என் மலர்
நீங்கள் தேடியது "slug 100148"
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 7-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், ஜவுளி வியாபாரி. இவரது மகன் (வயது 15) வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியிலுள்ள தனியார் வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குழந்தைகள் தினமான கடந்த 14-ந்தேதி இவரது வகுப்பில் படித்துவரும் மற்றொரு மாணவருடைய கைக்கடிகாரம் மாயமானது.இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் தனி அறையில் வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது மாணவர் தான் அந்த கடிகாரத்தை எடுக்கவில்லை என ஆசிரியர் வெங்கடேஷிடம் பலமுறை கூறினார். ஆனால் மாணவர் கூறியதை நம்பாமல் ஆசிரியர் வெங்கடேஷ் பைப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. வீடு திரும்பியதும் வலியால் துடித்த மகனை கண்டதும் உடனே பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி, தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அதற்கு அனுமதித்த வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி, காயம் அடைந்த மகன் புகைப்படங்களுடன், அவரது தந்தை பிரபாகரன் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினார்.
இந்த தகவல் இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்தே மாணவரின் பெற்றோரை அழைத்து பேசிய பள்ளி நிர்வாகம், மாணவரை தாக்கிய ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சின்னு என்கிற முத்துச்சாமி கூறியதாவது:-
உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தது குறித்து தகவல் தெரியவந்ததும், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்துவிட்டோம். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் கோட்டார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் நாகராஜன் (வயது 30) அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் நாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.
கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை மகளிர் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வுகளை நடத்துவதன் மூலம் அரசு புதிய கல்விப் புரட்சி படைக்கிறது.
மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளாவது மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தால் தான் தரம் உயர்த்தப்பட்டது அர்த்தமுள்ளதாக அமையும்.
ஆனால், அரசு உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அறிவித்துவிட்டு, அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது தான் அவர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். அவ்வாறு 2016-17-ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 809 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அங்கு கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கணினி அறிவியல் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் அப்பாடத்தின் தேர்வை எழுதும் மாணவனால் எதை சாதிக்க முடியும்? அம்மாணவன் எவ்வாறு தேர்ச்சி பெற்று உயர்கல்விக் கற்கச் செல்வான்? ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவை கல்வி ஆகும்.
அதனால், மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கும் அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால், கல்வி குறித்தோ, மாநிலத்தின் வளர்ச்சி குறித்தோ எந்த தொலைநோக்குப் பார்வையும் பினாமி அரசுக்கு இல்லாததால் தான் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படாமல் கல்வித்துறை சீரழிகிறது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 748 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த போதிலும், அது இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார். #AnbuManiRamadoss
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்துள்ளது ஆவாரம்பட்டி. அங்குள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த கமலா (வயது 31, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கமலா வீட்டின் குளியல் அறை ஜன்னலின் வெண்டி லேசன் வெளிப்புறமாக உள்ளது போல் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலா குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது வெண்டிலேசன் ஜன்னல் கண்ணாடியில் ஒரு கை தெரிந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, வெளியே நின்ற மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்தநிலையில் மர்ம நபரை பிடிப்பதற்காக கமலா வெளியே வந்து பார்த்த போது, ஒரு துண்டுச் சீட்டு கிடந்தது. அதில் ஆசிரியை கமலாவின் உடலை வர்ணித்தும், உடலில் எந்தெந்த இடங்களில் மச்சம் உள்ளது என்பதை குறிப்பிட்டும் இருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்தும் எழுதப்பட்டிருந்தது.
இதனால் மிரண்டு போன ஆசிரியை, அவரது கணவரிடம் தெரிவிக்கவே, வையம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆசிரியை வீட்டின் அருகே வசித்து வந்த மாணவன் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அந்த மாணவனின் நோட்டில் உள்ள கையெழுத்தையும், கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கையெழுத்தையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மாணவர் வின்சென்ட் (16) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆசிரியை குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் வின்சென்ட் மட்டுமின்றி அவரது சகோதரர் ஜான்சன் (17) மற்றும் அவர்களது நண்பர் ராஜா (16) (மாணவர்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்து ரசித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மாணவர்கள் உள்பட 3 பேர் மீதும் 294 பி (ஆபாசமாக பேசுதல்), 354, 507, 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
மேலும் 3 மாணவர்களிடம் இருந்த செல்போன்களையும், ஆசிரியை சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஜான்சன் அங்குள்ள பள்ளியில் 12-ம்வகுப்பும், வின்சென்ட் 11-ம்வகுப்பும் படித்து வந்தனர். ராஜா வேலை பார்த்து வந்துள்ளான். ஆசிரியை குளிப்பதை மாணவர்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trichy #SchoolTeacher
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி. தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் (வயது 42). இவர், இடையநேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.
இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேனிக்கு கடந்த 4-ந் தேதி சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
நேற்று இரவு ராஜ்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது பீரோ திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.
வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்குள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது. எனவே வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம மனிதர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.1,700 கொள்ளை போயிருப்பதாக ராஜ்குமார் தெரிவித்தார். வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளுக்கான அவரது அறிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்த முரசொலி நாளிதழ், ரஜினியின் ரசிகரின் கேள்விகள் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.
இது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடுமையாக சாடியதாக பலராலும் பேசப்பட்டதோடு, விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், முரசொலியின் தலைமை ஆசிரியர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajini #Murasoli #RajiniPolitics
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் துபாயிலுள்ள கல்வி நிறுவனத்திற்கு ஆங்கில வழியில் படித்து சி.பி.எஸ்.இ. பள்ளியில் பணி அனுபவம் பெற்ற பிரின்சிபால், சீனியர், ஜுனியர் பள்ளி மேற்பார்வையாளர், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், பெண் இஸ்லாமிய ஆசிரியர் தேவைப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி மற்றும் விவரங்கள் நிறுவன வலைதளத்தில் WWW.omc-manpower.com அறிந்து கொள்ளலாம்.
