என் மலர்
நீங்கள் தேடியது "sea"
- கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.
- வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் ஜார்ஜியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ரஸ்டன் (வயது 50) மீனவர். இவருக்கு சொந்தமான வள்ளத்தில் இவரும், மற்ற 5 பேரும் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து நெத்திலி மற்றும் சாளை போன்ற மீன்களை பிடித்து விட்டு இன்று காலை 7.30 மணிக்கு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.
இதில் வள்ளத்தில் இருந்து 6 மீனவர்களும் கடலில் தவறி விழுந்தனர். அவர்கள் 6 பேரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கரையில் மீன் இறக்கி கொண்டிருந்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி சென்றனர். பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அந்த 6 மீனவர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
அதன்பிறகு கடலில் கவிழ்ந்து கிடந்த அந்த வள்ளத்தையும் அவர்கள் மீட்டனர். அதன் பிறகு அந்த 6 மீனவர்களையும் அந்த வள்ளத்தில் ஏற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.
இதேபோல கடந்த வாரம் கோவளத்தில் நடுக்கடலில் ஒரு வள்ளம் கவிழ்ந்து 5 மீனவர்கள் உயிருக்கு போராடியபடி தத்தளித்ததும் அவர்களை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மற்ற மீனவர்கள் உயிருடன் மீட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்போது கோவளத்தில் 2-வது முறையாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது.
- அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.
விளாத்திகுளம்:
மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பவுர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர்.
குலதெய்வத்தை தரிசனம் செய்து விட்டு இன்று காலை 6 மணி அளவில் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு குளிப்ப தற்காக 20 பேர் சென்றுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களாக இருந்தனர்.
நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் 20 பேரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அதிகமான காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் கடலில் குளித்த மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா (வயது 21), கன்னியம்மாள் (50), முருக லட்சுமி (38), ஸ்வேதா (22), அனிதா (29) ஆகிய 5 பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் போலீசார் அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பவுர்ணமியை முன்னிட்டு குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக வந்த பெண்கள் குளிக்கும்போது கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை போதிய மழை இல்லாத நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே இலங்கை அருகே கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த தகவல் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள ஆலய ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், தோமையர்புரம் பகுதியில் கட்டுமரத்தில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்பதால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்று 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 300 விசைப் படகுகள் மீன்பிடி துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதே போல கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை, கொம்புத்துறை, புன்னக்காயல் பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- 15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
- கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர்.
கடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஆபத்து நிறைந்தது. பலரும் அதை உணருவதில்லை.
சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றமாக இருந்தது. யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று விளையாடியதை பார்த்தோம். சீற்றம் அதிகமுள்ள நேரத்தில் மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் முன்னெச்சரிக்கை இன்றி கடற்கரை பகுதிக்கு செல்வது ஆபத்துதான்.
இதை உணராமல், கடற்கரை பகுதிக்கு சென்ற நடிகை ஒருவர் அலையில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரஷிய நாட்டின் பிரபல நடிகை கெமில்லா பெல்யாஸ்டாக்யா. 24 வயதான அவர் தனது காதலனுடன், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தலமான கோசியா மியூய் தீவிற்கு சென்றார்.
யோகா ஆர்வலரான கெமில்லா, கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து கண்களை மூடியபடி யோகா செய்தார். அப்போது கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை கரைக்கு வந்து யோகா செய்து கொண்டு இருந்த நடிகை கெமில்லாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலைல் சிக்கிய அவர், கடலுக்குள் உயிருக்கு போராடினார்.
நீண்ட நேரம் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த அவரை மீட்க யாரும் இல்லாததால், கடலில் மூழ்கினார்.
15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு, வேறு பகுதியில் கெமில்லாவின் உடல் கரை ஒதுங்கியது.
நடிகை கெமில்லா பாறையில் அமர்ந்து யோகா செய்வதும், அவரை கடல் அலை இழுத்து செல்வதும், கடலில் அவர் தத்தளிப்பதும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது.
- பச்சை நிறமாக காட்சியளித்த கடல் நீரை கண்ட மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக கடற்கரை பகுதிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவுக்கு சென்றனர். அப்போது அந்த பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சி அளித்துள்ளது. அதே நேரத்தில் அலையின் வேகமும் அதிகமாக இருந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.
தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது, கடலில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்களாலோ அல்லது பாசியாலோ இதுபோன்று ஏற்படலாம் என்று கூறினர்.
- மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.
- போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 58). மீனவரான இவர், கட்டுமரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அங்கு அவர் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல் கரை ஒதுங்கியது அதன் பேரில் போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை கொட்டாய்மேடு கடற்கரையில் சண்முகம் உடல் கரை ஒதுங்கியது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழக்கரை கடற்பகுதியில் ரேடார் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும்.
கீழக்கரை
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் 'யுவான் வாங் 5' ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி மூலமும், மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் இந்திய கடல் எல்லை வரையிலும் வரும் படகுகள், ஹெலிகாப்டர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கீழக்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. கீழக்கரை கடற்கரையோரம் உள்ள கலங்கரை விளக்கத்தில் நவீன கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும். இங்கிருந்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர்.
