என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sexual assault"
- வார்தா நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
- இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களின் சம்மதத்துடன் கணவன் ஈடுபடும் பாலியல் உறவும் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018 திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியின் சம்மதத்துடன் பல முறை பாலியல் உறவு வைத்து கொண்ட நபர் வீட்டில் வைத்து மாலை மாற்றி திருமணம் முடித்ததாக அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். கர்ப்பமான அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதைக் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் மீது வழிக்குத் தொடர்ந்தார்.
இதன்படி அவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கின் கீழ் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வார்தா மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி கோவிந்த் சனாப் முன் கடந்த நவம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் வக்கீல் பெண் சம்மதித்தே இருவருக்கும் உறவு இருந்ததாக வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி கோவிந்த், பெண்ணின் சம்மதமோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி இருப்பதாலும் நடந்தது பலாத்காரம் அல்ல என்றாகிவிடாது.
அவர்கள் இடையில் நடந்தது திருமணம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு வைப்பது வன்கொடுமை என்றே கருதப்படும் என்று 10 வருட சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
- மர்ம கும்பல், வீட்டுக்கு தீ வைத்து தப்பி செல்லும் வீடியோவும் இணையத்தில் பரவியது.
- வலது தொடையின் மேல்பகுதி வழியாக 2 cm x 1 cm அளவில் திறந்து முடிகிறது.
மணிப்பூர் கலவரம்
ஒரு வருட காலமாக கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் சமீப நாட்களாகத் தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்படுவது, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள் என சுமார் 240 பேர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் குக்கி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் முதல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் -இல் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
வன்முறைச் சம்பவங்கள்
அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நுழைந்து வீடுகளுக்குத் தீ வைப்பது, கிராமத்தினரைச் சித்திரவதை செய்து கொல்வது என வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பாதுகாப்புப் படை திணறி வருவதால் கூடுதலாக 2000 மத்திய ஆயுதக் காவல் படையினரை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 11 கிளர்ச்சியாளர்களைப் பாதுகாப்பு [படை கொன்றுள்ளது.
கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் இரண்டு முதியவர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். முன்னதாக ஜிர்பாமில் பகுதியில் குகி-ஜோ சமூகத்துடன் தொடர்புடைய மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் புகுந்து அங்கிருந்த வீடுகளை தீ வைத்து எரித்தனர்.
ஆசிரியை
இந்த வன்முறைக்குப் பின்னர் அன்றைய இரவு மார் சமூக பெண்ணான ஜொசாங்கிம் (வயது 31) என்பவரின் உடல் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டது. டியூ ஆங்கில ஜூனியர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
வீட்டுக்குள் ஆயுதங்களுடன் வந்த மெய்தி கிளர்ச்சிக்குழுவை சேர்ந்த சிலர் தன்னுடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து நள்ளிரவு 9 மணியளவில் உயிருடன் தீ வைத்து கொளுத்தி விட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்ததாக ஆசிரியையின் கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
பயங்கரவாத குழுவை சேர்ந்த சிலர், அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து, நேற்றிரவு 9 மணியளவில் உயிருடன் தீ வைத்து கொளுத்தி விட்டனர். அவர்களுடைய வீட்டில் வைத்து நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்னர், அந்த குழுவினர், வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து விட்டு, தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது என எப்.ஐ.ஆரில் தெரிவித்து உள்ளார். மர்ம கும்பல், வீட்டுக்கு தீ வைத்து தப்பி செல்லும் வீடியோவும் இணையத்தில் பரவியது.
7th Nov. 2024, #Manipur #JiribamReports coming in that Arambai Tenggol and other #Meitei Terrorists have once again attacked and burnt several Hmar Kuki-Zo houses. One Hmar lady named Sangkim w/o Ngurthansang reportedly shot & injured.The 2 years of Manipur Normalcy! pic.twitter.com/yqHec1K2VS
— Adv. Siam Phaipi (@SiamPhaipi) November 8, 2024
இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியையின் பிரேத பரிசோதனை அறிக்கையின்மூலம் உறைய வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அவரின் உடல் அசாமில் உள்ள சில்சார் [Silchar] மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம்
அதன்படி ஆசிரியையும் உடலில் 99 சதவீதம் தீக்காயங்கள் இருந்தன. எலும்பு பகுதிகள் எரிந்தும்,உடைந்தும், முகத்தின் ஒரு பகுதியும் சில பகுதிகள் தொலைந்தும் உள்ளது. கையின் மேல் வலது மூட்டு மற்றும் கீழ் மூட்டு காணாமல் போயுள்ளது. அவரது மண்டை ஓடு கடுமையாக எரிந்தும் உடைந்து நொறுங்கி தனியாக பிரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.
கழுத்து திசுக்கள் கருகியுள்ளன. அவர் சித்திரவதை செய்யப்பட்டதற்கு சாட்சியாக வலது தொடையின் பின்புறத்தில் 1 cm x 0.75 cm அளவில் தொடங்கும் துளைவலது தொடையின் மேல்பகுதி வழியாக 2 cm x 1 cm அளவில் திறந்து முடிகிறது.