பிரின்சிபால் மாத ஊதியம் ரூ.3 லட்சம், சீனியர், ஜுனியர் பள்ளி மேற்பார்வையாளர் மாத ஊதியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், பெண் இஸ்லாமிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பமிருப்பின், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 2 புகைப்படத்துடன் omcre-sum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். #tamilnews
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது பழைய தருமபுரியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் குமார் (வயது 29) என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். மாணவியிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்து அவருக்கு தெரியாமலேயே சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதே போல் பல மாணவிகளிடம் பேசி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் புகார் கூறி உள்ளனர். அவர்களும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போதே குமாரை வேலையை விட்டு பள்ளி நிர்வாகம் துரத்தி உள்ளது.
பின்னர் மாணவியும் அந்த பள்ளியில் இருந்து விலகி தற்போது காரிமங்கலம் அருகேயுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்த நிலையிலும் குமார் விடாமல் வாட்ஸ் அப் செய்திகளில் மாணவியின் படத்தை போட்டு மோசமாக சித்தரித்து செய்திகள் அனுப்பி உள்ளார். அத்துடன் மாணவியின் தந்தைக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்து மாணவியை பற்றி தரக்குறைவாக பேசி திட்டியும் வந்து உள்ளார்.
பின்னர் மாணவியின் தந்தை மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு உள்ளார். அதனால் தலைமை ஆசிரியர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முற்பட்டு உள்ளார்.
இதை அறிந்த குமாரின் உறவினர்கள் அவரை அணுகி ஒரு முறை மன்னித்து விடுமாறும், இது போல் மீண்டும் நடக்காது என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். அதனால் தலைமை ஆசிரியர் புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்,
தனது பெயர் காவல் நிலையம் வரை போய் விட்டதால் மிகவும் ஆத்திரம் அடைந்த குமார், சிம் கார்டுகள் விற்கும் தனது நண்பன் பாலக்கோடு, சோமனஅள்ளி பகுதியை சேர்ந்த காவேரி மகன் கோவிந்தசாமி என்பவரின் துணையோடு வெவ்வேறு சிம் கார்டுகள் மூலம் மாணவியின் தந்தையை அழைத்து அசிங்கமாகவும், ஆபாசமாகவும் மாணவியை பற்றி தொடர்ச்சியாக பேசி உள்ளனர்.
பின்னர் முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை அப்லோடு செய்து ’கால் கேர்ள்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று தலைமை ஆசிரியரின் எண்ணையே பதிவேற்றி உள்ளார்.
இதன் பிறகு தலைமை ஆசிரியருக்கு ஏராளமான தொலை பேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் தலைமை ஆசிரியர் காரிமங்கலம் சப்-இன்ஸ் பெக்டர் இளவரசனிடம் புகார் செய்தார்.
பின்னர் போலீசார் மாணவியின் தந்தைக்கும், தலைமை ஆசிரியருக்கும் வந்த அழைப்புகளின் சிக்னல் டவர் உள்ள இடங்களை கண்டு பிடித்து சென்ற போது குமாரும் அவர் நண்பர் கோவிந்தசாமியும் பிடிபட்டனர்.
குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரது நண்பர் கோவிந்தசாமி மீது இந்திய தொலைத்தொடர்பு தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைதான 2 பேரும் தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகள் பிரியா (வயது 17). இவர் அரியலூரில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரியில் படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் ராணி (வயது 16). இவர் அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
பிரியாவும், ராணியும் தோழிகள் ஆவர். 2 பேரும் சேர்ந்த பஸ் மூலம் அரியலூருக்கு சென்று படித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி பிரியாவும், ராணியும் கல்லூரி-பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்க்கு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அரியலூர் மாவட்டம் தா.பழுர் அடுத்த அணைகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் தேடியும் கிருஷ்ணவேணி கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழுர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
அந்த கிராமத்துக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வரும் ஒப்பந்த ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் சிறுமியை கற்பழித்துள்ளார். இந்த பலாத்கார சம்பவத்தில் சிறுமியின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு தூக்குத்தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி தினேஷ்குமார் சர்மா தீர்ப்பு அளித்து உள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்குத்தண்டனை தீர்ப்பு இதுவாகும். #GirlMolestedCase
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ககான் பள்ளத்தாக்கு பகுதியில் கிவாய் என்று ஒரு கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று காலை பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, ஆசிரியர் சபீர் அகமது என்பவரும், 3 மாணவர்களும் சேர்ந்து கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றினர்.
அப்போது கொடிக்கம்பத்துக்கு மேலே இருந்த மின்கம்பி, கொடிக்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், மாணவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அந்த மாணவர்கள் 4-வது கிரேடு, 5-வது கிரேடு மற்றும் 8-வது கிரேடு படித்து வந்தவர்கள் ஆவர்.மற்றொரு ஆசிரியரும், பள்ளி காவலாளி ஒருவரும் இந்த சம்பவத்தின்போது படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு காரணங்களையொட்டி பள்ளிக்கூடத்தை மூடினர்.
பள்ளிக்கூடத்தில் தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், 3 மாணவர்களும் உயிரிழந்தது, அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. #PakistaniSchool #Electrocuted
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை சாலையில் உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சஞ்சீவி (70). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சஞ்சீவி கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்தனர்.
உடனே திடுக்கிட்டு எழுந்த சஞ்சீவி கூச்ச லிட முயன்றார். ஆனால் உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார். #tamilnews