- சேதுக்கரை கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
- இதே போல் தேவிபட்டினம் நவபாசானத்திற்கும் ஏராளமான பக்தர்கள் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம்
தமிழ் மாதங்களில் அனைத்து மாதங்களிலும் அமாவாசை வந்த நிலையிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தை, ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை புனிதமாக கருதுகின்றனர். இதன் காரணமாக இந்த அமாவாசை நாட்களில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். அன்றைய தினம் பிதுர்பூஜை செய்வ தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர், மூக்கையூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.
ஆடி அமாவாசையான இன்று திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர்.
இதனால் கடலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புனித நீராடிய பின் பக்தர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் சாமி கோயிலில் வழிபட்டனர்.
பின்னர் 108 வைணவ தலங்களில் 44-வது திவ்யதேசமாக உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் சாமி கோவிலில் தை அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.
இதனால் சேதுக்கரை தரிசனத்தை முடித்து வந்த பக்தர்கள் ஆதிஜெகநாத பெருமாள் சாமி கோவிலில்; நீண்ட வரிசையில் காத்திருந்து மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட பாயாசத்தை பய பக்தியுடன் வாங்கி குடித்து சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தேவிபட்டினம் நவபாசானத்திற்கும் ஏராளமான பக்தர்கள் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி அருகே வீரசங்கிலி மடம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் கடலில் புனித நீராடினர்.
இதேபோல் ஆர்.எஸ்.மங்களம், தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து வந்து தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் பகுதியில் உள்ள கடலிலும் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
- 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப வேண்டும். எஞ்சிய தண்ணீரை மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.
- மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லை.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாக மணப்பாடு கடலுக்கு மட்டும் அனுப்ப வேண்டும்.
வருடந்தோறும் ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலுக்கு நேரடியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவை முன்கூட்டியே கணக்கிட்டு அதை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்பே உள்ள
மருதூர்மேலக்கால் அணைக்கட்டு மூலம் உபரிநீரை தெற்கே திருப்பிஉடன்குடியைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறி படுகைகுளம், சடையனேரி குளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம்,
குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப வேண்டும். எஞ்சிய தண்ணீரை தாங்கைக்குளம் வழியாக கருமேனிஆற்றில் விட்டு மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.
மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் உடன்குடி சுற்று வட்டார பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லை.
புன்னக்காயல் கடலுக்கு நேர்வழியில் போவதை மாற்றிட முடியும்.
உடன்குடியைச் சுற்றி மணப்பாடு கடலுக்கு அனுப்பினாலே போதும் ஆனால் அதற்கு முறை யான திட்டமிடலும் செய லாக்கமும் தன் ஊக்கமும் தான் இப்போது அவசியம். ஏனெனில் உடன்குடியில் பாசன குளங்கள் எதுவுமில்லை.
அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான்.பம்புசெட் மூலமேவிவசாயம் நடைபெறுவதால் அவை உறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் கொடுத்தாலே போதும்.
எனவே மழையை மட்டுமே எதிர்பார்த்திருக்க அவசியம் இல்லை, 15 நீர் பிடிப்பு குளங்களையும் காப்பாற்ற கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி விட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய அமைச்சகம் மீன்வளத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த நாட்களில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் 61 விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ல் தொடங்கியது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்று ம்இழுவை ப்படகுகள்கடற்கரை பகுதிகளில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதியுடன் முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட த்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகு களை பழுது நீக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்வது, படகுமுழுவதும் வர்ணம் பூசுவது, புதிய வலைகளை நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல்போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படகுகளின் இயக்கம் சீராக உள்ளதா? என துறைமுக பகுதிகளில்வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர்.
மீன்பிடி துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்தல், படகு முழுவதும் வர்ணம் பூசுதல், புதிய வலைகள் நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சீரமைத்த படகுகள் நன்றாக இயங்குகிறதா? என்று துறைமுகம் பகுதியில் வெள்ளோட்டமும் பார்த்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் அடுத்த 12 நேரத்திற்குள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மகாபலிபுரம் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரையிலான மீனவ கிராமங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தம் உருவாகுவதை அடுத்து பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இது பற்றி திருவான்மீயூரை சேர்ந்த மீனவர் பாஸ்கர் கூறியதாவது:-
வழக்கமாக கடல் அலைகள் 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு வீசும். ஆனால் இன்று பல இடங்களில் அலைகள் ஆக்ரோஷமாக எழுகின்றன. அதாவது 3 முதல் 7 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன. அதாவது 20 அடிக்கு மேல் அலைகள் எழுந்தன. இதனால் யாரும் கடலுக்குள் செல்லவில்லை என்றார்.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்குள் படகுகள் அடித்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக கட்டி வைத்துள்ளனர். கட்டு மரங்களை இழுத்து வந்து கரையில் வெகு தூரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அலைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.