாகூர் மீரான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபாத், பல்லடம் தொகுதி துணை தலைவர் அபுதாஹீர் மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×