இடது தொடையில் இறக்கப்பட்ட 5 cm நீளமான இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் டிகிரி தீ காயங்கள் அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல் எரிந்தும் சில பாகங்கள் தொலைந்தும் உள்ளதால் ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை
- பயாலஜி ஆசிரியர் மற்றும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மாணவியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார்.
12 வகுப்பு முடித்த மாணவர்கள் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வை கடந்த 2016 ஆம் தேதி மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதன்படி டாக்டர் கனவோடு பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களைப் பெற்றோர் தனியார் கோச்சிங் சென்டர்கள் வசம் ஒப்படைத்தனர்.
இதனால் நாடு முழுவதும் கோச்சிங் சென்டர்கள் பல்கிப் பெறுகிறன. தனியார் கோச்சிங் சென்டர்களில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகள் தற்கொலை என அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மருத்துவ கனவவோடு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த மாணவி அங்குள்ள ஆசிரியர்களால் 6 மாத காலமாக பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கான்பூர் நகரில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். 2022 இல் சிறுமிக்கு 17 வயது இருக்கும்போது இந்த கொடூரம் நடந்துள்ள நிலையில் தற்போது அவர் முன்வைத்து புகார் அளித்ததால் கோச்சிங் சென்டர் குட்டு வெளிப்பட்டுள்ளது.
உயிரியல் [பயாலஜி] ஆசிரியர் சாஹில் சித்திக் (வயது 32), வேதியியல் [கெமிஸ்ட்ரி] ஆசிரியர் விகாஸ் பொர்வால் (வயது 39) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேருக்கு எதிராக பாலியல் பலாத்காரம், முறைகேடாக வீட்டில் அடைத்து வைத்தல், குற்ற உள்நோக்கம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு டிசம்பரில் நியூ இயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கல்யாண்பூரில், மக்தி-கேரா பகுதியில் உள்ள நண்பரின் அபார்ட்மென்டுக்கு வரும்படி சித்திக் அந்த மாணவியை அழைத்துள்ளார். மற்ற மாணவிகளும் வருவார்கள் என கூறியுள்ளார்.
விடுதியில் தங்கி படித்த அந்த மாணவி அபார்ட்மென்டுக்கு சென்றபோது, சித்திக் தவிர யாருமில்லை. இதன்பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதன்பின்னர், மாணவியை பலாத்காரம் செய்து, சித்திக் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.
தொடர்ந்து 6 மாதங்களாக அபார்ட்மென்ட்டில் சிறை வைத்து, மாணவியிடம் சித்திக் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வேறு யாரிடமும் கூறினால் வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார். சில மாதங்களில், ஆசிரியர் பொர்வாலும் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பற்றி போலீசிடம் கூறினால், அது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என மாணவி பயந்து இருக்கிறார். 6 மாதங்களுக்கு பின்னர், கான்பூருக்கு வந்து மகளை அவருடைய தாய் அழைத்து சென்றிருக்கிறார்.
தொடக்கத்தில் போலீசுக்கு போக தயக்கம் காட்டிய அந்த மாணவி, இதன்பின்பு, வேறொரு பயிற்சி மாணவியை, சித்திக் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலாகியது. இதனை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டார். இந்த வழக்கில், ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்தே மாணவி போலீசில் புகார் அளிக்க துணிந்துள்ளார்.
இதன்பின்னர், கல்யாண்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த எப்.ஐ.ஆர் ஒன்று பதிவாகி உள்ளது. இதுபோன்று வேறு மாணவிகளிடமும் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா? என்பது பற்றியும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.
- 120 நாட்களில் 110 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
- பெண்கள் பாதுகாப்பில் அரசு தோல்வி அடைந்துவிட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உள்துறை மந்திரி அனிதா சரியாக செயல்படவில்லை என பவன் கல்யாண் கூறியதன் காரணம் என்ன?
குற்றவாளிகளை தண்டிப்பதில் யோகி ஆதித்யநாத் போல செயல்படுங்கள் என அவர் கூறியுள்ளார். திருப்பதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மறைக்க அரசு அழுத்தம் கொடுக்கிறது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர்.
மாநிலத்தில் எத்தனையோ கொடுமைகள் நடக்கும் போது சந்திரபாபு நாயுடுவின் மகன் மந்திரி லோகேஷ் வெளிநாட்டில் சுற்றி திரிகிறார்.
கல்லூரிகளில் பெண்கள் தாக்கப்படும் போது கல்வி அமைச்சர் என்ன செய்கிறார். ஆந்திராவில் 120 நாட்களில் 110 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகள் நடக்கும் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், மந்திரி அனிதா என்ன செய்கிறார்கள்.
இந்துபுரத்தில் மாமியார் மருமகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போது அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. நடிகர் பாலகிருஷ்ணா படப்பிடிப்பில் பங்கேற்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை. பெண்கள் பாதுகாப்பில் அரசு தோல்வி அடைந்துவிட்டது.
சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். ஆந்திராவில் நடக்கும் கொடுமைகளை பார்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருந்த அவர்களை குடிபோதையில் அங்கு வந்த எட்டுப்பேர் சூழ்ந்துள்ளனர்.
- அதை வீடியோ எடுத்த அவர்கள், வெளியே சொன்னால் ஆன்லைனில் பதிவிடுவோம் என்று மிரட்டினர்
சுற்றுலா சென்ற இடத்தில் கணவன் மரத்தில் கட்டப்பட்ட அவரின் கண் முன்னேயே இளம்பெண் 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ரேவா மாவட்டம் குர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பைரவ் பாபா கோவிலுக்குச் சென்றுள்ளனர். இருவருக்கும் 19 வயதுதான் இருக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருந்த அவர்களை குடிபோதையில் அங்கு வந்த எட்டுப்பேர் சூழ்ந்துள்ளனர். பெண்ணின் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரது கண் முன்னேயே 8 பேரும் அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அதை வீடியோ எடுத்த அவர்கள், நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்குப்பதிந்த போலீசார் அந்த 8 போரையும் அடையாளம் கண்டுள்ளனர்.
ராம்கிஷான் கோரி, தீபக் கோரி, ராவிஷ் குப்தா, சுசில் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, லவ்குஷ் கோரி, ராஜ்நிஷ் கோரி ஆகிய 8 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் 19 முதல் 21 வயது தான் இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர்களில் 7 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. தப்பியோடிய ராஜ்நிஷ் கோரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.
- கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன
குழந்தை திருமணம் தடைச்சட்டத்தை எந்த ஒரு தனி நபர் சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.
குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 (பிசிஎம்ஏ) காரணமாகக் குழந்தைத் திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.
எனவே குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று [வெள்ளிக்கிழமை] விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று கூறினர்.
மேலும் குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கென காவல் துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளை நியமிப்பது உள்பட வழிகாட்டுதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
- வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர்.
- இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்
பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.
நேற்று [திங்கள்கிழமை] அதிகாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சின்ஹாட் சாலையில் மோசமான நிலையில் கிடந்துள்ளார். லாலுளாய் [Laulaai] கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி கிராமத்தில் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து உடல் உபாதையை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர். அப்போதே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த அவர் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
வீட்டை விட்டு அதிகாலை வெளியே வந்த சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அவளின் கை கால்களைக் கட்டி சாலையில் வீசிச் சென்றுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. லோஹியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
- வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டார்
- சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்
பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதால் அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஒருவன் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசிச் சென்றுள்ளான். சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்திய பின்னர் குற்றவாளி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரையும் போலீஸ் கைது செய்துள்ளது.
- ரத்தம் தோய்த்த உடைகளுடன் கிடந்த அவரை அவ்வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார்
- பட்டதாரியான அந்த பெண் ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதும் ஒரு வருடம் முன் டெல்லிக்கு வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லியின் சாராய் காலே கான் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவற்ற நிலையில் 34 வயது பெண் ஒருவர் சாலையில் கிடந்துள்ளார். ரத்தம் தோய்த்த உடைகளுடன் மோசமான நிலையிலிருந்த அவரை அவ்வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து போலீசுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்ததில் பட்டதாரியான அந்த பெண் ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதும் ஒரு வருடம் முன் டெல்லிக்கு வந்த அவர் தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தார் என்றும் தெரியவந்தது.
சிறிய பிரச்சனை காரணமாகத் தோழி தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதால் போக இடமின்றி தெருவில் இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட சிலர் இவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாராய் காலே சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்
- இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் 21 வயது இளம்பெண் 3 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈவென்ட் மேனேஜ்மேண்ட் படித்துவந்த 21 வயது பெண்ணையும் அவரது ஆண் நண்பனையும் அன்றைய தினம் போப்தேவ் காட் பகுதியில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்தது.
ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு மூவரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்தநாள் [நேற்று] காலை 5 மணியளவில் அப்பெண் போலீசிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றாவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மூவரில் இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் அவர்களை பார்த்தால் தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
- கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம்.
மனைவியை கணவன் பலவந்தத்தின்மூலம் பாலியல் வன்புணர்வு [Marital rape] செய்வதை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மனைவியின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கணவன் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் பலாத்காரமாக கருத வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கபட்டன.
இதனால் இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், மனைவியின் அனுமதியை மீற செயல்பட கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும் அதை பாலியல் பலாத்காரமாக வரையறுப்பது மிகவும் கடுமையானது. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இதை அனுமதித்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம். எனவே கணவன் மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் பலாத்காரமாக அறுதியிட்டு தண்டனை வழங்குவது சமூக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீம் மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பு கோரி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.
அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளூர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானா தேர்தல் நடக்க உள்ள நிலையில் ராம் ரஹீமின் பரோல் நீட்டிப்பு கோரிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.
ராம் ரஹீமின் தற்போதைய பரோல் நீட்டிப்பு கோரிக்கை மனுவை ஹரியானா அரசு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராம் ரஹீமிற்கு அரசியல் உள்நோக்கத்துடன் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதன் பின்னணியில் பாஜக உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் கடும் நிபந்தனைகளுடனேயே பரோல் வழங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவரின் 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தனது தண்டனைக்கிடையில் 255 நாட்கள் பரோல் விடுப்பில் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார் சாமியார் ராம் ரஹீம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்